என் மலர்
புதுச்சேரி

கல்வித்துறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
- புதுவை கல்வித்துறையை கண்டித்து நடைபெற்றது.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் அவசரகதியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். சென்டாக் மூலம் நடைபெறும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை குளறுபடி இன்றி விரைந்து நடத்திட வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை திரும்ப பெற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுவை கல்வித்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் கௌசிகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் வந்தனா அபிஜித், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பாஸ்கர், சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் செயலாளர் பிரவீன் குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செயலாளர் ஆனந்த் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
மேலும் போராட்டத்தில் அன்பு, சத்தியா, ஜஸ்டின், புவியரசன், பாலா உள்பட கலந்து கொண்டனர்.






