என் மலர்
புதுச்சேரி
- வசீகர பேச்சால் அந்த வாலிபர் மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.
- வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை நகரப்பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தற்போது பிளஸ்-2 முடித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டா கிராம் (சமூகவலை தளம்) மூலம் வாலிபர் ஒருவர் பழக்கமானார். தனது வசீகர பேச்சால் அந்த வாலிபர் மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.
இதன்பின் மாணவியின் புகைப்படம் ஒன்றை அவர் கேட்டுள்ளார். அதன்படி, மாணவியும் தனது புகைப் படத்தை அனுப்பியுள்ளார். அந்த படத்தை 'மார்பிங்' செய்து ஆபாசமாக சித்தரித்துள்ளார்.
இந்நிலையில் அந்த படத்தை அனுப்பி தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறி முறையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர்கள் கோரிமேடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அந்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சிவா எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு
- மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி:
ஒடிசாவில் கோர ரெயில் விபத்தை தொடர்ந்து மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் புதுவையில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தி.மு.க.வினர் அண்ணா சிலை அருகில் ஒன்று கூடி மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. செயலாளர் கபிரியேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சேதுசெல்வம் தி.மு.க. அவை தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பா ளர்கள் அனிபால் கென்னடி
எம்.எல்.ஏ, தைரியநாதன், ஏ.கே.கல்யாணி கிருஷ்ணன், பொருளாளர் செந்தில் குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், அருட்செல்வி,
பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கோபால்,கார்த்திகேயன், வேலவன், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம்பரிதி, பழனி, பிரபாகரன், மாறன் என்ற கனகராஜ், கோபால கிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ் மற்றும் அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து, மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரிசு கோப்பை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில வலைப்பந்து கழக அனுமதியுடன் உடன் அரியூர் தனசேகரன் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான 31-வது சீனியர் ஆண் பெண் மற்றும் 28-வது சப் ஜூனியர் ஜூனியர் சிறுவர் மற்றும் சிறுமியர் சாம்பியன்ஷிப் வலைப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரிசு கோப்பை வழங்கினார்.
துணை சபாநாயகர் ராஜவேலு புதுவை அமெச்சூர் வலை பந்து சங்க தலைவர் ராமு நாயக்கர், பொதுச் செயலாளர் தினேஷ்குமார், ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்தினார்.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
- ஆச்சாரியார் கல்விக் குழும தலைவர் அரவிந்தன் உள்ளிட்ட நலவாய்துறை, மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த மங்கலம் தொகுதி அரியூர் பகுதியில் உள்ள அரசு சுகாதாரம் மற்றும் நல வாழ்வு மையம் இயங்கி வருகிறது.
இங்கு பல ஆண்டு காலமாக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் தனியார் நிறுவன பங்காளிப்புடன் புதிய ஆம்புலன்ஸ் வசதி மற்றும் வாரந்தோறும் இலவச பல் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான தொடக்க விழா நடந்தது.
அமைச்சருர் தேனீ. ஜெயக்குமார் இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இலவச பல் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, ஆச்சாரியார் கல்விக் குழும தலைவர் அரவிந்தன் உள்ளிட்ட நலவாய்துறை, மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
- புதுவை அரசு சார்பில் மாகியில் நான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ெரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
விபத்து நடந்த உடனே ெரயில்வே துறையுடன் இணைந்து மீட்பு பணிக்கு உதவிய உள்ளூர் மக்கள், விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்ததானம் போன்ற பல்வேறு உதவிகள் செய்து வரும் ஒடிசா மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி, வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தழைக்கட்டும் மனித நேயம்.ெரயில்வே விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுவை அரசு சார்பில் மாகியில் நான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இங்கு பெட்ரோல் பங்க் தொழில் நடத்த முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர்.
- வில்லியனூர் அருகே பரபரப்பு
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த ஏம்பலம் பகுதி தவளக்குப்பம்-மடுகரை சாலையில் சண்முகராஜா (வயது 38), என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இந்த பெட்ரோல் பங்கில் ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் யுவராஜ் மற்றும் அய்யனார் ஆகியோர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ரூ.10 ஆயிரம் மாமூல் கேட்டனர்.
அவர்கள் தர மறுக்கவே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வெங்கடேஷ் மற்றும் ஜெயபிரகாஷை தரைக்குறைவான வார்த்தையால் ரவுடிகள் திட்டினர்.
இதனைப் பார்த்த பங்க் உரிமையாளர் சண்முகராஜா அங்கு வந்த ரவுடிகளுடன் மாமுல் தர முடியாது என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் யுவராஜ் மற்றும் அய்யனார் பங்க் உரிமையாளர் சண்முகராஜாவை சரமாரியாக தாக்கி எங்களுக்கு மாமுல் தரவில்லை என்றால்
உரிமையாளர் தாக்கப்படுவதை கண்டு அதனை தடுக்க வந்த ஊழியர்கள் வெங்கடேஷ் மற்றும் ஜெயப்பிரகாஷையும் ரவுடிகள் தாக்கினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் சண்முகராஜா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா வழக்கு பதிவு செய்து ரவுடி யுவராஜை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மற்றொரு ரவுடி அய்யனாரை தேடி வருகிறார்.
