என் மலர்
புதுச்சேரி
- கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார்.
- கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
புதுச்சேரி:
கவர்னர் தமிழிசை பிறந்த நாள் விழா புதுவை கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.
கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் தமிழிசை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மத்தியில் கேக் வெட்டினார். கவர்னருக்கு புதுவை தலைமை செயலாளர் ராஜுவர்மா மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் உதய நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை கவர்னர் தமிழிசை ரசித்து பார்த்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய செல்போன் காலர் டியூன் பாடலான ''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'' என்ற பாடலை எடுத்து தெலுங்கானா மாணவர்கள் நடனமாடினர்.
''ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' என்ற பாரதியார் பாடலை எடுத்தும் பாடினர்.
தெலுங்கானா ராஜ்பவனில் தமிழ் ஒலித்தது. இதனைத்தான் பிரதமர் விரும்புகிறார். தெலுங்கானா மாநில உதய தினம் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது.
எல்லா மாநில கவர்னர்களும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படி தெலங்கானா உதய தினமும், உங்களுடைய பிறந்த தினமும் ஒன்றாக அமைந்தது என்று கேட்டனர். அது இறைவனின் சித்தம் என்று நான் சொன்னேன்.
தெலுங்கானாவில் இன்னும் அரசியல் இருக்கிறது. அங்கு உதய தினத்தை பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் கவர்னரை அழைப்பதில்லை. அதைப்பற்றி நானும் கவலைப்படுவதில்லை.
கவர்னரை அழைக்கமாட்டார்கள், ஆனால் அதே கட்சி தான் ஜனாதிபதியை ஏன் அழைப்பதில்லை என்று கேள்வி கேட்பார்கள்.
அப்படியானால் இதில் எவ்வளவு மாறுபாடுகள், அரசியல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு அரசியலமைப்பு தலைவரை அழைக்கவில்லை. ஆகவே விழாவுக்கு வரவில்லை என்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்பு தலைவரை எந்த நிகழ்வுக்கும் அழைக்கமாட்டார்கள்.
இதில் அரசியல் இருக்க கூடாது. எல்லாவற்றிலும் பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். அதில் எனக்கு ஒரு சதவீதம் கூட கவலையில்லை. தெலுங்கானாவில் 2 அரசு நடைபெறவில்லை.
மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதை நாம் பார்க்கின்றோம். புதுவையை பொருத்தவரையில் நமக்கான தண்ணீர் எந்தவித்திலும் குறைய கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். எதிர்கட்சியாக இருக்கும்போது ஒருவகையாகவும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு வகையாகவும் அவர்கள் பணியாற்றுகின்றனர்.
ஒருவேலை மாற்று கட்சியினரிடம் இருந்து அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பு வந்திருந்தால் தமிழக அரசு பெரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார்கள்.
ஆனால் அதைப்பற்றி இப்போது வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். நமக்கென்று வரும்போது ஒரு அரசியலும், பிறருக்கென்று வரும்போது ஒரு அரசியலும் இல்லாமல் எப்போதும் ஒரே தன்மையான நிலைபாட்டில் இருக்க வேண்டும்.
தெலுங்கானா முதலமைச்சருக்கு நான் கருத்து சொல்லும் அளவுக்கு இல்லை. மக்களுக்கு, நான் சொல்வது உங்களுக்கு நான், எனக்காக நீங்கள் என்று ஏற்கனவே பேசியுள்ளேன். ஆகவே அவர்கள் என்னோடு அன்போடு பயணிக்கிறார்கள். அவர்களின் மேம்பாட்டில் என்னுடைய பயணம் எப்போதும் தொடரும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
கவர்னருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது உருவம் கோலத்தில் வரையப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
- அன்னை தெரசாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும்.
- பராமரிப்பு மற்றும் தொட்டியை கழுவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி பூமியான் பேட்டையில் உள்ள கீழ்நிலை நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் வருகிற 6-ந் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பூமியான்பேட்டை, விக்டோரியா நகர், ஜவகர் நகர், பாவாணர் நகர், ஜான்சிநகர்,
ராகவேந்திரா நகர், கோடி சுவாமிகள் நகர், பொன் நகர், சுதாகர் நகர், சரநாராயணா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும்.
