search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish shop"

    • மீன் அங்காடியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதற்காக சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
    • நவீன அங்காடி திறக்கப்பட்டுவிட்டால் மீனவர்கள் சிரமமின்றி வரும் காலங்களில் வியாபாரம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையோர மீன் கடைகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    இதையடுத்து பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் சந்தையை கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய மீன் அங்காடி கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நவீன மீன் அங்காடி சுற்றுச் சுவருடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 366 மீன் கடைகள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு மீனவர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன.

    மீன்களை சுத்தம் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மீன் அங்காடியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதற்காக சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 110 கார்கள், 60 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தவும் இடம் தயாராகி வருகிறது.

    மீன் அங்காடிகளின் 9 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 3 மாதத்தில் கடைகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மீனவர்களுக்கு கடைகளை ஒதுக்கும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடங் கியுள்ளனர். இதுதொடர்பாக மீனவர்களுடன், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    மீனவர்களுக்கு கடைகளை ஒதுக்குவது தொடர்பாக மீனவர்கள் சங்கம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு மாநகராட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சரிபார்த்து மீனவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்யும் இறுதிக்கட்ட பணிகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இந்த நவீன அங்காடி திறக்கப்பட்டுவிட்டால் மீனவர்கள் சிரமமின்றி வரும் காலங்களில் வியாபாரம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முகாமில் தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ங்கள் பங்கேற்கின்றன.
    • ரூ.10 ஆயரிம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மைய உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி இணைந்து வேலைவாய்பு முகாமை  (3-ந் தேதி) கொட்டுப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலை நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் நடத்துகிறது.

    காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் முகாமில் தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ங்கள் பங்கேற்கின்றன.

    முகாமில் பிளஸ்-2 தேர்ச்சி, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயரிம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதம் இருந்த பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடவில்லை.
    • புரட்டாசி முடிந்து அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதம் இருந்த பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடவில்லை.

    தற்போது புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுகிழமை என்பதால் நகரின் மையத்தில் உள்ள குபேர் மீன் அங்காடியில் அதிக அளவில் மீன் வந்துள்ளது.அசைவ பிரியர்கள் காலை 6 மணி முதலே அங்காடிக்கு வந்து மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகளை வாங்கினர்.

    புரட்டாசி முடிந்து அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வஞ்சிரம் மீன் ரூ.300 முதல் ரூ.800 வரையிலும், வவ்வால் ரூ.400 முதல் ரூ.600 வரையிலும், நண்டு ரூ.200 முதல் ரூ.400 வரையிலும், இறால் கிலோ ரூ.200 எனவும் விற்கப்படுகிறது.

    கடந்த மாதத்தை விட அனைத்தும் கூடுதல் விலையில் விற்கப்பட்டது. இதேபோல் சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    ×