என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 6 பேருக்கு வலைவீச்சு
    • கூட்டாளி விக்கி மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் எட்டியானிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோலாஸ் நகர் பிரான்சுவா தோப்பு பகுதியை சேர்ந்தவர் எட்டியான் என்ற பவுல்ராஜ் (வயது25). பெயிண்டர். திருமணமாகவில்லை.

    இவருக்கும் ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்த சேது என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பார்க்கும் இடங்களில் எல்லாம் தகராறு செய்வது போல் நடந்த கொள்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எட்டியான் உப்பளம் துறைமுக மைதானத்திற்கு சென்று இயற்கை உபாதை கழித்துவிட்டு வந்துக் கொண்டி

    ருந்தார்.அப்போது அங்கு வந்த சேது, அவரது கூட்டாளி விக்கி மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் எட்டியானிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் அவரை குத்தினர். மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த எட்டியான் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சேது உள்பட 6 பேரையும் தேடி வருகின்றனர்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 75 நீர் நிலைகளை மேம்படுத்தி பாதுகாக்க அம்ரித் சரோவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுவை அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம் வட்டார அலுவலகம் சார்பில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதி தவளக்குப்பம், பூரணாங்குப்பம், ஆண்டியார் பாளையம் அபிஷேகப்பாக்கம் டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது.

    சபாநாயகர் செல்வம் பொதுமக்களோடு இணைந்து பொங்கல் வைத்து மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணி, விரிவாக்க அதிகாரி கார்த்திகேயன், இளநிலை பொறியாளர் சிவஞானம் பணி ஆய்வாளர் நற்குணன் கிராம சேவாக் செந்தில், அரசு வட்டார வளர்ச்சி லட்சுமணன், சாந்தமூர்த்தி மற்றும் அப்பகுதியை முக்கிய பிரமுகர்கள் லட்சுமிகாந்தன், சக்திபாலன், சுகுமார், ஆறுமுகம், செல்வி, குமாரசாமி, மணி, தண்டபாணி, அய்யனார், சுப்பிரமணி, தமிழ், விஜி, திருஞானம், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வில்லிசை வேந்தர் பட்டாபிராமன் குழுவினரின் வில்லுப்பாட்டு இசை விழா நடைபெற்றது.
    • துணைச் செயலாளர் தினகரன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராசா, வேந்திரன் ஆனந்தராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

     புதுச்சேரி:

    அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை புதுவை கிளை சார்பில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் காட்டு மலர்களின் கூட்டுமணம் என்ற தலைப்பில் வில்லிசை வேந்தர் பட்டாபிராமன் குழுவினரின் வில்லுப்பாட்டு இசை விழா நடைபெற்றது.

    விழாவை புதுவைத் தமிழ் சங்கத் தலைவர் முத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாஸ், பொருளாளர் அருள்செல்வம் துணை தலைவர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் தினகரன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராசா, வேந்திரன் ஆனந்தராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நாட்டு வெடிகுண்டு பறிமுதல் விவகாரம்
    • வீட்டில் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் இருந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

    அதுபோல் நேற்று முன் தினம் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கிருமாம்பாக்கம் பகுதியில் இருந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக 3 பேர் கையில் பொருளை மறைத்தபடி வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் 3 பேரையும் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது24), ஜார்ஜ் பெர்னாண்டஸ் (21), ஸ்ரீதர் என்ற ஸ்ரீ (21) என்பவர்கள் தெரியவந்தது.

    விசாரணையில் கவுன்சிலர் வீரப்பன் மற்றும் சாம்பசிவம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட புகழ் என்பவர் பாதுகாப்புக்காக வைத்திருந்த 2 வெடிகுண்டுகளை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே புகழ் ஏற்கனவே தடையை மீறி ஊருக்குள் வந்து வீட்டில் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து புகழுக்கு கொடுத்தவர் யார்? என்பது குறித்து ஜெயிலில் இருக்கும் புகழை விசாரிக்க பாகூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக ஜெயிலில் இருக்கும் புகழை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது.
    • பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இதையொட்டி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது. மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் 2 நாட்களாக முகாம் நடந்தது.

