search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதல்-அமைச்சர் உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்
    X

    கோப்பு படம்.

    முதல்-அமைச்சர் உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்

    • அரசு விழாவில் கென்னடி எம்.எல்.ஏ. பேச்சு
    • நகர்ப்புற பகுதி யில் நிலத்தடி நீரில் உள்ள டி.டி.எஸ். அளவு குறைய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புதுவை நகர்ப்புறத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. நகர்ப்புற மக்களை கிராமப்புற மக்களால்தான் காப்பாற்ற முடியும்.

    கர்நாடகா தான் நமக்கு தண்ணீர் கொடுக்க யோசிக்கிறார்கள் என்றால், கிராமப்புறத்தில் உள்ள மக்கள் கூட தண்ணீர் கொடுக்க யோசிக்கிறார்கள்.

    கிராமப் புற மக்கள்தான் நகர்ப்புறத் திற்கு வருகிறார்கள். குடிநீர் மிகவும் முக்கியம். எனவே நகர்ப்புற பகுதியில் நிலத்தடி நீரில் உள்ள டி.டி.எஸ். அளவு குறைய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினையையும் தீர்த்து வைக்க வேண்டும்.

    உப்பனாறு வாய்க்கால், பெரிய வாய்க்காலை தூர் வாரவேண்டும். இதற்காக முதல்-அமைச்சர் உத்தரவு போட வேண்டும். அவர் உத்தரவிட்டாலும் அதிகாரிகள் செய்யாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.

    இதுகுறித்து கேட்டால் நிதி இல்லை என்கிறார்கள். சுற்றுச்சூழல்தினவிழா நடத்தினால் மட்டும் போதாது. ஊர் சுத்தமாக இருக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் போடும் உத்தரவுபடி அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    வம்பாகீரப்பா ளையத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து லைட் ஹவுஸ் வரைக்கும் கடற்கரையோ ரம் கற்களை கொட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் அதிகாரிகளை அழைத்து ஊரை சுத்தமாகவும், அழகா கவும் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×