என் மலர்
புதுச்சேரி
- மின்கட்டணம் மற்றும் நிலுவை தொகையை உரிய நேரத்தில் செலுத்திய மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்
- தவறும்பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை மின்துறை கிராமப்புற கோட்டம் (தெற்கு) செயற்பொறியாளர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்துறை கிராமப்புற கோட்டம் (தெற்கு) அலுவலகத்திற்குட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானூர், கரியமாணிக்கம், கரையாம்புத்தூர் ஆகிய பிரிவு அலுவலக பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களின் மின்கட்டணம் மற்றும் நிலுவை தொகையை உரிய நேரத்தில் செலுத்திய மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள். தவறும்பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் குமந்தான்மேடு கிராம மக்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
- புதுவை மாநிலம், பாகூர் தொகுதிக்குட்பட்ட குமந்தான்மேடு கிராமம் தமிழகம் மற்றும் புதுவை மாநில பகுதியில் அமைந்துள்ளது.
புதுச்சேரி:
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர்களை புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் குமந்தான்மேடு கிராம மக்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலம், பாகூர் தொகுதிக்குட்பட்ட குமந்தான்மேடு கிராமம் தமிழகம் மற்றும் புதுவை மாநில பகுதியில் அமைந்துள்ளது.
புதுவையை சேர்ந்த ஆராச்சிக்குப்பம், பரிக்கல்பட்டு, பாகூர் மற்றும் அதை சார்ந்த சுமார் 5 கிராம மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாட பணிகளுக்காக கடலூர் நகரத்தை சார்ந்தே உள்ளனர்.
குமந்தான்மேடு கிரா மத்தில் அமைந்துள்ள தரைப்பாலம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் அமைந்துள்ளது. இது மேற்கண்ட கிராம மக்கள் தினந்தோறும் கடலூர் சென்று வர ஏது வாக உள்ளது.
தற்பொழுது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் எதிரில் தரைப்பாலம் சந்திப்பில் தடுப்புச்சுவர், தமிழக அரசின் மூலமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தரைப்பாலம் வழியாக கடலூர் செல்லும் மக்கள் சுமார் 7 கி.மீ தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, தரைப்பாலம் வழியாக கடலூர் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இணைப்பு சாய்வு சாலை அமைத்துத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, தி.மு.க. தொகுதி செயலா ளர்கள் பாண்டு அரி கிருஷ்ணன், மணிகண்டன், அவைத் தலைவர் மூர்த்தி, பொருளாளர் பாவாடை, பிரதிநிதி பிரகாசம் மற்றும் தவ முருகன், முத்து, பாலகுரு, கண்ணன், சேகர், குமார், பார்த்திபன், சிவா, குமந்தான்மேடு பகுதி கிராம மக்கள் உடனிருந்தனர்.
- உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.
- மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி வந்தார்.
தனது தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அண்ணா திடல் மேம்பாட்டு பணி ஓராண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். 2½ ஆண்டாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.
அதோடு தரமில்லாமல் பணிகள் நடந்து வருகிறது. தொகுதிக்குட்பட்ட புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளை தொடங்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.
இதை கண்டித்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சேர்மனான தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவை கண்டித்தும் தலைமை செயலகத்தை நேற்று நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
ஆனால் தலைமை செயலாளர் அரசு விழாவில் பங்கேற்றிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்கள், சமூக நல அமைப்பினரோடு அரசு விழா நடந்த கம்பன் கலையரங்கிற்கு வந்தார்.
நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கம்பன் கலையரங்கின் 2 நுழைவு வாயில்களையும் போலீசார் மூடினர். மேலும் அங்கு வந்த நேரு எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நேரு எம்.எல்.ஏ கேட் மீது ஏறி குதித்து கம்பன் கலையரங்கில் உள்ளே சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கேட் ஏறி குதித்து சென்றனர்.
அங்கு உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.
மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.
இதனால் அரசு விழா சில நிமிடங்கள் தடைபட்டது. இதன்பின்னர் நேரு எம்.எல்.ஏ. விழாவில் முதலமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை என கூறி வெளியேறினார்.
இந்த நிலையில் கம்பன் கலையரங்கிற்கு நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்தும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.