    முகாமில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் வாகனங்களில் ஐகோர்ட்டு வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? வாகனங்கள் முறையாக பராமரிக்கப் பட்டுள்ளதா? மாணவர்களின் பயணத்துக்கு பாதுகாப்பாக உள்ளதா? என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    2 நாள் ஆய்வில் 273 வாகனங்களுக்கு அனுமதிக்கான மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 185 வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி, முதலுதவி பெட்டி மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த வாகனங்களில் குறைகளை நீக்கி மீண்டும் ஒரு வாரத்துக்குள் அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி பெறாத வாகனங்கள் பெர்மிட் முடக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • கூடுதல் படகுகள் இயக்கப்படுமா?
    • சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், 100 பேர் நின்றாலும், சரியாத கையில் பலமான படகு தளம் அமைக்க உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு ஏராளமானோர் வருகின்றனர்.

     படகுகள் மூலம் பயணித்து பேரடைஸ் தீவுக்கு சென்று கடலில் விளையாடி மகிழ்வதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். கோடை விடுமுறை என்பதால் கடந்த மாதம் முழுவதுமே புதுவைக்கு குடும்பம், குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.

    ஆனால், பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் படகுகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பேரடைஸ் தீவில் படகு நிறுத்தும் இடம் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை.

    இதையடுத்து பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், 100 பேர் நின்றாலும், சரியாத கையில் பலமான படகு தளம் அமைக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து படகுகளை சரிவர இயக்காமல், தனியார் படகு குழாமிற்கு ஆதரவாக ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதனால் மீண்டும் அமைச்சர் லட்சுமிநாராயணன் படகு குழாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். படகுகளை சீரமைத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கோடை விடுமுறையான  என 2 நாட்களில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து படகு சவாரி மூலம் ரூ.16 லட்சம் வருமானம் வந்துள்ளது.

    போதிய படகுகள் இல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் இல்லாத நிலையிலும் ரூ.16 லட்சம் 2 நாளில் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

    கோடை விடுமுறை முடிந்தாலும் வார விடுமுறை, பண்டிகை நாட்களில் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிவர். எனவே அரசு கூடுதல் படகுகளை இயக்கவும், சுற்றுலா பயணிகள் காத்திருக்காமல் பயணம் செய்யவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மணிமேகலை நகர், வின்சிட்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

    புதுச்சேரி:

    வில்லியனூர் துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    இதையொட்டி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வி.மணவெளி, ஜானகிராமன்நகர், பாரதிதாசன் நகர், கே.வி.நகர், ஐ.ஓ.சி. ரோடு, கண்ணதாசன் நகர், வி.தட்டாஞ்சாவடி மெயின்ரோடு, திருவேணி நகர், தில்லைநகர், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், பெரிய பேட், உத்திரவாகிணி பேட், புதுப்பேட், லூர்துநகர், கணுவாப்பேட், ஒதியம்பட்டு, பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர், வின்சிட்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

    • காதல் திருமணம் செய்த மனைவி தாக்கியதால் விபரிதம்.
    • குழந்தைகளை அழைத்துக்கொண்டு சூளை வேலைக்கு சென்று விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ஏம்பலம் அருகே மணக்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது45). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக சக்திவேல் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்தார். இதனால் விஜயலட்சுமி செங்கல் சூளை வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே அடிக்கடி மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு சக்திவேல் தொந்தரவு செய்து வந்தார். இந்த நிலையில்  மது குடித்து விட்டு வீட்டு வந்த சக்திவேல் மீண்டும் மது குடிக்க விஜய லட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் விஜய லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    மேலும் மனைவியும், குழந்தைகளையும் தாக்கினார். இதனால் கோபமடைந்த விஜயலட்சுமி அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து சக்திவேலை தாக்கினார்.

    பின்னர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சூளை வேலைக்கு சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த அஞ்சலி என்பவர் விஜயலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு உனது கணவர் வீட்டில் மின் விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதாக தெரிவித்தார்.

    காதல் மனைவி அடித்ததால் சக்திவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

     இந்த  சம்பவங்கள் குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • மக்கள் உயிரோடு விளையாடுவதை அரசு நிறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு மருத்துவ மனைகளில் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் உயிரை பாதுகாக்க கூடிய மருத்துவ மனைகளில் விபத்து காலங்களில் அவசர சிகிச்சை இல்லாமல் மக்கள் அல்லல்படுகின்றனர்.

