என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன.
    • மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட த்தில், கடற்கரைச் சாலை மற்றும் அதனை சுற்றியு ள்ள போக்குவரத்து மிக்க முக்கிய சாலைகள் அனைத்தும் கால்நடைகள் உலா வும் சாலைகளாக மாறி வருகின்றன. மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன. இத னால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதற்கு காரைக்கால் நகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை வேறு இடத்திற்கு அப்புறபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காரைக்காலில் மாடுகளை சாலையில் திரியவிடக்கூடாது மீறினால், மாடுகள் பறிமுதல் செய்ய ப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர். ஆனாலும் மாடுக ளை சாலைகளில் விடுவது இன்னும் அரங்கேறி வருகி றது. இதனால் அவைகளை சாலையில் சுற்றிதிரிய விடும் உரிமையாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடு க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற னர்.

    • மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி வேண்டி காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும்.

    புதுச்சேரி:

    மல்யுத்த வீராங்கனை களுக்கு நீதி வேண்டி, காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், காரைக்கால் மதகடி பகுதியில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. காரைக்கால் கடற்கரை சலையில் உள்ள மதகடி பகுதியில் நடைபெற்ற, இந்த கண்டன ஆர்ப்பா ட்டத்தில், மல்யுத்த விராங்கணைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் யாராக இருப்பினும், அரசு அவர்களை உடனே பாரபட்சம் இன்றி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.

    மேலும் இந்த போராட்டத்தில் நியாயம் கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்கு உரிய நியாயத்தை அரசு பெற்றுத்தரவேண்டும். நாட்டுக்காக பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கணைகளை மதித்து நடக்கவேண்டும். இந்த வழக்கின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி, மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி மற்றும் நியாயம் பெற்றுததரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • காரைக்கால் நெடுங்காட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நெடுங்காடு குரும்பகரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது33) இவர் மனைவி மணிபாரதி. இவர்களுக்கு ஸ்ரீலக்சனா(5), ஸ்ரீ தனிஷ்(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சரவணக்குமார், நெடுங்காட்டில் உள்ள சிமெண்ட் கிராதி கடையில் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணகு மாருக்கு குடிபழக்கம் அதிகமானதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    மணிபாரதி, குழந்தை களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கணவன் மடைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலை கடை க்கு சென்று பார்த்தபோது அங்கு சரணவகுமார் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து மணி பாரதி, நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரி ன்பேரில் நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி குப்தா தலைமையிலான அதிகாரிகள் குழு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர்.
    • சென்னை கடலுர் வழித்தட ரெயில் சேவை திட்டம் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

    புதுச்சேரி:

    சென்னை தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி குப்தா தலைமையிலான அதிகாரிகள் குழு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர்.

    அப்போது புதுவை ரெயில்நிலையம் சேவை மேம்பாடு, புவிசார் குறியீடு பெற்ற சுடுகளிமண் சிற்ப அரங்கு அமைப்பது, வழிபாட்டு தலங்களுக்கு ரெயில்சேவை, வில்லியனூர் ரெயில்நிலைய மேம்பாடு, மகாபலிபுரம் வழியாக சென்னை கடலுர் வழித்தட ரெயில் சேவை திட்டம் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

    சேவை மேம்பாட்டு பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கும்படி கவர்னர் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலர்கள் முத்தம்மா, மணிகண்டன், அபிஜித்விஜய்சவுத்ரி, கலெக்டர் வல்லவன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமையில் அமைச்சர் சந்திர பிரியங்கவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    • இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமையில் நிர்வாகிகள் மங்கையர்கரசி, கயல்விழி, அம்சவள்ளி ஆகியோர் அமைச்சர் சந்திர பிரியங்கவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நகர் பகுதியில் வாழும் வீட்டு வேலை பணியா ளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் துறை சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகளை உருவாக்கி குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விட வேண்டும்.

    கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் நில அளவைத் துறைகள் மூலம் இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தொழிலாளர் நல வாரியத்தில் ஆண்டு தோறும் செலுத்த வேண்டிய உறுப்பினர் கட்டணத்தை ஆதிதிராவிட தொழிலாளர்களுக்கு சிறப்புக்கூறு நிதியிலிருந்து செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
    • கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து உட்பட நேரடி வழக்குகள் தீர்வு காணப்படுகிறது.

     புதுச்சேரி:

    புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவர் சஞ்சய்கிஷன் கவுல் உத்தரவின்பேரில் மாநில சட்டப்பணிகள் ஆணைய செயலர் தலைவர் மகாதேவன் வழிகாட்டுதலின்படி வருகிற 10-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவையில் நடக்கிறது.

