என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • அப்பகுதி பிரமுகர்களை அழைத்து சென்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் ெதாகுதிக்குட்பட்ட வரதப்பிள்ளை தோட்ட த்தில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்ப ணிகள் மேற்கொண்டு முகப்பு மண்டபம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை மூலம் நிதி பெற்று தரகோரி அப்பகுதி பிரமுகர்கள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிகை விடுத்தனர்.

    இது அடுத்து அப்பகுதி பிரமுகர்களை அழைத்து சென்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டார்.

    அதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நிதி அளிக்க ஒப்பு கொண்டனர். இதன் முதல் கட்டமாக கோவில் திருப்பணிக்கு கென்னடி எம்.எல்.ஏ. ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்கவேலு, கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் ஊர் பிரமுகர்கள் கோவில் பஞ்சாயத்தார்கள் உடன் இருந்தனர்.

    • கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியவில்லை.
    • ஆணையம் இல்லை என்றாலும் அரசே முடிவெடுக்க அதிகாரம் உண்டு.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     புதுவையில் எம்.பி.சி. பிரிவு 2008-ல் தொடங்கப்பட்டது. அப்போது 4 பிராந்திய மீனவர்களும் எம்.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

    அதில் 20 சதவீதம் மீனவர் சமுதாய மாணவர்கள் பயன்பெற்றனர். அரசு எம்.பி.சியில் இருந்து இ.பி.சி. என்ற பிரிவை உருவாக்கி காரைக்கால் மீனவர்களின் கருத்தை கேட்காமல் அவர்களை இ.பி.சி.யில் சேர்த்தது.

    புதுவை, காரைக்கால் மீனவர்களையும் இ.பி.சி.யில் வைத்து அவர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு செய்தது தான் காரைக்கால் மீனவருக்கு இழைத்த அநீதியின் அடித்தளம்.

    இதன் விளைவாக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியவில்லை.

    எம்.பி.சி.யில் வைத்திருந்தால் காரைக்காலுக்கான 18 சதவீதத்தில் ஒரு சில இடங்களையாவது பெற்றிருப்பர்.

    கடந்த 13 ஆண்டாக நிகழ்ந்து வரும் அநீதியை காரைக்கால் அமைச்சரோ, எம்.எல்.ஏ.க்களோ கண்டு கொள்ளவில்லை. ஆணையம் இல்லை என்றாலும் அரசே முடிவெடுக்க அதிகாரம் உண்டு. அவர்களை இ.பி.சி.யில் இருந்து எம்.பி.சிக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது.
    • உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28-ந் தேதி ஒரு திருமண வரவேற்பு நடந்தது.

    இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் குவார்ட்டர் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. திருமண வரவேற்பில் பங்கேற்ற பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மது விநியோகம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பொது இடத்தில் மது விநியோகம் செய்ததாக கலால்துறையினர் மணமகள் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது. இதன்பேரில் மதுபானம் விற்ற கடை உரிமையாளர், மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையை கலால்துறை துணை ஆணையர் குமரன் எடுத்துள்ளார்.

    • முகாமில் தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ங்கள் பங்கேற்கின்றன.
    • ரூ.10 ஆயரிம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மைய உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி இணைந்து வேலைவாய்பு முகாமை  (3-ந் தேதி) கொட்டுப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலை நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் நடத்துகிறது.

    காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் முகாமில் தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ங்கள் பங்கேற்கின்றன.

    முகாமில் பிளஸ்-2 தேர்ச்சி, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயரிம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
    • பணியிட மாற்றங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே கலந்தாய்வு மூலம் முடிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் துளசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் 23-24-ம் கல்வியாண்டில் தமிழுடன் கூடிய சி.பி.எஸ்.இ. கல்விமுறை அமல்படுத்த ப்படும் என்ற அரசின் அறிவிப்பை வர வேற்கிறோம். இந்த கல்வி முறையில் அனைத்து பதிவிகள், நியமன விதிகள், ஊதிய விகிதங்கள், பணி நாட்கள் ஆணைகளை விரைவாக வெளியிட வேண்டும்.

