என் மலர்
புதுச்சேரி

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ராகுல்காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ.சேகர், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- ராகுல்காந்தி தேசிய பேரவை வழங்கியது
- ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.
புதுச்சேரி:
ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும் ஊடகப்பிரிவு சேர்மனமான ஆர்.இ சேகர் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஐயப்பன்,ஜெகவீரபாண்டியன்,தயாளன்,பிரபு,ரமேஷ், கோதண்டபாணி, செல்வம், ஹரிகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத், ஐஎன்டியூசி மாநில செயலாளர் ஜான் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.






