என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வையாபுரி மணிகண்டன் கண்டனம்
    • மீனவ சமுதாய மக்களுக்கு இனி எந்த சலுகையும் கிடையாது?

    புதுச்சேரி: 

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரிமணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மீன்வளத்துறை சார்பில் மீனவர்களின் தனிநபர் விபரம், குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. புதுவை அரசின் எந்த துறையிலும் இப்படி அடுக்கடுக்கான கேள்வி களை கேட்டது கிடையாது.

    மீன்களை பிடிக்கிறாயா? விற்கிறாயா? எந்தெந்த தெருக்களில் விற்கிறாய்? குடும்பத்தில் எத்தனை பேர்? அவர்கள் படித்துள் ளார்களா? மீன்பிடிக்கி றார்களா? வேறு வேலை செய்கிறார்களா?

    எந்த மாவட்டத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்களின் புகைப்படம் எங்கே? என கொடும் குற்றவாளிகள் போலவும், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக, போலியான தகவல்களை அளித்து மாபெரும் துரோகம் இழைப்பவர்கள் போலவும் மீனவ சமுதாய மக்களை என்ஆர்.காங்கிரஸ் அரசு கொச்சைப்படுத்துகிறது.

    படிவத்தின் இறுதி உறுதி மொழியிலும், தவறான தகவல்களை தெரிவித்தால், தண்டனை சட்டங்களின் கீழ் வழக்கு தொடர சம்மத மும் கோரப்பட்டுள்ளது.

    இதற்குமேல் மீனவ சமுதாய மக்களை புதுவையை ஆளும் அரசும், முதல்-அமைச்சரும் இழிவுபடுத்த முடியாது. மீனவ சமுதாய மக்களுக்கு இனி எந்த சலுகையும் கிடையாது? என்பதை இந்த படிவம் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் அரசு வெளிப்ப டுத்துகிறதா?

    முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு, தெற்கு உட்பட புதுவை மாநிலத்தில் வாழும் 18 மீனவ கிராம பஞ்சாயத்தில் வாழும் பெரும்பாலான பாமர, படிப்பறிவற்ற மீனவ சமுதாய மக்களை என்.ஆர்.காங்கிரஸ் அரசு மறை முகமாக வஞ்சிக்க நினைக்கி றதா? மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதை அ.தி.மு.க. சார்பில் வன்மை யாக கண்டிக்கிறோம். மீன்வளத்துறை வழங்கி வரும் இந்த படிவத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, திருச்சியில் சிறப்பு யாத்திரை பயணங்கள் நடத்தப்பட உள்ளது.
    • 7 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.42 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ரவிக்குமார் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் சிறப்பு ரெயில்கள், கல்வி சுற்றுலா, விமான பயண திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. சென்னை, திருச்சியில் சிறப்பு யாத்திரை பயணங்கள் நடத்தப்பட உள்ளது.

    இந்த பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் வருகிற ஜூலை 1-ந் தேதி கொச்சுவேலியில் தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும்பூர் ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.

    இந்த பயணம் ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவி தேவி, அமிர்தசரஸ், புதுடெல்லி ஆகிய இடங்களை பயணிகளுக்கு சுற்றிக்காட்டும்.

    11 பகல், 12 இரவுகள் ஸ்லீப்பர் வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ.23 ஆயிரத்து 350, ஏ.சி. வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ.40 ஆயிரத்து 350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சார்தாம் யாத்திரைக்கு வருகிற 28-ந் தேதி சென்னையிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு ரெயில் பயணம் செல்கிறது.

    13 நாட்கள் பயணத்துக்கு ரூ.61 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காசி, கயா சிறப்பு யாத்திரைக்கு வருகிற 16-ந் தேதி திருச்சியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு கயா, காசி, அலகாபாசத் அயோத்தியா செல்கிறது.