- மாணவர் கூட்டமைப்பு கண்டனம்
- தன்னாட்சி உரிமை பெற்ற கல்லூரி திடீரென தமிழ் பாடத்தை நீக்கியது ஏன்?
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு முதல் 3 பாடத் துறைகளில் மட்டுமே தமிழ் மொழி இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கு தமிழ் பாடம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
எல்லா துறைகளிலும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தை படித்து வந்த சூழ்நிலையில், தன்னாட்சி உரிமை பெற்ற கல்லூரி திடீரென தமிழ் பாடத்தை நீக்கியது ஏன்?
பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதுவை மாநிலத்தில் தாய்மொழி தமிழ் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் கட்டாயமாக தமிழ் வரும் என கூறப்படுவது கண்துடைப்பு நாடகம். தாய்மொழிக்கு பெரும் ஆபத்தை அரசு ஏற்படுத்துகிறது. பள்ளி முதல் கல்லூரி வரை தாய்மொழி பாடம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற அரசாணையை அரசு வெளியிடவில்லை.
வாய் வார்த்தையாக தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்கும் என முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர், கவர்னர் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். சி.பி.எஸ்.இ. பாடத்தை முற்றிலுமாக எதிர்ப்போம். மாநில வழி கல்வியை கொண்டு வர வலியு றுத்துவோம். தாய்மொழி அழிப்பை எதிர்த்து போராடுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
- சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக செல்வது ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒடிசாவில் ரெயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். இதேபோல புதுவையிலும் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா கோர ரெயில் விபத்து காரணமாக தலைவர் ஆணையின் படி புதுவை மாநில தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த கலைஞருடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக செல்வது ரத்து செய்யப்படுகிறது.
கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருக்கின்ற தலைவருடைய திருவுருவச் சிலைக்கு நேரடியாக வந்து மரியாதை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. சென்னையில் நடைபெறும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கழக நிர்வாகிகள் சென்னை செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மகளிர் காங்கிரஸ் குற்றச்சாட்டு
- காங்கிரஸ் மகளிர் அணி போராட தயங்காது.
புதுச்சேரி:
புதுவை மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
விளையாட்டில் வெற்றிகளை குவித்து நாட்டுக்கு பெருமை சேர்க்கும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு விசாரணைக்குக்கூட பா.ஜனதா முன்வராதது அதிர்ச்சியளிக்கிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தது ஏற்கத்தக்கதல்ல. இதன் மூலம் பெண்களுக்கு உரிய மரியாதை, பாதுகாப்பு இல்லை என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. மல்யுத்த வீராங்கணை களுக்கு உரிய நீதி கிடைக்கா விட்டால், காங்கிரஸ் மகளிர் அணி போராட தயங்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 4 ஆண்டுகளுக்கு முன்பு இருசப்பனை விட்டு பிரிந்து அவரது மனைவி ஜெயபிரதா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் இருசப்பன்(வயது35). இவர் திருவாண்டார் கோவில் பகுதியில் உள்ள எப்.சி. குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜெயபிரதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இருசப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருசப்பனை விட்டு பிரிந்து அவரது மனைவி ஜெயபிரதா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் இருசப்பன் மனவருத்தத்தில் இருந்து வந்தார். அடிக்கடி வாழபிடிக்கவில்லை என்று தனது தாயிடம் இருசப்பன் கூறி வருத்தப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் இருசப்பன் வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் வீடு திரும்பிய இருசப்பன் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு
- மறு சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்கட்டமை ப்பு மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார்.
இதில் பள்ளி உயர்கல்வித்துறை இயக்குனர் அமன் சர்மா, பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி, இணை இயக்குனர் சிவகாமி, கல்வித்துறை முதன்மை அதிகாரி தனசெல்வன் நேரு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாணிக்க வாசகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், மணவெளி தொகுதியில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அனைத்து பள்ளிகளில் தேவைப்படுகின்ற உள்கட்டமைப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த பள்ளி ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
- விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க புதுவை அரசு கட்டுப்பாடு அறையை திறந்துள்ளது.
- புதுவையை சேர்ந்தவர்கள் சிக்கி இருப்பதாக தெரிந்தால் அவர்களின் விபரங்களை தெரிவிக்கவும்
புதுச்சேரி:
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் புதுவையை சேர்ந்தவர்களும் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படு கிறது. இதனையடுத்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்க புதுவை அரசு கட்டுப்பாடு அறையை திறந்துள்ளது.
இதுதொடர்பாக புதுவை கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசாவில் நடத்த கோரமண்டல் ரெயில் விபத்தில் புதுவையை சேர்ந்தவர்கள் சிக்கி இருப்பதாக தெரிந்தால் அவர்களின் விபரங்களை தெரிவிக்கவும் மற்றும் அவரச உதவிக்கும், புதுவை மாநில அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கீழ்க்காணும் தொலைபேசி எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளவும்: 1070, 1077,112, 0413-2251003, 2255996. இந்த அவசரகால மையம் 24 மணி நேரமும் இயங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






