என் மலர்
நீங்கள் தேடியது "Olympic flag"
- ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற வைக்கும் வகையில் கோ ஒலிம்பிக் என்ற வாசகத்துடன் கூடிய ஒலிம்பிக் கொடி அறிமுக விழா நடந்தது.
- புதுவை மாநில ஒலிம்பிக் சங்க தலைவர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கொடியை அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.
புதுச்சேரி:
புதுவை ஒலிம்பிக் சங்கம் சார்பில், புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்குவிக்கவும், விளையாட்டு வீரர்களுக்கு நல்ல முறையில் பயிற்சியளித்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற வைக்கும் வகையில் கோ ஒலிம்பிக் என்ற வாசகத்துடன் கூடிய ஒலிம்பிக் கொடி அறிமுக விழா நடந்தது.
புதுவை மாநில ஒலிம்பிக் சங்க தலைவர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கொடியை அறிமுகப்படுத்தி வெளியிட்டார். அதனை மாநில ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் கராத்தே வளவன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் தனசேகர், துணைத் தலைவர் குணசேகர், தலைமை செயல் அதிகாரி முத்து கேசவலு, செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், நிர்வாகி பிரேம் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒலிம்பிக் கொடி ஒலிம்பிக் தினமான ஜூன் 23-ந் தேதி லாஸ்பேட் உள்விளையாட்டரங்கத்தில் அமைந்துள்ள பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத்தில் ஏற்றப்படும்.
இந்த நிகழ்ச்சி 2024-ம் ஆண்டு பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் 2028 -ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் புதுவை மாநில விளையாட்டு வீரர்களை கலந்து கொள்வதற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமையும்.