இதே போல் வருகிற 7-ந் தேதி முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள கீழ்நிலை, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை அரவிந்தர்நகர், அங்காளம்மன் நகர், ரங்கசாமி நகர், பள்ளத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோ கம் தடை செய்யப்படும்.
இதே போல் வருகிற 8-ந் தேதி முருங்கப்பாக்கம் திரவு பதியம்மன் கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், முருங்கப்பாக்கம் பேட்டில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு மற்றும் தொட்டியை கழுவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சேத்திலால் நகர், கணபதி நகர், முருங்கபாக்கம் பேட், அன்னை தெரசாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
- புதுவை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்திர காந்தி சதுக்கம் தொடங்கி வில்லியனூர் வரை புதுவை-விழுப்பு சாலைக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஆணை வெளியிட வேண்டும்.
புதுவை அரசு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு அரசு விழாவாக கொண்டாட வேண்டும். புதுவை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும். வில்லியனூரில் கருணாநிதிக்கு சிலை அமைத்து நினைவு ஆய்வு மணிமண்டபம் அமைக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருணாநிதி குறித்து பேச்சு-கட்டுரை போட்டிகள் அரசின் சார்பில் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
- கோடை விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவைப் பகுதியில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது, தமிழக அரசு 7-ம் தேதி பள்ளிகளை தொடங்கும் என்று அறிவித்த காரணத்தால், புதுவை அரசும் எந்த ஒரு மருத்துவக் குழுவின் ஆலோசனைகளை கேட்காமல் 7-ந் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவித்த அறிவிப்பு, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமத்தை மற்றும் உடல் பாதிப்புகளை இந்த அதிகபட்ச வெயிலின் தாக்கத்தால் ஏற்படுத்தும்.
எனவே புதுவை அரசு மாணவர்க ளின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு சேர வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை கடந்த காலங்களைப் போல் இல்லாமல் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து அமாவாசை நெருங்கும் நாளில் கொள்ளை அடிப்பது இவர்களுக்கு வாடிக்கையானது.
- போலீசார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் சொகுசு கார், பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த சந்தை புதுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுராணி (வயது 65). இவர் தனது மகன் நாகராஜ், மருமகள் காவேரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
அழகு ராணி கரிக்கலாம் பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த 17-ந்தேதி சென்றிருந்த நிலையில் அவரது மகன் நாகராஜ் மற்றும் மருமகள் காவேரி வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டின் வாசலில் படுத்திருந்தனர்.
மறுநாள் காலை தூங்கி எழுந்த காவேரி வீட்டின் தோட்டத்திற்கு சென்றபோது பின்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தனது மாமியார் அழகு ராணி தங்கி இருந்த அறை கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து நகை, பத்திரங்கள், பணம் மற்றும் மளிகை பொருட்களை மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதேபோல் மறுநாள் செட்டிப்பட்டு என்னும் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் வீட்டு பின் கதவை உடைத்து சிலிண்டர் மற்றும் சமையல் பாத்திரங்களை கும்பல் திருடியது.
புதுவை-விழுப்புரம் எல்லையில் உள்ள கிராமங்களில் இதுபேல் தொடர் அடிக்கடி திருட்டுஅடிக்கடி நடந்தது. அதுவும் அமாவாசை நாளில் இருட்டை பயன்படுத்தி திருட்டு நடைபெற்றது. பூட்டி இருக்கும் வீட்டின் பின் கதவை மட்டும் உடைத்து ஒரே திருட்டு கும்பல் தொடர்ந்து கைவரிசையை காட்டியது.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து அமாவாசை நெருங்கும் நாளில் கொள்ளை அடிப்பது இவர்களுக்கு வாடிக்கையானது.
இதனால் தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். அதோடு ரோந்து பணியை கிராமங்களில் அதிகரித்தனர்.
அப்போது மடுகரையில் 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்களை போலீசார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்முரணாக பேசினார்கள். மேலும் வாகனத்தின் எண்ணை சோதனை செய்த போது நகரப் பகுதியில் திருடு போன மோட்டார் சைக்கிள் என தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக அமாவாசை இருட்டை பயன்படுத்தி அவர்கள் திருடி வந்தது தெரியவந்தது.
