என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி  அஞ்சலி
    X

    மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய காட்சி.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற நோக்கில் புதுவை காமராஜர் சிலை முன்பு நேரு எம்.எல்.ஏ, சிறுவர்கள் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    உயிர்நீத்தவர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

    Next Story
    ×