என் மலர்
புதுச்சேரி

சாரதா கங்காதாரன் கல்லூரியல் நடந்த ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
சாரதா கங்காதரன் கல்லூரி ஆண்டு விழா
- மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
- மாணவிக்கான தங்கப் பதக்கம் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவி ரேகாமது என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியில் 22-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி துணைத்தலைவர் சு.பழனிராஜா தலைமை தாங்கி கல்லூரி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து கல்லூரி அளவில் நடந்த இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவ - மாணவிகளுக்கு முதல்வர் கா.உதயசூரியன் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் 2022-23 கல்வியாண்டின் சிறந்த கல்வியாளருக்கான தங்கப் பதக்கம் இளங்கலை வணிகவியல் துறையைச் சேர்ந்த நிவேதிதா என்ற மாணவிக்கும், சிறந்த விளையாட்டு வீரருக்கான தங்கப் பதக்கம் முதுகலை ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பீட்டர் ஆனந்த் என்ற மாணவருக்கும், இந்த கல்வியாண்டின் ஒட்டு மொத்த சிறந்த மாணவிக்கான தங்கப் பதக்கம் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவி ரேகாமது என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டின் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது கணிக பிரியா, சத்யா , பரிமளா, அன்ன ஷீலா மற்றும் சிலம்பரசன் ஆகியோ ருக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கான விருது ஆன், சரஸ்வதி, அன்ன ஷீலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.






