என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கல்வி உரிமை மாநாட்டில் தீர்மானம்
    • புதுவை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியறுத்தி விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமை கூட்டமைப்பு மற்றும் புதுவை சமூக நல அமைப்புகள் சார்பில் கல்வி உரிமை நாடு  நடந்தது.

    ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சோழிய செட்டியார் சமுதாய கூடத்தில் நடந்த மாநாட்டில் சட்டக்கல்லூரி மாணவி சுகன்யா வரவேற்றார்.

    மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார். மக்கள் கல்வி இயக்கம் தலைவர் பேராசிரியர் பிரபா கல்விமணி கருத்துரையாற்றினார். சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட சிக்கல்கள் குறித்து தாய்மொழி வழிக்கல்வி கூட்டமைப்பு தலைவர் இளங்கோ பேசினார்.

    மாநாட்டில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழர் களம் செயலாளர் அழகர், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் வக்கீல் பரகத்துல்லா, புதுச்சேரி தன்னுரிமை இயக்கத் தலைவர் சடகோபன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் ராஜா, மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் தொடக்க கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை தமிழ் வழி கல்வியை செயல்படுத்த வேண்டும்.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைத அவசரகதியில் இந்த ஆண்டு புதுவை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியறுத்தி விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற நோக்கில் புதுவை காமராஜர் சிலை முன்பு நேரு எம்.எல்.ஏ, சிறுவர்கள் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    உயிர்நீத்தவர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செல்லப்பன், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியை சேர்ந்த மீனவர் மற்றும் முதியவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்ட மீனவ முதியவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரி அய்யனார், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், பொருளாளர் மணிமாறன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செல்லப்பன், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்

    • சிறுவன் உட்பட 2 பேர் கைது
    • ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ்சை வழிமறித்து இருவரும் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன். இவர் சம்பவத்தன்று பத்துக்கண்ணு வழியாக பைக்கில் திருபுவனை சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாகச் சென்ற தனியார் பஸ்சை வழிமறித்து 2 பேர் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அந்த வழியாகச் சென்ற அங்காளன் எம்.எல்.ஏ இதனை செல்போனில் வீடியோ எடுத்து போலீசாருக்கு அனுப்பினார்.

    அப்போது தகராறில் ஈடுபட்டவர்கள் அங்காளன் எம்.எல்.ஏ வீடியோ எடுப்பதை பார்த்து ஆத்திரமடைந்து அவரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் அங்கு சென்று இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காட்டேரி குப்பம் சுத்துக்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 22).

    இவருடன் சேர்ந்து தகராறிலா ஈடுபட்டது தொண்டமானத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் இருவரும் பைக்கில் சென்ற போது தனியார் பஸ் இவர்களை முந்திக் கொண்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ்சை வழிமறித்து இருவரும் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இருவரையும் பிடித்து உடைமைகளை சோதனை செய்ததில் ஜெயப்பிரகாஷ் கத்தி வைத்திருந்ததை போலீசார் கண்டனர்.

    இதை தொடர்ந்து கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் எம்.எல்.ஏ.வை மிரட்டிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
    • மாணவிக்கான தங்கப் பதக்கம் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவி ரேகாமது என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியில் 22-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி துணைத்தலைவர் சு.பழனிராஜா தலைமை தாங்கி கல்லூரி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    தொடர்ந்து கல்லூரி அளவில் நடந்த இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவ - மாணவிகளுக்கு முதல்வர் கா.உதயசூரியன் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

    மேலும் 2022-23 கல்வியாண்டின் சிறந்த கல்வியாளருக்கான தங்கப் பதக்கம் இளங்கலை வணிகவியல் துறையைச் சேர்ந்த நிவேதிதா என்ற மாணவிக்கும், சிறந்த விளையாட்டு வீரருக்கான தங்கப் பதக்கம் முதுகலை ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பீட்டர் ஆனந்த் என்ற மாணவருக்கும், இந்த கல்வியாண்டின் ஒட்டு மொத்த சிறந்த மாணவிக்கான தங்கப் பதக்கம் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவி ரேகாமது என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டது.