    7 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.42 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தகவல்களை இணையதளத்தில் பார்வையிடலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி
    • ஸ்மார்ட் சிட்டி செயல்பாடுகள் அதிகம் தாமதப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அவற்றை விரைவுபடுத்த கூறி வருகிறேன்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், முறைகேடுகள் நடை பெறுவதாக சுயேட்சை நேரு எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

    மேலும் தலைமை செய லகத்தை சமூக அமைப்பினர் மற்றும் தனது ஆதரவாளர்க ளுடன் சென்று முற்றுகை யிட்டார்.

    பின்னர், கம்பன் கலைய ரங்கில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்ற அரசு விழாவில் கேட் ஏறி குதித்து சென்று அங்கு அதிகாரிக ளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக மறுத்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்தும் நேர்மையாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது என்பது எனது கருத்து. ஒப்பந்த புள்ளிகளும் வெளிப்படையாக உள்ளது. தலைமைச் செயலர் இதற்கான வழிமுறைகளை நேர்மையாக நடத்தி வருகிறார்.

    முன்பு, ஸ்மார்ட் சிட்டி செயல்பாடுகள் அதிகம் தாமதப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அவற்றை விரைவுபடுத்த கூறி வருகிறேன்.

    மத்திய அரசின் வழிகாட்டு முறை கடந்த ஆட்சியில் பல முறை ஒப்பந்தபுள்ளி மறுக்கப்பட்டு தாமதப் படுத்தப்பட்டது. அந்தந்த நேரத்திற்குள்ளாக முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள் முடிக்கப் படாமல் இருந்தது. அவற்றை விரைவுப்படுத்த தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி வருகி றோம்.

    அனைத்தும் நேர்மையாக நடக்க வேண்டும் என்ப தற்காக மத்திய அரசின் வழிகாட்டு முறையை பின்பற்றப்படுகிறது. மற்றொன்று இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மை நிதி இந்த ஜூன் மாதத்தோடு முடிவ டைய இருந்தது. அதனால் நமக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் நின்று விடும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு வேண்டும் புதுவை பலனடைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி ஒரு ஆண்டுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் யாரும் அவநம்பிக்கையோடு இருக்கக் கூடாது. தவறுகள் இருந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும். மறைக் கப்படாது.

    தாமதப்படுத்தப் பட்டவை எல்லாம் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. நிறுத்த வேண்டிய சூழலில் இருந்தவை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் நேர்மறையான வளர்ச்சிகள். தவறுகள் நடைபெறுவது தெரிந்தால் அதற்கான விசாரணை அமைப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    • மின்நிலையத்தில் வருடாந்திர உபகரணங்கள் அளவு திருத்த பணிகள் நடைபெறுகிறது.
    • பாவானர் நகர், சிவா நகர், புது நகர், மூகாம்பிகை நகர் ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் துணை மின்நிலையத்தில் வருடாந்திர உபகரணங்கள் அளவு திருத்த பணிகள் மற்றம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் பகல் 1.30 வரை கோபாலன்கடை, முத்துபிள்ளைபாளையம், புது நகர், அம்மா நகர், அன்பு நகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவின்யு, பிச்சைவீரன்பட்டு, டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்,

    பாவேந்தர் நகர், சுப்பிரமணிபாரதி நகர், காரைகோவிந்தன் நகர், ரெட்டியார்பாளையம், ஆதிகேசவன் நகர், திரு நகர், சரநாராயண நகர், காவேரி நகர், பொருமாள் ராஜா கர்டண், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பாரிஸ் நகர், கோல்டன் அவின்யு, பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், ராகவேந்திரா நகர், பொன் நகர், அருள் நகர், சுதாகர் நகர்,

    பவழக்காரன்சாவடி, சத்திய சாய் நகர், ஜவகர் நகர், பாவானர் நகர், சிவா நகர், புது நகர், மூகாம்பிகை நகர் ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    • மணக்குள விநாயகர் கல்லூரியில் நடைபெற்றது.
    • ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜெயகவுரி, பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கலைவேந்தன் சிறப்புரையாற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள கல்வி அறக்கட்டளை, மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை, மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரி இணைந்து சர்வதேச செவிலியர் தின விழா நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.

