search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தமிழக அமைச்சர்களிடம் மனு
    X

    புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தமிழக அமைச்சர்களிடம் மனு அளித்த காட்சி.

    புதுவை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தமிழக அமைச்சர்களிடம் மனு

    • புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் குமந்தான்மேடு கிராம மக்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
    • புதுவை மாநிலம், பாகூர் தொகுதிக்குட்பட்ட குமந்தான்மேடு கிராமம் தமிழகம் மற்றும் புதுவை மாநில பகுதியில் அமைந்துள்ளது.

    புதுச்சேரி:

    தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றனர்.

    விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர்களை புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் குமந்தான்மேடு கிராம மக்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலம், பாகூர் தொகுதிக்குட்பட்ட குமந்தான்மேடு கிராமம் தமிழகம் மற்றும் புதுவை மாநில பகுதியில் அமைந்துள்ளது.

    புதுவையை சேர்ந்த ஆராச்சிக்குப்பம், பரிக்கல்பட்டு, பாகூர் மற்றும் அதை சார்ந்த சுமார் 5 கிராம மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாட பணிகளுக்காக கடலூர் நகரத்தை சார்ந்தே உள்ளனர்.

    குமந்தான்மேடு கிரா மத்தில் அமைந்துள்ள தரைப்பாலம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் அமைந்துள்ளது. இது மேற்கண்ட கிராம மக்கள் தினந்தோறும் கடலூர் சென்று வர ஏது வாக உள்ளது.

    தற்பொழுது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் எதிரில் தரைப்பாலம் சந்திப்பில் தடுப்புச்சுவர், தமிழக அரசின் மூலமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தரைப்பாலம் வழியாக கடலூர் செல்லும் மக்கள் சுமார் 7 கி.மீ தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே, தரைப்பாலம் வழியாக கடலூர் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இணைப்பு சாய்வு சாலை அமைத்துத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது, தி.மு.க. தொகுதி செயலா ளர்கள் பாண்டு அரி கிருஷ்ணன், மணிகண்டன், அவைத் தலைவர் மூர்த்தி, பொருளாளர் பாவாடை, பிரதிநிதி பிரகாசம் மற்றும் தவ முருகன், முத்து, பாலகுரு, கண்ணன், சேகர், குமார், பார்த்திபன், சிவா, குமந்தான்மேடு பகுதி கிராம மக்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×