    இந்த கல்வி ஆண்டின் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது கணிக பிரியா, சத்யா , பரிமளா, அன்ன ஷீலா மற்றும் சிலம்பரசன் ஆகியோ ருக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கான விருது ஆன், சரஸ்வதி, அன்ன ஷீலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

    • கணபதி நகர் விரிவாக்கம், சக்தி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
    • வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர் பராமரிப்பு நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் 5-ந் தேதி மேற்கொள்ளப்படுகிறது. அதையொட்டி நாளை (திங்கட்கிழமை ) காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை , ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதிநகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர்,

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளிநகர், ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜே.ஜே. நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், உழவர்கரை

    பேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தர மூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணக்கரை , புதுநகர், ராமலிங்கா நகர், தட்சிணாமூர்த்தி நகர், ரங்காநகர், மேரி உழவர்கரை, டைமண்ட் நகர், ஜான்குமார் நகர், மோத்திலால் நகர், சிங்கப்பூர் அவன்யூ, பசும்பொன் நகர், எம்.ஜி.ஆர். நகர், கணபதி நகர் விரிவாக்கம், சக்தி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

    • இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து திருடனை தேடி வந்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் சாமுவேல். இவரின் பைக் திருட்டு போ னதால் உருளையன்பேட்டை போலீசில்   புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து திருடனை தேடி வந்தனர்.

    விசாரணையில், வளவனூர் அம்பேத்கர் வீதியை சேர்ந்த தீபக்ராஜ்(39) இந்த பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரை நேற்று போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், மூலக்குளம், வில்லியனூரில் மேலும் 2 பைக்குகளை திருடியதை ஒப்புக் கொண்டார். அந்த பைக்குகளையும் போலீசார் மீட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • வீடுகளில் முடங்கினாலும் அடிக்கடி மின்தடையால் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
    • அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்தே கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியது.

    கடந்த மே 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி கடந்த 29-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

    இந்த காலத்தில் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த 16-ந் தேதி அதிகபட்மசமாக 106.16 டிகிரி வெப்பம் பதிவானது. கத்திரி வெயில் முடிந்து ஒரு வாரமாகியும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நாள்தோறும் அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

    கடந்த 3 நாட்களாக வெப்பத்தின் அளவு 105 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகளில் முடங்கினாலும் அடிக்கடி மின்தடையால் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கு திசை காற்று, வெப்ப சலனம் காரணமாக புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையத்தின் அறிவிப்பு ஆறுதலை அளித்துள்ளது.

    எப்போது வெயிலின் தாக்கம் குறையும் என புதுவை மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

    • தேங்காய்திட்டு தி.மு.க. கிளை சார்பில் நடைபெற்றது.
    • தலைமை பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், தி.மு.க. கொடியினை ஏற்றிவைத்தார்.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா தேங்காய்திட்டு தி.மு.க். கிளை சார்பில் கொண்டாட்டப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் டெம்போ.பெருமாள் தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், தி.மு.க. கொடியினை ஏற்றிவைத்தார்.

    தொகுதிச் செயலாளர் சீத்தாராமன் இனிப்பு வழங்கினார்.

    விழாவில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார், அரங்க பன்னீர் செல்வம், முகுந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கம்யூனிஸ்டு (எம்.எல்) வலியுறுத்தல்
    • உயரிய பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட்டு (எம்.எல்) மாநில செயலாளர் புருஷோத்தமன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா கோர ரெயில் விபத்து பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததாலும் ஊழியர் பற்றாக்குறையாலும் ஏற்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதற்கு மோடி அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சகம் முழு பொறுப்பேற்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட, ரெயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கைவிட்டு, உயரிய பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாரதிதாசன் அறக்கட்டளை வலியுறுத்தல்
    • ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவுக்கு அறக் கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார். அரசியல் கலை இலக்கியப் பணிகளால் உயர்ந்திருக்கும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெருமை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் செயலாளர் வள்ளி, செல்வதுரை நீஸ் ,குரு முனிசாமி , தமிழ்ச் சங்கச்செயலர் அருள்செல்வம், படைப்பாளி ரமேஷ் பைரவி, ராஜேஷ், கிருஷ்ணகுமார் , கவிஞர் சரசுவதி வைத்தியநாதன், தேவமூர்த்தி, மலையன் ஸ்ரீகாந்த், வீணை கலாவதி, அன்பு நிலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டி கண்டனம்
    • புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி பொதுச்செயலாளர் தட்சணா மூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து மக்கள் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை நடைபெறும் முக்கிய நிகழ்வு. மதுபானம் கொடுத்து திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் குடிகாரர்களாக மதுபாட்டில் கொடுத்து திருமண வரவேற்பிற்கு வந்தவர்கள் அனைவரையும் கேவலப்படுத்தியது சட்டப்படி குற்றமாகும். மேலும் புதுவை அரசு கலால் துறை சட்டப்படி இந்த செயல் மிகவும் தவறாகும்.

    இது போன்ற மோசமான நிகழ்ச்சிகள் புதுவை மாநிலத்தில் நடக்காமல் புதுவை மாநிலம் அமைதியாக இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ×