என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கவர்னர் தமிழிசையிடம் வையாபுரி மணிகண்டன் மனு
    • தனியார் மருத்து வக்கல்லூரிகளும் வாக்குறுதி அளித்தபடி 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக தரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கவர்னர் தமிழிசையை இன்று கவர்னர் மாளிகையில் சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 7 தனியார் மருத்துவ க்கல்லூரிகள் தங்களின் 50 சதவீத மருத்துவ இடங்களை அரசுக்கு வழங்கு வதாக உறுதியளித்த பின்னரே கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த கல்லூரிகளில் 4 கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொண்டன.

    இதனால் நிகர்நிலை பல்கலைக்கழக கல்லூரி களில் அரசு ஒதுக்கீடாக ஒரு மருத்துவ இடம்கூட புதுவையை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வில்லை. புதுவையில் மீதம் உள்ள 3 தனியார் மருத்து வக்கல்லூரிகளில் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 3 தனியார் மருத்து வக்கல்லூரிகளும் வாக்குறுதி அளித்தபடி 50 சதவீத மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக தரவில்லை. ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை மூலம் மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு பெற வே ண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது.

    இத்தகைய சூழலில் 2 மருத்துவ கல்லூரிகளும் கூடுதலாக தலா 100 மருத்துவ இடங்களை உயர்த்திக் கொள்ள தேசிய மருத்துவ ஆணையத்திடம் முதல்கட்ட அனுமதியை பெற்றுள்ளது.

    இந்த 2 மருத்துவ கல்லூரிகளும் 50 சதவீத இடங்களை புதுவை அரசுக்கு கட்டாயம் ஒதுக்கினால் தான் புதுவை அரசு தடையில்லா சான்று வழங்கும் என நிர்பந்திக்க வேண்டும். இதன்மூலம் 100 ஏழை புதுவை மாநில மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே கவர்னர் இதற்கான உரிய நடவடிக்கையை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    • கோயிலுக்கும் துளுக்கானத்தம்மன் கோவில் பூர்ண புஷ்கலா சமேத அண்ணமார் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
    • கும்பாபிஷேக ஏற்பாட்டினை மொரட்டாண்டி கிராம நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே மொரட்டாண்டி 27 அடி உயர சுந்தர விநாயகர் கோவில் மற்றும் துளுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் மயிலம் பொம்மபுர ஆதீனம் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.

    புதுவை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மொரட்டாண்டி கிராமத்தில் தொல்லைகாது சித்தர் வழிபட்டு ஞானம் பெற்ற சுந்தர விநாயகர் கோயிலில் புதியதாக 27 அடி உயரத்தில் சுந்தர விநாயகர் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. இந்தக் கோயிலுக்கும் துளுக்கானத்தம்மன் கோவில் பூர்ண புஷ்கலா சமேத அண்ணமார் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 29-ம் தேதி தேவதா அனுஞ்யை, எஜமான அனுஞ்யை, கணபதி ஹோமம் நவகிரக ஹோமம், மகாலட்சுமி கோமத்துடன் பூஜை தொடங்கியது. 30-ம் தேதி கோ பூஜை, கும்பாபிஷேகம் ரிஷப பூஜை அஸ்வபூஜை, கஜ பூஜை, தனபூஜை கன்னியாஸ்திரிபூஜை, சுமங்கலி பூஜை. பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை நடந்தது. பின்னர் மொரட்டாண்டி ஆண்டி குளத்தில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று காலை 5:30 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கி கலச புறப்பாடு நடந்தது. கும்பாபிஷேகத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் துளுக்கானத்தம்மன் பரிவார தெய்வங்களுக்கு மற்றும் பூரண புஷ்கல சமேத அண்ணா கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு நடந்தது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் மொரட்டாண்டி சனி பகவான் கோயில் நிறுவனர் டாக்டர் சிவஸ்ரீ சிதம்பர சீதாராம குருக்கள், புதுக்கோட்டை புவனேஸ்வரி அவதூத்த வித்யா பீடம் பூஜ்ஜியஸ்ரீ பிரணவாந்த சுவாமிகள், திருப்பூர் பல்லடம் பிரத்தகிரி சுவாமிகள் பிரம்மஸ்ரீ சாம்பசிவரிஷீஸ்வர், பாதாள பிரத்தியங்கரா காளி கோயில் மடாதிபதி பிரம்மஸ்ரீ நடாத்தூர் ஜனார்த்தன சுவாமிகள், அங்காளபரமேஸ்வரி கோவில் பிரம்மஸ்ரீ பத்மநாப சாமிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேக ஏற்பாட்டினை மொரட்டாண்டி கிராம நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் செய்திருந்தனர்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • புதிய திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசின் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் உள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சிங்க்ரோ சர்வ் குளோபல் சொல்யூஷன் திட்ட பயிற்சி மையத்தில் புதிய திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் எம்பலம் செல்வம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊரக மேம்பாட்டு முகமை அரசு செயலர் நெடுஞ்செழியன், முன்னிலை வகித்தார். பயிற்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அடப்பா ராஜா சுரேஷ்குமார், வேளாண் அறிவியல் நிறுவனத் தலைவர் அக்ரி கணேஷ் ,கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நேரு எம்.எல்.ஏ. எச்சரிக்கை
    • உயரதிகாரிகளின் அலட்சியப்போக்கும், லஞ்ச ஊழலமே காரணம்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன் பேட்டை தொகுதி நேரு எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவையும் சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் புதுவை புது ப்பொலிவு பெற்றி ருக்கும். இதை செய்ய தவறியதால் புதுவை நகரம் சுகாதாரமற்ற குப்பை மேடுகளாக, வாய்க்கால்கள் துர்நாற்றத்துடன், புதர்கள் மண்டி சீர்கேடாக காட்சியளிக்கிறது.

    தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதுடன் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும், குறைபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.

    பல கட்டுமான பணிகள் தடைபட்டு வேலைகள் நடைபெறாமல் உள்ளது. இதற்கு உயரதிகாரிகளின் அலட்சியப்போக்கும், லஞ்ச ஊழலமே காரணம்.

    24 மணி நேர தடையில்லா மின்சாரம், சுகாதாரமான குடிநீர் வசதி, குற்ற செயல்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல், கழிவுநீர் வழிந்தோடாத சாலைகள், விபத்து ஏற்படா மல் தடுக்க ஆக்கிரமிப்பு இல்லா சாலைகள், பாதசாரிகள் நடந்து செல்ல ஆக்கிரமிப்பு இல்லா நடை பாதைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இத்திட்டத்தில் உள்ளன.

    ஆனால் இத்திட்டங்கள் முறையாக அதிகாரிகளால் செயல்படுத்தப்ப வில்லை. இதற்கு அண்ணா திடல் கட்டுமான பணியே சான்று. ஒரு ஆண்டில் முடிக்க வேண்டிய பணி, 2½ ஆண்டாகியும் முடிக்கப்படா மல் காட்சி ப்பொருளாக உள்ளது.

    இதிலும் பல குறைபாடுகள் உள்ளது. மத்திய அரசு இந்த மாதத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை முடிக்க காலக்கெடு விதித்துள்ளது.

    உருளையன்பேட்டை தொகுதியில் எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. கண்காணிப்புகேமரா பொருத்தவில்லை,

    புதிய பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வில்லை. பயணிகளுக்கு குடிநீர்கூட கிடைக்க வில்லை. பெரிய மார்க்கெட்டும் சீர்கேடுடன் உள்ளது. தலைமை செயலரும் பணிகளை ஆய்வு செய்யவில்லை. இந்த குற்றசாட்டுகளுக்கு தலைமை செயலர் பொறுப்பேற்க வேண்டும்.

    கவர்னர் ஸ்மார்ட் சிட்டி குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என தெளிவுபடுத்த வேண்டும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து தலைமை செயலர், கவர்னரை கண்டித்து மக்களை திரட்டி, தலைமை செயலகம், கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொது மக்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    • தொடர்ந்து நாளை இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற்றது.

    முன்னதாக பிடாரியம்ம னுக்கு சாலை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடை பெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதியுலா, இந்திர விமானம், அதிகார நந்தி, பூத வாகனம், கற்பக விருட்சம், நால்வர் வீதியுலா, யானை வாகனம், குதிரை வாகனம், பிட்சாடனர் திரு வீதியுலா, ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் வீதியுலா நடைபெற்றது.

    பின்னர் பர்வதவர்த்தினி ராமலிங்கேஷ்வரருக்கு திருக்கல்யாணம் நடை பெற்றதை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் வைத்திலிங்கம் எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் ஊர் பிரமுகர் பிரகாசம் ஆகி யோர் கலந்துகொண்டனர். சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொது மக்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்தனர். தொடர்ந்து நாளை இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • மாணவ மாணவிகளுக்கு ஆனந்தபாலயோகி பவனானி, தேவசேனா பவனானி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
    • யோகாச்சாரியா ஆனந்த பாலயோகி பவனானி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியினை யோகாஞ்சலி நாட்டியாலயத்தின் தலைவர் யோகாச்சாரியா ஆனந்த பாலயோகி பவனானி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் யோகா செயல்முறை விளக்கம், பரத நாட்டியம் மற்றும் ஸ்லோகம் வாசித்தல் நடைபெற்றது. கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஆனந்தபாலயோகி பவனானி, தேவசேனா பவனானி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் திவ்ய பிரியா பவனானி, லலிதா, சண்முகம், ஆசிரி யர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொது மேலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

    • அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
    • அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் சேத்திலால் நகரைச்சேர்ந்தவர் கமல்நாதன்(வயது20). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று, வழக்கம் போல் நண்பர் சுடரொளியுடன்(20) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.ன்.ஜி.சி குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலிலிருந்து வந்த சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் பக்க வாட்டில் மோதியது. இதில், லாரியின் பின் சக்ரத்தில் கமல்நாதன் சரிந்துவிழுந்து, தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல், நண்பர் சுடரொளி இடுப்பு, கால்களில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் உயிருக்கு போராடிய மாணவர் சுlரொளியை ஏற்றி காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயற்சித்தபோது, அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வராததற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இறந்த மாணவர் உடலை சக மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்சில் இறந்த மாணவன் உடலை ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதை கண்டித்து சக மாணவர்கள், உறவினர்கள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஜான்சன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
    • பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரச வேளாண்துறை மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களை வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

