என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
விலங்குகள் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தாவிட்டால் போராட்டம்
- நேரு எம்.எல்.ஏ. அறிவிப்பு.
- விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்த வில்லை.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமை செயலர், கலெக்டர், உள்ளாட்சித் துறை இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் எஸ்.பி.சி.ஏ. எனும் விலங்குகள் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தவில்லை. இதனால் விலங்குகள் துன்புறத்தப்படுவதுடன், அவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. தெருநாய் போன்ற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்த வில்லை. நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு, வாகனங்களில் அடிப்பட்டு இறக்கிறது.
தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்தாததால் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. தெருக்களில் கொட்டப்படும் உணவு கழிவுகளை தின்ன சண்டையிட்டு கடித்து கொள்வதால் ரேபிஸ் போன்ற வைரஸ் கிருமிகள் தாக்குகின்றன. ரேபிஸ் தாக்கிய நாய்கள் வெறி பிடித்து மனிதர்களை துரத்தி கடிக்கின்றன.
எனவே இதை தவிர்க்க விலங்குகள் கண்காணிப்பு அமைப்பை தலைமை செயலர் தலைமையில் செயல்படுத்த வேண்டும். இந்த குழுவுக்கு கலெக்டரை தலைவராக நியமிக்க வேண்டும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய நாய் பிடி சாதனங்கள், வாகனங்கள் நகராட்சி, கொம்யூனில் இடம்பெற வேண்டும்.
விலங்குகளை சித்ரவதை செய்யாமல் துகாக்கவும், மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