மேலும், அவர்கள் சொகுசு காரில் அரசியல் கட்சியின் கொடியை வைத்து கொண்டு கிராமப் புறத்தில் வீடுகளை பகலில் நோட்டமிடுவர். வீட்டை தேர்வு செய்து இரவில் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருடும் பொருட்கள் அனைத்தையும் காருக்குள்ளேயே வைத்திருப்பதும் நகைகளை அடகு வைத்தும் பணத்தை செலவிட்டும் வந்துள்ளனர். இந்த கும்பலில் தலைவராக செயல்பட்டவர் தமிழ்ராஜ் (36). இவர் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். துணிக் கடை என்பது பகுதிநேர தொழிலாகவும் திருட்டை முழுநேர தொழிலாளகவும் செய்துள்ளார்.
இவரது கூட்டாளிகள் விழுப்புரம் விநாயகபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் அய்யனார், சீனிவாசன் ஆகியோரை கைது செய்த போலீசார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் சொகுசு கார், 3 பைக், கியாஸ் அடுப்பு, சிலிண்டர், தோசை கல் மற்றும் சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் தமிழக கிராமங்களில் 10 இடங்களிலும், புதுவையில் 5 இடங்களிலும் கொள்ளை அடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் புறப்பட்டனர்.
புதுச்சேரி:
தேசிய மாணவர் படையினரின்கடலூர் தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு மற்றும் தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு மாணவர்கள் இணைந்து கடல் பாய்மரப்படகு சாகச பயணத்தை மேற்கொண்டனர்.
ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுவை துறைமுகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாய்மர படகு கடல் சாகச பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ. தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
மாணவர் பருவத்திலேயே மாணவர்கள் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் மாணவர்களும் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது.
இளம் வயதில் நாட்டு பற்றை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும். 11 நாட்கள் கடலில் சாகச பயணம் மேற்கொள்வது என்பது எளிதான ஒன்று அல்ல. இந்த பயணத்திற்கு துணிவு வேண்டும். இதன் மூலம் சிறந்த அனுபவம் கிடைக்கும்.
இளம் வயதில் பிள்ளைகளை நல்வழிப்படுத்த இதுபோன்ற சாகச பயணங்கள் துணை புரியும். மாணவர்களுக்கு கல்வியோடு சிறந்த ஒழுக்கத்தை வழங்க வேண்டும்.
இளம் வயதில் கற்பது தான் மாணவர்களுக்கு மனதில் பதியும். புதுவையில் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் புறப்பட்டனர்.
302 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவுள்ள இந்த பாய்மர படகு சாகசப் பயணம் புதுவையில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்றடைந்து மீண்டும் அதே வழியில் திரும்பும்.
இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம், மரம் நடுதல், கடற்கரை தூய்மைப் பணித் திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.
தேசிய மாணவர் படை மாணவர்களின் உள்ளத் திறன் மேம்படுவதோடு கடல் பயணம் குறித்த அச்சம் நீங்கி ஆயுதப்படையில் மாணவர்களை சேரும் எண்ணத்தை தூண்டும் பயிற்சியாக கடல் பயிற்சி அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பராமரிப்பு செலவு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளி மாணவ, மணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் இளநிலை, முதுநிலை கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த புதிய திட்டத்துக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து கவர்னர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பட்ஜெட்டில் அறிவித்த படி எந்திரமயமாக்கல், கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கு வழங்கிவரும் பராமரிப்பு செலவு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் ஆணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி நுண்ணிழை, கட்டுவலை விசைப்படகுகளுக்கு பராமரிப்பு செலவு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இளநிலை, முதுநிலை கல்வி பயிலும் பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் அரசின் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வழி முறைகள் வகுத்து அரசாணை வெளியிடும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- சசிகுமார், பழனிவேல், தனுசு, செந்தில், இளஞ்செழியன், முரளி, தங்கதுரை, என். எஸ். கே. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில்
மணவெளி தொகுதியில் இடையார்பாளையம் பகுதியில் உள்ள குடுவையாறு கரையை ரூ.25.90 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது.