    மத்திய அரசின் நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்த ப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.2 1/4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெறும் புதுவை பிராந்தியத்தை சேர்ந்த முதல் 7 பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினர். சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், செல்வகணபதி எம்.பி, ராமலிங்கம் எம்.எல்.ஏ, வேளாண் துறை இயக்குநனர் பாலகாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    • டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
    • முகாமில் கலந்து கொண்ட அனைவரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பாகூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் தேவி, சுவாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மருத்துவர்கள் பேசுகையில், சிகரெட் உபயோகம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதுடன், இளைய சமுதாயத்திற்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினால் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். புகை பிடிப்பதை நிறுத்துவதை விட தடுப்பது எளிதானது.

    ஒவ்வொரு சிகரெட்டி லும் குறைந்தபட்சம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான உடல் நலத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய ரசாயனங்களால் தயாரிக்கப்படுகிறது.

    ஒருவர் புகைப்பிடிப்பதால் அவருக்கு வரக்கூடிய பாதிப்புகளை விட அவருக்கு அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகம். ஏனென்றால் ஒவ்வொரு சிகரெட்டின் வாய்ப்பகுதியில் பில்டர் என்று சொல்லக்கூடிய அதாவது வடிகட்டி உள்ளது.

    எனவே புகை பிடிக்காத வர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, புகை பிடிப்பவர்களுக்கு பாதிப்பு குறைவு. வெளியில் உள்ள நெருப்பு பகுதியில் இருந்து வரக்கூடிய புகை அருகில் உள்ளவர்களுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வு கூறுகிறது என்றனர்.

    இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், நமணசமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடி க்கப்பட்டது.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.
    • ரூ.30 லட்சத்து 97 ஆயிரம் செலவிலான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சுல்தான்பேட்டை பஞ்சாயத்தில் கொம்பாக்கம் வாய்க்கால் ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் செலவில் தூர்வாருதல், அப்துல் கலாம் நகரில் ரூ.14 லட்சத்து 46 ஆயிரம் செலவில் செம்மன் சாலை அமைத்தல், ஜாகீர் உசேன் நகரில் ரூ.9 லட்சத்து 73 ஆயிரம் செலவில் செம்மன் சாலை அமைத்தல், சுல்தான்பேட்டை பகுதியில் ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் செலவில் உறிஞ்சுக் குழிகள் அமைத்தல் என மொத்தம் ரூ.30 லட்சத்து 97 ஆயிரம் செலவிலான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    எதிர்க்கட்சித் தலைவரான இரா.சிவா செம்மன் சாலை, வாய்க்கால் தூர்வாரும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வைஷாக் பாகி, உதவிப் பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சித்தார்தன், பணி ஆய்வாளர் விஜய், அருணாசலம், கிராம திட்ட ஊழியர்கள் முனுசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஜலால் ஹனீப், ஹாஜி முகமது, சிராஜிதீன், முகம்மது சுல்தான், கமாலுதீன், அன்சாரி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜாமத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    • ஆணையர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் 2023-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ விழாவில் திருக்காமீஸ்வரர் ரிஷப வாகனம், மயில்வாகனம், இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகன சேவை களில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம்  தொடங்கியது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ, ராமலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 4 மாடவீதி வழியாக தேர் பவனி சென்றது. பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    தேரோட்டத்திற்கான ஏற்பாட்டை இந்து சமய அற நிலைத்துறை அதிகாரிகள், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

    • சட்டசபையில் சந்தித்து அவரிடம் முறையாக வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறினார்.
    • பொருளாளர் மணிமாறன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, உள்பட பலர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நீர் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு வழிகாட்டுதல்களில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளின் படி உப்பளம் தொகுதியில் பாண்டி மெரினா பின்புறம் 15 சுற்றுலா படகுகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மேலும் தொகுதி இளைஞர்களிடம் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடியுங்கள், உள்நாட்டில் மீன் பிடித்தாலும் இடையூறு விளைவிக்காத வகையில் நடந்து கொள்ளுங்கள், சுற்றுலா பயணிகளை தொந்தரவு கொடுக்காமல் அவர்களிடம் கனிவுடன் பேசி படகு டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள், என்று கேட்டுக் கொண்டார்.

    மேலும் இது சம்பந்தமாக மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியை நேரில் சந்தித்து பேசினார்.

    அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து அவரிடம் முறையாக வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறினார். பின்னர் முறைப்படி அனுமதி பெற்றார்.

    உடன் நகராட்சி உதவியாளர் பிரபாகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்து தலைவர்கள், நிர்வாகிகள், பொருளாளர் மணிமாறன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×