என் மலர்
புதுச்சேரி

மருத்துவத்துறையில் வளர்ந்துவரும் பயிற்சி தகுதியாக்கலுக்கான சர்வதேச மாநாடு புதுவை தனியார் ஓட்டலில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அமைப்பு தலைவர் வி.கே.சாமி அமைப்புச்செயலர் தமிழ்.கவுதம்ராஜ் உள்ளனர்
கல்லூரி-பள்ளிகளில் மறு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்
- அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு
- மறு சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்கட்டமை ப்பு மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார்.
இதில் பள்ளி உயர்கல்வித்துறை இயக்குனர் அமன் சர்மா, பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி, இணை இயக்குனர் சிவகாமி, கல்வித்துறை முதன்மை அதிகாரி தனசெல்வன் நேரு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாணிக்க வாசகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், மணவெளி தொகுதியில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அனைத்து பள்ளிகளில் தேவைப்படுகின்ற உள்கட்டமைப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த பள்ளி ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.






