search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • காதல் திருமணம் செய்த மனைவி தாக்கியதால் விபரிதம்.
    • குழந்தைகளை அழைத்துக்கொண்டு சூளை வேலைக்கு சென்று விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ஏம்பலம் அருகே மணக்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது45). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக சக்திவேல் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்தார். இதனால் விஜயலட்சுமி செங்கல் சூளை வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே அடிக்கடி மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு சக்திவேல் தொந்தரவு செய்து வந்தார். இந்த நிலையில் மது குடித்து விட்டு வீட்டு வந்த சக்திவேல் மீண்டும் மது குடிக்க விஜய லட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் விஜய லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    மேலும் மனைவியும், குழந்தைகளையும் தாக்கினார். இதனால் கோபமடைந்த விஜயலட்சுமி அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து சக்திவேலை தாக்கினார்.

    பின்னர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சூளை வேலைக்கு சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த அஞ்சலி என்பவர் விஜயலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு உனது கணவர் வீட்டில் மின் விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதாக தெரிவித்தார்.

    காதல் மனைவி அடித்ததால் சக்திவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    இந்த சம்பவங்கள் குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×