    4 பிராந்தியங்களிலும் அந்தந்த நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் மக்கள் நீதிமன்றத்தில் சமாதானம் ஆகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து உட்பட நேரடி வழக்குகள் தீர்வு காணப்படுகிறது.

    இதில் தங்கள் வழக்குகளை சமாதானமாக தீர்க்க விரும்புவோர் வக்கீல்கள் மூலம் அணுகலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவையின் பிராந்தியமான மாகி கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது.
    • இங்கு 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையின் பிராந்தியமான மாகி கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது.

    இங்கு 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து புதுவை மீன்வளத்துறை மாகி மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைத்திரும்ப வேண்டும்.

    மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • புதுவை தர்மாபுரி கலைமகள் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.
    • புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை தர்மாபுரி கலைமகள் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் உழவர்கரை சக்திநகரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு வந்தார். அப்போது இவரது நண்பர்களான முத்திரையர்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், சக்திநகரை சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோர் நிதி நிறுவன ஊழியர் செந்தில்குமாரை மது குடிக்க அழைத்தனர்.

    அதற்கு செந்தில்குமார் வர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த செந்தில்குமார் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் ரெட்டி யார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னை - நாகப்பட்டினம் புதுவை - விழுப் புரம் தேசிய நெடுஞ்சாலை யில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.
    • குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    சென்னை-நாகப்பட்டினம் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை யில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இதில் 17 கிலோ மீட்டர் தூரத்திற்குள் முக்கிய கிராமங்களை இணைக்கும் பகுதியில் 5 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து மாறி, மாறி செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருபுவனை யில் ஏரிக்கரை சாலையில் உள்ள பனை மரங்களை அகற்றாமல் மேம்பால பணிகள் முடிவடைந்து தற்போது, மேம்பாலத்தின் வழியாக புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

    இதனால் பாலம் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிகள் நடந்து சென்று பாலத்தின் இறக்கத்தில் பஸ்சுக்காக காத்திருந்து பயணித்து வருகிறார்கள்.

    இந்த பகுதிகளில் பயணியர் நிழற்குடையோ, நிழலுக்கு மரங்களோ இல்லை இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள்.

    எனவே திருபுவனையில் பனைமர சாலையில் உள்ள பனை மரங்களை உடனடியாக அகற்றி அப்பகுதியில், சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், வெங்காய தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிலர் பண்ணை வைத்து பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்.
    • நாளுக்கு நாள் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேதாஜி நகர் பன்றிகள் கூடாரமாகமாறியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், வெங்காய தோப்பு உள் ளிட்ட பகுதிகளில் சிலர் பண்ணை வைத்து பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்.

     இதனால் அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பன் றிகள் சுற்றி திரிவதால் துர் நாற்றம் வீசி, பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. மேலும் சுகதார சீர்கேடு ஏற்படுவதுடன் குழந்தைகள், பெரியோர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேதாஜி நகர் பன்றிகள் கூடாரமாகமாறியுள்ளது.

    இதுசம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. விடம் பன்றிகளை அப்புறப்ப டுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

     அதன்பேரில் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை நகராட்சி ஆணை யர் சிவக்குமாரை நேரில் சந்தித்து பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தார்.

    தொடர்ந்து நேதாஜி நகர் அவ்வை தோட்டத் தில் கல்யாண மண்டபம் கட்டும் பணி, குபேர் மண் டபம் கட்டமைப்பு பணி, சின்ன மணிகூண்டு புதுப் பித்தல் பணியை விரை வாக தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு ஆணையர் நடவ டிக்கை எடுப்பதாக உறு தியளித்தார்.

    அப்போது தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளைச்செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வில்லியனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • புதுநகர் ஒரு பகுதி, ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில்நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி, ரோஜாநகர், அம்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலகுளம், ஜே.ஜே. நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவாநகர், உழவர்கரை பேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், கமலம் நகர், அணக்கரை, புதுநகர் ஒரு பகுதி, ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    • உயிர் இறந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கன்னியகோவில் பகுதியில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பாகூர் தொகுதி துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு பாகூர் தொகுதி சார்பில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிர் இறந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கன்னியகோவில் பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பாகூர் தொகுதி துணைத் தலைவர் மணிகண்டன் தலமை தாங்கினார். பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மெழுகு வத்தி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் முத்து, பாகூர் தொகுதி பொதுச் செயலாளர் தேவநாதன், தொகுதி தலைவர் மனோஜ் மற்றும் திராளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×