என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நள்ளிரவில் வீடு வீடாக புகுந்து பெண்களை செக்ஸ் டார்ச்சர் செய்த வாலிபர்- புதுச்சேரியில் பரபரப்பு
    X

    நள்ளிரவில் வீடு வீடாக புகுந்து பெண்களை செக்ஸ் டார்ச்சர் செய்த வாலிபர்- புதுச்சேரியில் பரபரப்பு

    • கோவிந்து அந்த பெண்ணை கீழே பிடித்து தள்ளி விட்டு தப்பியோடி விட்டான்.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை வில்லியனூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயது பெண் தனது குழந்தைகளுடன் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். அவரது கணவர் காற்றுக்காக வீட்டின் வாசலில் தூங்கினார்.

    நள்ளிரவில் அந்த பெண்ணின் பக்கத்தில் யாரோ வாலிபர் படுத்திருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே லைட்டை போட்டு பார்த்துள்ளார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கோவிந்து படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட முயன்றார். ஆனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    ஆனாலும் அதனை மீறி அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். உடனே வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த அவரது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் கோவிந்து அந்த பெண்ணை கீழே பிடித்து தள்ளி விட்டு தப்பியோடி விட்டான்.

    இதற்கிடையே அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த மற்றொரு பெண் சிறிது நேரத்திற்கு முன்பு அதே வாலிபர் தனது வீட்டின் கதவை திறந்து தனது கையை பிடித்து இழுக்க முயன்றதாகவும், அவரை தள்ளிவிட்டுவிட்டு கதவை பூட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

    இது கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அந்த வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த வாலிபர் சிக்கவில்லை.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தை தேடி வந்த நிலையில், கூடப்பாக்கம் மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்த அவனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெயிண்டரான கோவிந்த் குடிபோதையில் வீடு வீடாக புகுந்து பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கோவிந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட கோவிந்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×