என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடலூர் மாவட்டம் பனங்காடு கிராமம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சகுந்தலா.
    • தமிழக பகுதியான பெரம்பையில் உள்ள தனியார் மனநல காப்ப கத்தில் அனுமதித்தனர்.

    புதுச்சேரி:-

    கடலூர் மாவட்டம் பனங்காடு கிராமம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சகுந்தலா. மனநலம் பாதிக்கப்பட்ட சகுந்தலாவை புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரம்பையில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் அனுமதித்தனர்.

    அங்கு தங்கியிருந்த சகுந்தலாவுக்கு திடீரென நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து காப்பகம் சார்பில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சகுந்தலா ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சகுந்தலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சகுந்தலாவின் கணவர் ராமமூர்த்தி ஆரோவில் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.
    • இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    புதுவை மருந்து உற்பத்தி யாளர்கள் சங்க அலுவ லகத்தில் நடந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்ட மைப்பின் வேண்டுகோளை ஏற்று வழுதாவூர் சாலை புதுவை எல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை யில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தி கொடுத்த

    தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹேம சந்திரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வருகிற 12-ந் தேதி குரும்பாப்பட்டு சமுதாய நல கூடத்தில் நடைபெறும் கண்காணிப்பு கேமரா தொடக்க நிகழ்ச்சி மற்றும் ஊசுடு தொகுதியை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தலைமை யில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    முடிவில் குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு செயலாளர் மோகன் நன்றி தெரிவித்தார்.

    • வில்லியனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பெருமாள்புரம், கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வில்லியனூர், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், திருகாமீஸ்வரர் நகர், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதிநகர், கண்ணகி நகர், கோட்டை மேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    • ரூ.38 லட்சம் 43ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • பூமி பூஜையை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி மடுகரை ரோட்டில் இருந்து நத்தமேடு வரை சுமார் 1½ கிலோ மீட்டரில் பழைய மண் பாதையில் மீது ரூ.38 லட்சம் 43ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதற்கான பூமி பூஜையை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித் துறை நீர்ப்பாசன பிரிவு கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • மதகடிப்பட்டு வாசவி கல்வியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • டாக்டர் கோபால், கல்லுாரி முதல்வர் சுபா. ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களிடம் கூறினர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு வாசவி கல்வியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கோபால், கல்லுாரி முதல்வர் சுபா. ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மாணவர்களிடம் கூறினர்.

    ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை- முற்றிலுமாக தவிர்த்தல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், அனல் மின்நிலையத்தில் இருந்து சூரிய சக்திக்கு மாறுதல், பசுமை காடுகளை அதிக ரிப்பதன் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப் பட்டது பின், மாணவர்கள் மரம் வளர்ப்போம், சுற்றுச் சூழலை பாது காப்போம் என உறுதிமொழி ஏற்ற னர். முடிவில், கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் பாட்டி இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
    • சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சோலை நகர் பகுதியில் 17 வயது சிறுமி பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருக்கு பெற்றோர் கிடையாது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜிப்மரில் காவலாளியாக வேலை செய்யும் ஸ்ரீதர் (வயது 37) என்பவர் அந்த சிறுமியிடம் பழகி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது பாட்டி வீட்டில் இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற ஸ்ரீதர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பாட்டி அவரிடம் விசாரணை நடத்தியபோது ஸ்ரீதரும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவா (47) என்பவரும் சிறுமியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகள் நலக்குழுவில் புகார் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், சிவா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை வருகிற 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை வருகிற 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவை மரப்பாலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சில நாட்களாக சிறப்பு வகுப்புகள் நடப்பதாக புகார் எழுந்தது.

    அதனைத் தொடர்ந்து பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள் வி.சி.சி. நாகராஜன் மற்றும் நாராயணசாமி ஆகியோர், பள்ளி முதல்வரிடம் விசாரித்தனர். ஆனால் பள்ளி முதல்வர் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து இணை இயக்குநர் சிவகாமி அப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதை கண்டார். உடனே வகுப்பில் இருந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்ததில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி இயங்கி வருவது தெரியவந்தது.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசின் உத்தரவை மீறி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க அந்த பள்ளிக்கு இணை இயக்குனர் சிவகாமி நோட்டீஸ் வழங்கினார்.

    தனியார் பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.
    • தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் அந்தந்த பகுதிகளில் சி.சி.டி.வி.பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவலின் பேரில் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ராம்கி (வயது21) என்ற வாலிபரை ஒதியஞ்சாலை போலீசார் பிடித்து நேற்று விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த ராம்கி திடீரென போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக வெளியேறி சாலையில் ஓடினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிச்சென்று விட்டார்.

    தலைமறைவான ராம்கியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் நிலையத்திலிருந்து வாலிபர் தப்பி ஓடியதும் அவரை போலீசார் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் போலீசார் திரும்பியதை கண்ட பொது மக்கள் புதுவை போலீசாரின் நிலையை கிண்டலாக பேசினர்.

    • சர்வதேச தரத்திலான ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டுள்ளது
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஜெகத்ரட்சகன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் சிகிச்சை கூடத்தை திறந்து வைத்தனர்.

