என் மலர்
புதுச்சேரி

சாலையில் தொங்கும் போக்குவரத்து சிக்னல் தூண்
கிழக்கு கடற்கரை சாலையில் தொங்கும் போக்குவரத்து சிக்னல் தூண்
- அச்சத்துடன் சாலையை கடக்கும் மக்கள்
- போலீசார் தடுப்புகளை வைத்து தற்காலிக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலை முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும்.
இங்கு போக்குவரத்தை நெறிமுறைப்படுத்த அமைக்கப் பட்டுள்ள சிக்னல் தூண் 2017-ம் ஆண்டு முதல் செயல்படுவதில்லை.
மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த இந்த போக்குவரத்து சிக்னல் தூண் வீசிய பலத்த காற்று மற்றும் மழையில் சாய்ந்தது. இது பொதுமக்கள் மீது விழுந்து விடாமல் இருப்பதற்கு போலீசார் தடுப்புகளை வைத்து தற்காலிக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எந்த நேரத்திலும் இது விழுந்து விடும் என்று அச்சத்தில் அப்பகுதியை மக்கள் கடக்கின்றனர்.
Next Story