    முதல்வர் முத்தமிழ் செல்வி வரவேற்றார். ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜெயகவுரி, பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கலைவேந்தன் சிறப்புரையாற்றினர்.

    இயக்குனர் ராஜ கோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை டீன் கார்த்திகேயன், ஆராய்ச்சி டீன் கலைசெல்வன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், செவிலியர் கண்காணிப்பாளர் கிரீட்டா குணசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பேராசிரியர்கள், செவிலிய மாணவ-மாணவிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின், பல்வேறு போட்டிகளில் வென்ற செவிலியர்கள், மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி செவிலிய கண்காணிப்பாளர் லீணா கிரேகஸ் நன்றி கூறினார்.

    • சுற்றுப்புற சூழலை பாதுகாக்க உறுதி மொழியினை வேளாண் அலுவலர் நடராஜன் வாசித்தார்.
    • வருவாய் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் உலக சுற்றுப்புற சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுப்புற சூழலுக்கு நன்மைதரும் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க உறுதி மொழியினை வேளாண் அலுவலர் நடராஜன் வாசித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஷ்வரி செயல்விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர், சண்முகம் மற்றும் மதகடிப்பட்டு உழவர் உதவியகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

    • கோவிந்து அந்த பெண்ணை கீழே பிடித்து தள்ளி விட்டு தப்பியோடி விட்டான்.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை வில்லியனூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயது பெண் தனது குழந்தைகளுடன் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். அவரது கணவர் காற்றுக்காக வீட்டின் வாசலில் தூங்கினார்.

    நள்ளிரவில் அந்த பெண்ணின் பக்கத்தில் யாரோ வாலிபர் படுத்திருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே லைட்டை போட்டு பார்த்துள்ளார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கோவிந்து படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட முயன்றார். ஆனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    ஆனாலும் அதனை மீறி அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். உடனே வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த அவரது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் கோவிந்து அந்த பெண்ணை கீழே பிடித்து தள்ளி விட்டு தப்பியோடி விட்டான்.

    இதற்கிடையே அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த மற்றொரு பெண் சிறிது நேரத்திற்கு முன்பு அதே வாலிபர் தனது வீட்டின் கதவை திறந்து தனது கையை பிடித்து இழுக்க முயன்றதாகவும், அவரை தள்ளிவிட்டுவிட்டு கதவை பூட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இது கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அந்த வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த வாலிபர் சிக்கவில்லை.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தை தேடி வந்த நிலையில், கூடப்பாக்கம் மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்த அவனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெயிண்டரான கோவிந்த் குடிபோதையில் வீடு வீடாக புகுந்து பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கோவிந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட கோவிந்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுவை கல்வித்துறையை கண்டித்து நடைபெற்றது.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அவசரகதியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். சென்டாக் மூலம் நடைபெறும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை குளறுபடி இன்றி விரைந்து நடத்திட வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.

    இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை திரும்ப பெற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுவை கல்வித்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்திய மாணவர் சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் கௌசிகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் வந்தனா அபிஜித், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பாஸ்கர், சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் செயலாளர் பிரவீன் குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செயலாளர் ஆனந்த் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

    மேலும் போராட்டத்தில் அன்பு, சத்தியா, ஜஸ்டின், புவியரசன், பாலா உள்பட கலந்து கொண்டனர்.

    • காங்- பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்பு
    • காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் கிராமத்தில் தீப ஒளி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்தப் பள்ளியில் வடிகால் வசதி வாய்க்காலுடன் உணவு அறை தரைதளம் அமைக்கும் பணிக்காக புதுவை பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் இந்தப் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது.

    வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் வடிகால் வசதியுடன் கூடிய தரைதளம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்க ப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திகேயன், பா.ஜனதா தொகுதி தலைவர் சாய்.தியாகராஜன் காங்கிரஸ் மாநில செயலாளர் ஊசுடு செந்தில்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் பாபு, பொதுக்குழு உறுப்பினர் பாபு என்ற பழநிராஜா, பா.ஜனதா நிர்வாகி தொண்டமாநத்தம் தமிழ் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
    • தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகளால் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும், குறைபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.

    பல கட்டுமான பணிகள் தடைபட்டு வேலைகள் நடைபெறாமல் உள்ளது என்றும் உயர் அதிகாரிகளின் அலட்சிய போக்கும் லஞ்ச ஊழலமே காரணம் என உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி இருந்தார்.

    மேலும் தனது தொகுதியில் ஒராண்டில் கட்டி முடித்திருக்க வேண்டிய அண்ணாதிடல் கட்டுமான பணி 2 ½ ஆண்டுகளை கடந்தும் காட்சி பொருளாக உள்ளது என்றும் புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் கூட செய்யவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

    அதோடு ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் நேரு எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.

    இதன்படி இன்று காலை தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.

    அவருடன் வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், தமிழர் களம் அழகர், திராவிடர் விடுதலை இயக்கம் லோகு.அய்யப்பன், நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தலைமை செயலகத்தின் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தலைமை செயலாளரை சந்திக்க வேண்டும் என கோரினர். ஆனால், தலைமை செயலாளர் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த உலக சுற்று சுழல் தின விழாவில் தலைமை செயலாளர் பங்கேற்று இருந்ததால் அங்கு சென்றனர்.

    மேடையில் விழா நடந்த போது நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளருடன் கிழே நின்றபடி தலைமை செயலாளருக்கு எதிராக பேசினார்.

    இதனால் விழா தடைப்பட்டது. மேடையில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோர் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர்.

    ஒரு கட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. விழாவில் முதலமைச்சர் பேச இடையூறு செய்யமால் வெளியேறுவதாக கூறி சென்றார்.

    அவருடன் வந்த ஆதரவாளர்களும் அங்கிருந்து சென்றனர். இதை தொடர்ந்து விழா நடந்தது.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு
    • ஒரு இளநிலைப் பொறியாளர் 3 டிவிஷன்களை சேர்த்து பார்க்கும் நிலையை மாற்றி ஒரு தொகுதிக்கு ஒரு இளநிலைப் பொறியாளர் என்று நியமிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை எதிர்கட்சித் தலைவர் சிவா வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறையில் போதிய ஆட்கள் இல்லாமல் மின்துறை செயலிழந்து முடங்கியுள்ளது.

    புதுவையின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. திடீர் என ஏற்படும் மின்சார நிறுத்தத்தை சரிசெய்தல், மின்மாற்றியில் பியூஸ் மாற்றுதல், மின்சார அளவீடு செய்தல் போன்ற முக்கியமான பணிகளுக்குக்கூட ஆட்கள் இல்லாமல் ஒப்பந்த பணியாளர்களை நம்பியே மின்துறை இருக்கிறது.

    புதுவை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நிலையை கையிள் எடுத்திருப்பதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். ஆனாலும் கூட மின்துறையில் ஏற்பட்டுள்ள ஆட்கள் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    மின்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்கள் பணிஓய்வு பெற்ற நிலையிலும், கடந்த 10 ஆண்டுகளாக புதிய ஆட்கள் ஏதும் எடுக்காத நிலையிலும் பணி நியமனம் இன்று கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு இளநிலைப் பொறியாளர் 3 டிவிஷன்களை சேர்த்து பார்க்கும் நிலையை மாற்றி ஒரு தொகுதிக்கு ஒரு இளநிலைப் பொறியாளர் என்று நியமிக்க வேண்டும்.

    மின்துறையில் உள்ள குறைபாடுகளை களைந்து, தேவையான ஆட்களை நியமனம் செய்து மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×