என் மலர்
புதுச்சேரி

ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆய்வகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து இயக்கி வைத்தார்.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை-சிகிச்சை கூடம்
- சர்வதேச தரத்திலான ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டுள்ளது
- முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஜெகத்ரட்சகன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் சிகிச்சை கூடத்தை திறந்து வைத்தனர்.
புதுச்சேரி:-
புதுவை ஊசுட்டேரி அருகே அகரம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனை உள்ளது. இங்கு சர்வதேச தரத்திலான ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஜெகத்ரட்சகன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் சிகிச்சை கூடத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருதினராக வைத்திலிங்கம் எம்.பி, அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், சம்பத், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி சிவக்குமார், தாம்பரம் துணை மேயர் காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன், அனந்தராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகத்தரம் வாய்ந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் இதயவி யல் நுண் துளை ஆய்வகம் 10 கோடி மதிப்பில் (கேத் லேப்) அமைக்கப்பட்டு ள்ளது.
இந்தக் கருவி மூலம் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் அறுவை சிகிச்சை, பேஸ் மேக்கர், இபிஎஸ், ரேடியோ ப்ரீகுவன்சி அப்ளிகேஷன், வெஸ்குலார் செயல்முறை, நியூராலஜிக்கல், நியூராலஜிக்கல் அபுலேஷன் உள்ளிட்ட இதய பரிசோதனைகள் மற்றும் நரம்பியல் பரிசோதனைகள், சிகிச்சைகளை துல்லியமாக பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.