    மேல்நிலை கல்வியில் புதிய பாடப் பிரிவுகளை அமல்படுத்த வேண்டும். மொழி, விருப்ப பாடங்களை அதிகப்படுத்த வேண்டும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். பணியிட மாற்றங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே கலந்தாய்வு மூலம் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சுகாதார ஊழியர்கள் சம்மேளனம் கோரிக்கை
    • அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடியே 40 லட்சம் கூடுதல் செலவாகும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சுகா தாரத்துறை ஊழியர்களுக்கு நோயாளிகள் கவனிப்பு படி , செவிலியர் படி இந்த மாதம் முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனை நோயாளிகள் கவனிப்பு படி பிரிவு-8க்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு மாத ந்தோறும் ரூ.4 ஆயிரத்து 100 ஆகவும், பிரிவு 9-க்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 300 ஆகவும் உய ர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    செவிலியர் படி அனைத்து பிரிவினருக்கும் மாதம் ரூ. 7 ஆயிரத்துத் 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை அரசு சுகாதாரத்துறை சார்பு செயலாளர் கந்தன் வெயிட்டுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஊழியரும் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 2500 வரை கிடைக்கும். 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப் பட்டுள்ளது.

    இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடியே 40 லட்சம் கூடுதல் செலவாகும். சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நிலுவைத் தொகையோடு வழங்கும் வகையில் தான் கோப்புகள் அனுப்பப்பட்டது. தற்போது அரசு நிதிநிலை சரியில்லாத காரணத்தால் நிலுவைத் தொகை வழங்க சாத்தி ழ்யக்கூறு இல்லாததால் மாத ஊதியத்தில் மட்டும் உயர்த்தி வழங்குவதை ஏற்றுக் கொண்டுள்ளோம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஊதியத்துடன் இந்த தொகையை உயர்த்தி தந்துள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர்,

    சுகாதார நிதி துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். கொரோனா நேரத்தில் ஒய்வின்றி உழைத்த சுகாதார ஊழியர்களுக்கு படிகளின் நிலுவை தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள அறிக்கையில் கூறியுள்ளனர்

    • கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.
    • கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு நடக்கிறது.

    ரங்கசாமி பதவியேற்று 2 ஆண்டு முடிவடைந்துள்ளது. ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 4 அமைச்சர், துணை சபாநாயகர், அரசு கொறடா பதவிகளை என்.ஆர். காங்கிரசாரும், சபாநாயகர், 2 அமைச்சர் பதவியில் பா.ஜனதாவினரும் உள்ளனர்.

    ஆட்சியில் இடம் பெறாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வாரிய பதவி வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகின்றனர். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்கூட இது எதிரொ லித்தது.

    எம்.எல்.ஏக்கள் பேசும் போது, அரசு சார்பு நிறுவன தலைவர்களாக தங்களை நியமித்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபகரமாக செயல்படுத்துவோம் என தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

    ஏற்கனவே பா.ஜனதா தரப்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான அ.தி.மு.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை. ஆனாலும் தேர்தல் உடன் படிக்கையின்படி தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாரிய பதவி அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனாலும் கடந்த 2 ஆண்டு காலமாக முதலமைச்சர் ரங்கசாமி மவுனம் சாதித்து வருகிறார். இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார்.

    இது வாரிய பதவியை மையமாக வைத்தே ரங்கசாமி பேசியதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு பெற்றது. இதை என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் உற்சாகமாக கொண்டாடவில்லை. இதற்கு கட்சியினர் பதவிகள் இல்லாததால் சோர்வான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது அவசியமானது. இல்லாவிட்டால் ஆளும்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கருதப்படும்.

    எனவே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர், எம்.எல்.ஏ.க்களை உத்வேகப்படுத்த தொகுதிகளில் வாக்கு பெற்றுத் தரும் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்குவது அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

    பா.ஜனதா, அ.தி.மு.க. தரப்பிலும் வாரிய தலைவர் பதவியை வழங்கும்படி நெருக்கடி அளிக்கின்றனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசிக்க தொடங்கியுள்ளார்.

