என் மலர்
புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் கடிதம் அளித்த காட்சி. அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளார்.
பள்ளிகள் திறப்பை 15-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும்
- முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. கடிதம்
- பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஒரு கடிதம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தொடர் வெயில் தாக்கத்தினால் பொதுமக்களும், வயதானவர்களும், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2 தினங்களாக வெயில் 105 பாரன்ஹீட் அளவை தாண்டியுள்ளது. தற்போதைய வெப்ப நிலையானது கடந்த மாதத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அஞ்சக்கூடிய நிலை உள்ளது.
புதுவையில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் வருகிற 7-ந் தேதி தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் 30, 40 வயதுள்ளவர்களே வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் சிறு வயதுள்ள பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
பல பள்ளிகளில் போதிய காற்று வசதியும் இல்லாத நிலையில் மாணவர்கள் வகுப்பறை யில் அமர்வதற்கே சிரமப்படுவார்கள். எனவே முதல்-அமைச்சர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை 7-ம் தேதிக்கு பதிலாக 15-ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளேன்.
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.