    காரைக்காலில் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக சரியான மருத்துவ சிகிச்சை இல்லாததால் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே நிலை புதுவையின் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளது. தற்போது எம்.டி, எம்.எஸ், முடித்த 147 டாக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். டாக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 48 பார்மாசிஸ்ட் காலி பணியிடங்கள் உள்ளன.

    நிதித்துறை செயலாளர் தலைமை செயலாளரை காரணம் காட்டி மக்கள் உயிரோடு விளையாடுவதை அரசு நிறுத்த வேண்டும்.

    சுகாதாரத் துறையை தனது பொறுப்பில் வைத்துள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி இதன் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • பயிற்சியின்போது விடுமுறை நாளில் தனது சொந்த ஊருக்கு வந்த இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் அன்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • நீண்ட நேரம் ஆகியும் அன்பு அலுவலகத்திற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தனர்.

    சேதராப்பட்டு:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த இரும்புளி குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (வயது 30). இவருக்கு திருமணமாகவில்லை.

    கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    பயிற்சியின்போது விடுமுறை நாளில் தனது சொந்த ஊருக்கு வந்த இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் அன்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    போலீசாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறும் காலத்தில் இவரது மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. அவ்வப்போது இந்த விசாரணைக்கு அன்பு கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு புதுவை மேட்டுப் பாளையம் அருகே உள்ள தமிழகப் பகுதியான பூத்துறையில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் அன்பு மானேஜராக பணிக்கு சேர்ந்தார். அங்கு பணியாற்றும் நிறுவனம் அருகிலேயே அறையில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அன்பு அலுவலகத்திற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அன்பு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பார்சல் சர்வீஸ் நிறுவன உரிமையாளர் உமா சங்கருக்கும், ஆரோவில் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து அன்பு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவையில் இன்று 9 மையங்களில் நடைபெற்றது.
    • நவீன தொழில்நுட்ப சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை காவல் துறையில் காலியாக உள்ள 253 போலீஸ், 26 டிரைவர் பணியிடங்களை நிரப்ப கடந்த மார்ச் மாதம் உடல் தகுதி தேர்வு நடந்தது.

    இதில் போலீஸ் பணியிடத்துக்கு ஆண்கள் 2 ஆயிரத்து 91, பெண்கள் ஆயிரத்து 16 என மொத்தம் 3 ஆயிரத்து 107 பேர் தகுதி பெற்றனர்.

    டிரைவர் பணிக்கு 73 பேர் தேர்வு பெற்றனர். போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு நடந்தது.

    புதுவையில் லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாக்குமுடையான்பட்டு இதயா பெண்கள் கல்லூரி, சங்கரவித்யாலயா பள்ளி, விவேகானந்தா பள்ளி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் கல்லூரி, கருவடிகுப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம் 9 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.

    முதல்தாள் தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்தது. தேர்வர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. காலை 8 மணிக்கே தேர்வர்கள் வந்திருந்தனர்.

    முழுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உட்பட நவீன தொழில்நுட்ப சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு நடத்தப்பட்டது.

    தேர்வர்கள் ஆர்வத்துடன் தேர்வுகளை எழுதினர். அரசு செயலர் குமார் தலைமையில் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையினர் தேர்வுகளை நடத்தினர். இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 2-ம் தாள் தேர்வு நடக்கிறது.

    தேர்வு முடிவுகள் ஓரிருநாளில் அறிவிக்கப்பட உள்ளன.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. கடிதம்
    • பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

    புதுச்சேரி: 

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஒரு கடிதம் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் தொடர் வெயில் தாக்கத்தினால் பொதுமக்களும், வயதானவர்களும், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2 தினங்களாக வெயில் 105 பாரன்ஹீட் அளவை தாண்டியுள்ளது. தற்போதைய வெப்ப நிலையானது கடந்த மாதத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அஞ்சக்கூடிய நிலை உள்ளது.

    புதுவையில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் வருகிற 7-ந் தேதி தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

    தற்போதுள்ள சூழ்நிலையில் 30, 40 வயதுள்ளவர்களே வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் சிறு வயதுள்ள பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

    பல பள்ளிகளில் போதிய காற்று வசதியும் இல்லாத நிலையில் மாணவர்கள் வகுப்பறை யில் அமர்வதற்கே சிரமப்படுவார்கள். எனவே முதல்-அமைச்சர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை 7-ம் தேதிக்கு பதிலாக 15-ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளேன்.

    இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

    ×