    • புதுவை நேரு வீதியில், மீண்டும் திருப்பதி தேவஸ்தான கோவிலை கட்ட வலியுறுத்தி மனு அளித்தார்.
    • மனுவினை பெற்றுக்கொண்ட சுப்பா ரெட்டி புதுவையில் மீண்டும் தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் தகவல் மையத்துடன் அமைந்திருந்தது. இக்கோவிலுக்கு புதுவை மட்டுமின்றி தமிழக பகுதி பக்தர்களும் அதிகளவில் வந்து சென்றனர்.

    தகவல் மையத்தில் திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்தும், திருப்பதி லட்டு பிரசாதமும் பெற்று வந்தனர்.

    பழமை வாய்ந்த இக்கோவில் வலுவிழந்ததால், பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. ஆனால் இதுநாள் வரை கோவில் கட்டுமான பணி துவங்கப்படவில்லை.

    இதனால், ஏமாற்றத்திற்கு உள்ளான பக்தர்கள், மீண்டும் கோவிலை கட்ட வலியுறுத்தி தொடர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பதி சென்ற அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜ. மாநில செயலாளர் ரத்தினவேலு, விவசாய அணி தலைவர் புகழேந்தி ஆகியோர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

    அப்போது புதுவை நேரு வீதியில், மீண்டும் திருப்பதி தேவஸ்தான கோவிலை கட்ட வலியுறுத்தி மனு அளித்தார்.

    மனுவினை பெற்றுக்கொண்ட சுப்பா ரெட்டி புதுவையில் மீண்டும் தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதுகுறித்து அசோக்பாபு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    புதுவை நேரு வீதியில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டி உடனடியாக என்ஜினீயர்களை அழைத்து திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் புதுவையில் பிரமாண்டமான திருப்பதி கோவில் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறினார்.

    • ராகுல்காந்தி தேசிய பேரவை வழங்கியது
    • ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.

    புதுச்சேரி:

    ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும் ஊடகப்பிரிவு சேர்மனமான ஆர்.இ சேகர் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஐயப்பன்,ஜெகவீரபாண்டியன்,தயாளன்,பிரபு,ரமேஷ், கோதண்டபாணி, செல்வம், ஹரிகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத், ஐஎன்டியூசி மாநில செயலாளர் ஜான் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது.52). பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு பூரணி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். நாராயணமூர்த்தி தொடர்ந்து மது குடித்து வந்ததால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி பூரணி கண்டித்தார். இதனால் மனமுடைந்த நாராயணமூர்த்தி தற்கொலை கொள்ள முடிவு செய்து மனைவி வெளியே சென்ற நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை கொண்டார்.

    இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னராக உங்களது அரசியல் சாசனக் கடமைகளை ஆற்றும் செயல்திறனும், கடமை உணர்வும், மாநிலத்தை மேலும் உயரத்திற்கு இட்டுச்செல்லும்.
    • சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள். பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும், தேசிய விழுமியங்களுக்கும் அர்ப்பணித்துக் கொள்வதை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இந்த விழுமியங்களை ஒன்றுபடுத்த சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை சமாளித்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

    கவர்னராக உங்களது அரசியல் சாசனக் கடமைகளை ஆற்றும் செயல்திறனும், கடமை உணர்வும், மாநிலத்தை மேலும் உயரத்திற்கு இட்டுச்செல்லும். சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

    உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளை வழங்கவும், தேச சேவையில் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு மோடி கடிதத்தில் கூறியுள்ளார்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
    • மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தில் பாரபட்சம் செய்வதாக சொல்கிறார்கள். புதுவையில் என்ன ஆட்சி நடக்கிறது?

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் ரோபாட் துணையுடன் ஆயிரத்து 300 அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

    இதையடுத்து ஜிப்மர் அறுவை சிசிக்சை டாக்டர்களை கவர்னர் தமிழிசை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். டாக்டர்கள் மத்தியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    ரோபாட் துணையுடன் அறுவை சிகிச்சை முதலில் வெளிநாடுகளில் செய்யப் பட்டு வந்தது. தென்னிந்தி யாவில் அதிகளவு ரோபாட் மூலம் அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவமனையாக ஜிப்மர் உள்ளது. சரியாக என்ன செய்ய வேண்டுமோ அதை ரோபோட் மூலம் செய்யலாம்.

