என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "restobars"

    • கலால்துறை அதிரடி
    • மது அருந்தி விட்டு சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்வது தொடர்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளது.

    இவை நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவில் மது அருந்தி விட்டு சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்வது தொடர்கிறது.

    இதுபோன்ற சம்பவத்தில் என்ஜினீயர் ஒருவர் இறந்தார். இதையடுத்து ரெஸ்டோ பார்களை கண்காணிக்கவும், நள்ளிரவில் ரோந்து சுற்றவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தர வின்படி ரெஸ்டோ பார்கள், பப்புகள், குறிப்பிட்ட நேரத்தில் மூடப்படுகிறதா? என கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கலால் ஆய்வாளர் ஜோதிவெங்கடேஸ்வர ராவ் மற்றும் போலீசார் நள்ளிரவு ரெஸ்டோ பார்களில் திடீர் சோதனை நடத்தினர்.

    லாஸ்பேட்டை வாட்டர் டேங்க் அருகில் உள்ள பாரில் நடந்த சோத னையின் போது 12 மணிக்கு பார் மூடப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. சவுண்ட் ப்ரூப் கதவுகள் உள்ளதா? என அதிகாரிகள் சோதனையிட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு முன்பாகவே பார்களை மூட வேண்டும் என பார் மேலாளரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    ×