search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பஸ்கள் நிறுத்தாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
    X

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ேபாலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    பஸ்கள் நிறுத்தாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை மற்றும் விழுப்புரம் பகுதியில் இருந்து பஸ்கள் சர்வீஸ் ரோடு வழியாக சென்று வருகின்றன.

    இந்நிலையில் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார் கோவில், பகுதிகளில் மேம்பால பணிகள் முடிவடைந்த நிலையில் பஸ்கள் அவ்வழியாக மேம்பாலத்தில் செல்கின்றன.

    சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் செல்வதில்லை. இதனை கண்டித்து திருவாண்டார் கோவில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருபுவனை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் அனைத்து பஸ்களும் சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். திருவாண்டார் கோவில் வழிதடத்தில் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஆர்.டி.ஓ. அலுவலர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தப்படும் என்றும் அந்த கூட்டத்தில் இதுபற்றி பேசி முடிவு செய்யலாம் என்று போலீசார் சமரசம் செய்தனர்.

    இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×