என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ரூ. 10 ஆயிரம் மாமுல் கேட்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியரை தாக்கிய ரவுடிகள்
- இங்கு பெட்ரோல் பங்க் தொழில் நடத்த முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர்.
- வில்லியனூர் அருகே பரபரப்பு
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த ஏம்பலம் பகுதி தவளக்குப்பம்-மடுகரை சாலையில் சண்முகராஜா (வயது 38), என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இந்த பெட்ரோல் பங்கில் ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் யுவராஜ் மற்றும் அய்யனார் ஆகியோர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ரூ.10 ஆயிரம் மாமூல் கேட்டனர்.
அவர்கள் தர மறுக்கவே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வெங்கடேஷ் மற்றும் ஜெயபிரகாஷை தரைக்குறைவான வார்த்தையால் ரவுடிகள் திட்டினர்.
இதனைப் பார்த்த பங்க் உரிமையாளர் சண்முகராஜா அங்கு வந்த ரவுடிகளுடன் மாமுல் தர முடியாது என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரவுடிகள் யுவராஜ் மற்றும் அய்யனார் பங்க் உரிமையாளர் சண்முகராஜாவை சரமாரியாக தாக்கி எங்களுக்கு மாமுல் தரவில்லை என்றால்
உரிமையாளர் தாக்கப்படுவதை கண்டு அதனை தடுக்க வந்த ஊழியர்கள் வெங்கடேஷ் மற்றும் ஜெயப்பிரகாஷையும் ரவுடிகள் தாக்கினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் சண்முகராஜா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா வழக்கு பதிவு செய்து ரவுடி யுவராஜை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மற்றொரு ரவுடி அய்யனாரை தேடி வருகிறார்.