அதோடு அரசு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏ.வை தடுப்பதா? என்ற கேள்வியும் எழுந்தது. அவரை மட்டும் அனுமதித்து, ஆதரவாளர்களை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கம்பன் கலையரங்கில் அரசு விழாவில் பாதுகாப்பு குறைபாடு புகாரை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த ஓதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, ஓதியஞ்சாலை போலீஸ் நிலைய பணிகளை கூடுதலாக கவனிப்பார் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், அரசு விழாவில் கேட் ஏறி குதித்து உள்ளே சென்று வாக்குவாதம் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்ப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி:
மறைந்த புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், தியாகியுமான வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி மறை மலை அடிகள் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள்
எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், அனந்தராமன் ஆகியோர் மாலை அணிவித்தனர். முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்ப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
எம்.ஏ.சண்முகம் நினைவு தினத்தையொட்டி இன்று மரப்பாலம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணைசபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் எம்.ஏ. சண்முகம் குடும்பத்தினரும் மற்றும் மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- அரசு விழாவில் கென்னடி எம்.எல்.ஏ. பேச்சு
- நகர்ப்புற பகுதி யில் நிலத்தடி நீரில் உள்ள டி.டி.எஸ். அளவு குறைய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண் டும்.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுவை நகர்ப்புறத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. நகர்ப்புற மக்களை கிராமப்புற மக்களால்தான் காப்பாற்ற முடியும்.
கர்நாடகா தான் நமக்கு தண்ணீர் கொடுக்க யோசிக்கிறார்கள் என்றால், கிராமப்புறத்தில் உள்ள மக்கள் கூட தண்ணீர் கொடுக்க யோசிக்கிறார்கள்.
கிராமப் புற மக்கள்தான் நகர்ப்புறத் திற்கு வருகிறார்கள். குடிநீர் மிகவும் முக்கியம். எனவே நகர்ப்புற பகுதியில் நிலத்தடி நீரில் உள்ள டி.டி.எஸ். அளவு குறைய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினையையும் தீர்த்து வைக்க வேண்டும்.
உப்பனாறு வாய்க்கால், பெரிய வாய்க்காலை தூர் வாரவேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் உத்தரவு போட வேண்டும். அவர் உத்தரவிட்டாலும் அதிகாரிகள் செய்யாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.
இதுகுறித்து கேட்டால் நிதி இல்லை என்கிறார்கள். சுற்றுச்சூழல்தினவிழா நடத்தினால் மட்டும் போதாது. ஊர் சுத்தமாக இருக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் போடும் உத்தரவுபடி அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.
வம்பாகீரப்பா ளையத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து லைட் ஹவுஸ் வரைக்கும் கடற்கரையோ ரம் கற்களை கொட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் அதிகாரிகளை அழைத்து ஊரை சுத்தமாகவும், அழகா கவும் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சுமார் 50 டிபென்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.
- நிறைவு விழாவில் அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அமைச்சுர் டிபன் டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் 3 நாட்கள் கவுண்டன் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, புதுவை, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சுமார் 50 டிபென்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியினை புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரும் டிபன் டோ சங்கத்தின் தலைவருமான கராத்தே சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
மேலும் நிறைவு விழாவில் அனைவருக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கினார். இதில் டெல்லியில் உள்ள பாரத்யா டிபென்டோ அலையன்ஸ் அசோசியேஷன் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மிதுன் யாதவ் மற்றும் புதுவை மாநிலத்தின் பொதுச் செயலாளர் ரகுமான் சேட்டு மற்றும் பயிற்சியாளர்கள் அசாருதீன், ரியாஸ்தீன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- பலத்த காற்று மழையால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- பேனர் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் பகுதியில் நேற்று மாலையி லிருந்து நள்ளிரவு வரை திடீர் தொடர் மழையாக பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக சாலை ஓரங்களிலும் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.
மேலும் இடி மின்னல் இருந்து வந்ததால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக புதுக்குப்பம், பிள்ளையார்குப்பம் பகுதியில் பாதித்திருந்தது. பிறகு அவ்வப்போது மின் துறை ஊழியர்கள் சரி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
கிருமாம்பாக்கம் கடலூர்-புதுவை ரோட்டில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல கன்னிய கோவில், முள்ளோடை பகுதியிலும் இருந்தது. இது சம்பந்தமாக பொதுமக்கள் சார்பில் போலீசுக்கு, பலத்த காற்று மழையால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் நேற்று இரவு மற்றும் இன்று காலை வரை பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றி வருகின்றனர். பேனர் வைத்ததை அகற்றும் போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு காணப்பட்டது.
இந்த நிலையில் போலீ சார் பேனர் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.
- இன்ஸ்பெக்டர் கணேசன் தொடங்கி வைத்தார்
- மாணவர்கள் பின்பற்ற வேண்டிய போக்கு வரத்து விதிகளை பற்றியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் எடுத்துரைத்தார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறு படைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயக மிஷன் ஆராய்ச்சி நிறுவ னத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு மிதி வண்டி பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் படி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் இயக்கு னர் (பொறுப்பு) ஆன்ட்ரூ ஜான் முன்னிலை வகித்தார்.
சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி நடை பெற்ற நிகழ்ச்சிக்கு கிருமாம் பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமை தாங்கி கொடியசைத்து மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் கல்வி ஒருங்கி ணைப்பாளர்கள் வளர்மதி, வெண்ணிலா, சப்-இன்ஸ்பெக் டர் பாஸ்கரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக மிதிவண்டி தின கொண்டாடுவதன் முக்கியத்து வத்தையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய போக்கு வரத்து விதிகளை பற்றியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் எடுத்துரைத்தார்.
சைக்கிள் பேரணி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கி கிருமாம் பாக்கம், பிள்ளையார் குப்பம் பனித் திட்டு வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது.
இதில் 40 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணிக் கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், கோவர்த விஷ்ணு மற்றும் மாணவர்கள், இளைஞர் மன்ற அமைப்பினர் ஆகியோர் செய்திருந்தனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை மற்றும் விழுப்புரம் பகுதியில் இருந்து பஸ்கள் சர்வீஸ் ரோடு வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார் கோவில், பகுதிகளில் மேம்பால பணிகள் முடிவடைந்த நிலையில் பஸ்கள் அவ்வழியாக மேம்பாலத்தில் செல்கின்றன.
சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் செல்வதில்லை. இதனை கண்டித்து திருவாண்டார் கோவில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருபுவனை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் அனைத்து பஸ்களும் சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். திருவாண்டார் கோவில் வழிதடத்தில் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆர்.டி.ஓ. அலுவலர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தப்படும் என்றும் அந்த கூட்டத்தில் இதுபற்றி பேசி முடிவு செய்யலாம் என்று போலீசார் சமரசம் செய்தனர்.
இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- நெட்டப்பாக்கம் அருகே நடந்த சோக சம்பவம்.
- ஜெயராமனுக்கு இன்சூலின் ஊசியை அவரது தம்பி சண்முகம் செலுத்துவது வழக்கம்.
புதுச்சேரி:
புதுவை நெட்டப்பாக்கம் அருகே மடுகரை சேடர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது56). இவரது மனைவி சிவகாமி. இவர் லாஸ்பேட்டை ஜெ.டி.எஸ். அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து மகன்களுடன் லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார்.
ஜெயராமன் பிளாஸ்டிக் பை வியாபாரம் செய்து கொண்டு தனது தம்பி சண்முகம் அரவணைப்பில் இருந்து வந்தார்.
ஜெயராமனுக்கு நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் தினமும் இன்சூலின் ஊசியை பயன்படுத்தி வந்தார். ஜெயராமனுக்கு இன்சூலின் ஊசியை அவரது தம்பி சண்முகம் செலுத்துவது வழக்கம்.
அதுபோல் சண்முகம் இன்சூலின் ஊசியை செலுத்த ஜெய ராமனின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஜெயராமன் வாயில் நுரை தள்ளியப்படி கையில் ரத்தம் கசிந்தவாறு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெயராமனை ஏதோ விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மூத்த மகன் சுகந்தன் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அச்சத்துடன் சாலையை கடக்கும் மக்கள்
- போலீசார் தடுப்புகளை வைத்து தற்காலிக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலை முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும்.
இங்கு போக்குவரத்தை நெறிமுறைப்படுத்த அமைக்கப் பட்டுள்ள சிக்னல் தூண் 2017-ம் ஆண்டு முதல் செயல்படுவதில்லை.
மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த இந்த போக்குவரத்து சிக்னல் தூண் வீசிய பலத்த காற்று மற்றும் மழையில் சாய்ந்தது. இது பொதுமக்கள் மீது விழுந்து விடாமல் இருப்பதற்கு போலீசார் தடுப்புகளை வைத்து தற்காலிக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எந்த நேரத்திலும் இது விழுந்து விடும் என்று அச்சத்தில் அப்பகுதியை மக்கள் கடக்கின்றனர்.
- ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் எச்சரிக்கை
- உயர்கல்வி கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட சில கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரி:
எஸ்.சி., எஸ்.டி. கல்வி ஊக்கத்தொகை குறித்த ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை பிப்மேட் அலுவலகத்தில் நடந்தது.
உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அமீன்சர்மா தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய்.ஜெ.இளங்கோவன், அனைத்து கல்லூரி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நலத்துறை இயக்குனர் சாய்.ஜெ. இளங்கோவன் பேசும்போது:-
கல்லூரிகளில் இருந்து வரும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப் படுவதில்லை. இதனால் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
உயர்கல்வி கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட சில கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எழுத்துப்பூர்வ புகார் பெறப்பட்டால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கல்லூரிகளிலும் நோடல் அதிகாரியை நியமிக்கவேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. ஊக்கத்தொகை விண்ணப் பங்கள், சந்தேகங்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, ஆய்வு செய்வது குறித்து விளக்கம் தரப்பட்டது.






