என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.75 லட்சம் நலத்திட்ட உதவி
    X

    நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கிய காட்சி.

    மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.75 லட்சம் நலத்திட்ட உதவி

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
    • அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சத்யசாய் திருமண மண்டபத்தில் நடந்தது.

    புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடந்த விழாவுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார்.

    9 பஞ்சாயத்து அளவி லான மகளிர் கூட்டமைப்பு சுய உதவிக்குழு உறுப்பி னர்களுக்கு சமுதாய முதலீட்டு கடன், நலிவுற் றோர் நிதிக்கடன், வங்கி கடன், விவசாய கருவிகள் என சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான நலத்திட் டங்களை வழங்கினார்.

    அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×