    தவறில்லாமல் நேரடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். குறைவான கீறல் சிகிச்சைக்கு போதும். ரத்தம் வீணாவது மிக குறையும். குறைந்தநாள் மருத்துவ–மனையில் இருந்தால் போதும். விரைவில் சாதாரண வார்டுக்கோ, வீடுக்கோ திரும்ப

    லாம். சாதா–ரண வாழ்க்கை முறைக்கு எளிதில் திரும்ப முடியும். ஜிப்மரில் இதற்காக ரூ.26 கோடி சாதனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. புதுவை, தமிழகம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்து 300 ரோபாடிக் சர்ஜரி 5 ஆண்டுகளில் நடந்துள்ளது.

    உயரிய சிகிச்சை செய்தாலும் தேடி வரும் மக்கள் மகிழ்வுடன், திருப்தியுடன் இருக்கும் வகையில் ஜிப்மர் நிர்வாகத்தின் நடவடிக்கை இருப்பது அவசியம். இவ்வாறு தமிழிசை பேசினார்.

    இதன்பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜிப்மரில் 8 துறைகளில் 20 டாக்டர்கள் ரோபாட் துணையுடன் அறுவை சிகிச்சை செய்கின்றனர். சிறுநீரகவியல், புற்றுநோய் பிரிவுகளில் அதிக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஜிப்மரில் மக்கள் மருந்தகத்துக்கு வரும் 12ம்தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளது.

    தமிழ் தெரிந்த மக்கள் தொடர்பு அலுவலர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். மக்களுக்கான ஆம்புலன்ஸ் இயக்குவதில் நிர்வாக ரீதியான பல பிரச்சினைகள் இருக்கிறது. மக்களுக்கு எங்கேயும் கிடைக்காத சிகிச்சைகள் இங்கு கிடைப்பதை பதிவு செய்ய வேண்டும்.

    நம் மொழி எப்போதும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம். தமிழுக்கு பிரதான முக்கியத்துவம் தந்துவிட்டு தான் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாற்றத்துக்கு ஒத்துக்கொண்டோம். மத்திய அரசிடம் இதை தெரிவித்துள்ளோம்.

    தமிழ் எப்போதும் சி.பி.எஸ்.இயில் இருக்கும். சி.பி.எஸ்.இ. கூடாது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன். தமிழகத்தில் தமிழில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெறாமல் உள்ளதையும் பார்க்க வேண்டும். கல்வியில் மக்கள் மேம்பட வேண்டும். புதுவை கல்வி புரட்சியை பார்க்க உள்ளது.

    உலக அரங்கில் சிறந்த கல்வியை பெற்று மிகப்பெரிய பலனை குழந்தைகள் பெற போகிறார்கள். மத்திய அரசு கட்டுப்பாட்டுகளை தளர்த்தி கொடுத்ததால், புதுவை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ கொண்டு வந்துள்ளோம். சி.பி.எஸ்.இயில் புதுவை, காரைக்காலில் தமிழும், மாகேயில் மலையாளமும், ஏனாமில் தெலுங்கும் இருக்கும். புதுவையில் தமிழ் இல்லாமல் இருக்காது. தமிழ் கட்டாயம் கொண்டுவரப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மருத்துவ கல்லூரி அங்கீகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கவர்னர் தமிழிசை, தமிழ்நாட்டில் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தில் பாரபட்சம் செய்வதாக சொல்கிறார்கள். புதுவையில் என்ன ஆட்சி நடக்கிறது?

    புதுவையிலும் அங்கீகாரம் ரத்தானது. உண்மையில் மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் செயல்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இல்லை, புதுவையிலும் அங்கீகாரம் ரத்து நடந்துள்ளது. மத்திய அரசின் துறைகள் தன்னிச்சயாக செயல்படுகின்றன.

    வருகை பதிவேடு டாக்டர்களுக்கு முக்கியம். புதுவையிலும் வருகை பதிவு கட்டாயம் என்று சொல்லியுள்ளோம். நாடு முழுவதும் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்துள்ளனர். வருகை பதிவேடு முக்கியம், டாக்டர்கள் சரியாக பணிக்கு வரவேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×