    புதுச்சேரி:-

    புதுவை ஊசுட்டேரி அருகே அகரம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனை உள்ளது. இங்கு சர்வதேச தரத்திலான ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஜெகத்ரட்சகன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் சிகிச்சை கூடத்தை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருதினராக வைத்திலிங்கம் எம்.பி, அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், சம்பத், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி சிவக்குமார், தாம்பரம் துணை மேயர் காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன், அனந்தராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உலகத்தரம் வாய்ந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் இதயவி யல் நுண் துளை ஆய்வகம் 10 கோடி மதிப்பில் (கேத் லேப்) அமைக்கப்பட்டு ள்ளது.

    இந்தக் கருவி மூலம் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் அறுவை சிகிச்சை, பேஸ் மேக்கர், இபிஎஸ், ரேடியோ ப்ரீகுவன்சி அப்ளிகேஷன், வெஸ்குலார் செயல்முறை, நியூராலஜிக்கல், நியூராலஜிக்கல் அபுலேஷன் உள்ளிட்ட இதய பரிசோதனைகள் மற்றும் நரம்பியல் பரிசோதனைகள், சிகிச்சைகளை துல்லியமாக பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற வைக்கும் வகையில் கோ ஒலிம்பிக் என்ற வாசகத்துடன் கூடிய ஒலிம்பிக் கொடி அறிமுக விழா நடந்தது.
    • புதுவை மாநில ஒலிம்பிக் சங்க தலைவர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கொடியை அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ஒலிம்பிக் சங்கம் சார்பில், புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்குவிக்கவும், விளையாட்டு வீரர்களுக்கு நல்ல முறையில் பயிற்சியளித்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற வைக்கும் வகையில் கோ ஒலிம்பிக் என்ற வாசகத்துடன் கூடிய ஒலிம்பிக் கொடி அறிமுக விழா நடந்தது.

    புதுவை மாநில ஒலிம்பிக் சங்க தலைவர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கொடியை அறிமுகப்படுத்தி வெளியிட்டார். அதனை மாநில ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் கராத்தே வளவன் பெற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் தனசேகர், துணைத் தலைவர் குணசேகர், தலைமை செயல் அதிகாரி முத்து கேசவலு, செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், நிர்வாகி பிரேம் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஒலிம்பிக் கொடி ஒலிம்பிக் தினமான ஜூன் 23-ந் தேதி லாஸ்பேட் உள்விளையாட்டரங்கத்தில் அமைந்துள்ள பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத்தில் ஏற்றப்படும்.

    இந்த நிகழ்ச்சி 2024-ம் ஆண்டு பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் 2028 -ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் புதுவை மாநில விளையாட்டு வீரர்களை கலந்து கொள்வதற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

    • அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
    • இதனை கண்காணிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆர்.கே நகர் பகுதியில் உள்ள விளை யாட்டு மைதானம் அருகில் கஞ்சா விற்பதாக அரியாங் குப்பம் போலீசுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன் பேரில் நேற்று இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு சந்தேகப்படும் படியாக இருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி னர். அவர்கள் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்தி ருந்தது தெரியவந்தது.

    பிடிபட்ட 3 பேர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அரியாங்குப்பம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த அருண், சுப்பையா நகர் சதீஷ் என்ற ராமலிங்கம், மணவெளி, அரவிந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த மணிபாரதி என்பதும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிட மிருந்து 200 கிராம் கஞ்சா பொட்ட லங்கள், 2 செல்போன், ஒரு பைக் பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளி யாக உள்ள கொலையாளி முகிலன், சரண் தலைமறை வாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

    • தவளக்குப்பத்தில் இருந்து மடுகரை செல்ல தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது.
    • திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பாலத்தை உடைக்க ஏற்பாடு செய்திருந்தனர்‌.

    புதுச்சேரி:

    தவளக்குப்பத்தில் இருந்து மடுகரை செல்ல தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது.

    இதில் கரிக்கலாம்பாக்கத்தை அடுத்த நத்தமேடு கிராமத்தில் இருந்த குறுகிய பாலமாக இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது.

    இதனைத் தொடர்ந்து லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. சாலையை அகலப்படுத்தி புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை கடந்த 6 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை செய்யப்பட்டது.

    இந்த நிலையில்  திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பாலத்தை உடைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

    முதல் கட்டமாக மடுகரை யில் இருந்து வர வேண்டிய வாகனங்களையும், தவளக்குப்பத்தில் இருந்து வரும் வாகனங்களையும் தடுக்கும் வகையில் சாலை யின் குறுக்கே மண்ணை கொட்டி மேடு அமைத்தனர்.

    இதனால் அந்த வழியாக வந்தவர்கள் திடீரென மண் கொட்டி போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதைப்போல அரசு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.வும் கார்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

    பின்பு காரில் இருந்த ராஜவேலு, லட்சுமிகாந்தன் ஆகிய 2 பேரும் இறங்கி பாலத்திற்கு அருகே வந்து பார்த்த போது பாலத்தை உடைக்க ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் இதுகுறித்து அங்கி ருந்த அதிகாரி களிடமும், காண்ட்ராக்டரி டமும் விவரம் கேட்டறிந்தனர். பின்னர் பொதுமக்களை மாற்று விழியில் செல்ல ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    மேலும் இருபுறமும் மாற்று வழிக்கான பேனர் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதோடு போலீசாரை அந்த பகுதியில் பாதுகாப்புக்கு இருக்க வலியுறுத்தினர். 

    ×