மேலும் மணவெளி பகுதியில் உள்ள செட்டிகுளம் மற்றும் அதன் வாய்க்காலை ரூ. 7.16 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தி வாய்க்காலை மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
இப்பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமார், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம் மற்றும் முக்கிய பிரமுகர்களான தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், இடையார்பாளையம் பகுதி முக்கிய பிரமுகர்கள் அர்ஜுனன், நாகராஜ், கூட்டுறவு சங்க இயக்குனர் பழனி, என்ற தன்ராஜ், சீனிவாசன், ராஜாராமன், மணவெளி பகுதி முக்கிய பிரமுகர்கள் கலைவாணன், முருகன், பன்னீர், சசிகுமார், எஸ்.வி .எஸ். குமரன், ராமச்சந்திரன், சசிகுமார், பழனிவேல், தனுசு, செந்தில், இளஞ்செழியன், முரளி, தங்கதுரை, என். எஸ். கே. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இப்பணியை நேரு எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
- அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு கண்ணன் நகர் பகுதியில் பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்ட பிரிவின் மூலம் பழைய வாய்க்காலை மாற்றி புதிய கான்கிரீட் வாய்க்காலாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை நேரு எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
அப்போது பள்ளிக்கூட பகுதி என்பதால் பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரி களை கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும் உடன் இருந்தனர்.
- திரவுபதி அம்மன் கோவில் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
- அர்ச்சுணன்- திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு சாமி வீதியுலா நடைபெற்றது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள சொரப்பூர் கிராமத்தில் உள்ள தர்மராஜா-திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், மாக சாந்தி ஹோமம், முதல் யாகசாலை பூஜை மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை ஆகியன நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை கலச புறப்பாடு நடைபெற்று, திரவுபதி அம்மன் கோவில் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
பின்னர் மூலவர் மற்றும் சுற்றுப்புர பரிகார மூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சொரப்பூர் மற்றும் வடுக்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அர்ச்சுணன்- திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு சாமி வீதியுலா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்தி ருந்தனர். தொடர்ந்து தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
- கழிவுநீர் கால்வாய் மேல் 10-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு மீன் விற்பனை செய்யப்படுகிறது.
- வாகனங்களும் செல்வதற்கு வழி இல்லாமல் நீண்ட நேரம் சாலையிலேயே காத்துக் கிடக்கின்றன.
புதுச்சேரி:
விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்காக மதகடிப்பட்டில் இருந்து எம்.என். குப்பம் வரை பல்வேறு பகுதிகளில் சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் விழுப்புரத்தில் இருந்து புதுவை செல்லும் வாகனங்களுக்காக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
தற்போது வாகனங்கள் இந்த சர்வீஸ் சாலை வழியாகவே சென்று வருகின்றன. இந்த சர்வீஸ் சாலையை ஒட்டி கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதகடிப்பட்டு கடைவீதி பகுதியில் இந்த சர்வீஸ் சாலை அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் மேல் 10-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு மீன் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் கடைக்கி வரும் பொதுமக்கள் சர்வீஸ் சாலையிலேயே தங்களது வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் விழுப்புரத்திலிருந்து புதுவை வரும் அனைத்து வாகனங்களும் செல்வதற்கு வழி இல்லாமல் நீண்ட நேரம் சாலையிலேயே காத்துக் கிடக்கின்றன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. மேலும் மீன் கழிவுகளை சாலையிலேயே கொட்டுவதால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது.
பொது மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை ஓரங்களில் மீன் கடைகளை வைத்து விற்பனை செய்யும் கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி கடைவீதிக்கு அருகாமையில் உள்ள சந்தை பகுதியில் எந்தவித இடையூறும் இன்றி மீன்கள் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- அப்பகுதி பிரமுகர்களை அழைத்து சென்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டார்.
புதுச்சேரி:
உப்பளம் ெதாகுதிக்குட்பட்ட வரதப்பிள்ளை தோட்ட த்தில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்ப ணிகள் மேற்கொண்டு முகப்பு மண்டபம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை மூலம் நிதி பெற்று தரகோரி அப்பகுதி பிரமுகர்கள் கென்னடி எம்.எல்.ஏ. விடம் கோரிகை விடுத்தனர்.
இது அடுத்து அப்பகுதி பிரமுகர்களை அழைத்து சென்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டார்.
அதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நிதி அளிக்க ஒப்பு கொண்டனர். இதன் முதல் கட்டமாக கோவில் திருப்பணிக்கு கென்னடி எம்.எல்.ஏ. ரூ.20 ஆயிரம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்கவேலு, கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் ஊர் பிரமுகர்கள் கோவில் பஞ்சாயத்தார்கள் உடன் இருந்தனர்.






