என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜெயிலில் உள்ள கைதியை விசாரிக்க போலீசார் முடிவு
    X

    கோப்பு படம்.

    ஜெயிலில் உள்ள கைதியை விசாரிக்க போலீசார் முடிவு

    • நாட்டு வெடிகுண்டு பறிமுதல் விவகாரம்
    • வீட்டில் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் இருந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

    அதுபோல் நேற்று முன் தினம் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கிருமாம்பாக்கம் பகுதியில் இருந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக 3 பேர் கையில் பொருளை மறைத்தபடி வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் 3 பேரையும் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது24), ஜார்ஜ் பெர்னாண்டஸ் (21), ஸ்ரீதர் என்ற ஸ்ரீ (21) என்பவர்கள் தெரியவந்தது.

    விசாரணையில் கவுன்சிலர் வீரப்பன் மற்றும் சாம்பசிவம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட புகழ் என்பவர் பாதுகாப்புக்காக வைத்திருந்த 2 வெடிகுண்டுகளை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே புகழ் ஏற்கனவே தடையை மீறி ஊருக்குள் வந்து வீட்டில் ஆயுதங்கள் வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து புகழுக்கு கொடுத்தவர் யார்? என்பது குறித்து ஜெயிலில் இருக்கும் புகழை விசாரிக்க பாகூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக ஜெயிலில் இருக்கும் புகழை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×