என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவை அரசு தமிழை சிதைக்கிறது
- மாணவர் கூட்டமைப்பு கண்டனம்
- தன்னாட்சி உரிமை பெற்ற கல்லூரி திடீரென தமிழ் பாடத்தை நீக்கியது ஏன்?
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு முதல் 3 பாடத் துறைகளில் மட்டுமே தமிழ் மொழி இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கு தமிழ் பாடம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
எல்லா துறைகளிலும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தை படித்து வந்த சூழ்நிலையில், தன்னாட்சி உரிமை பெற்ற கல்லூரி திடீரென தமிழ் பாடத்தை நீக்கியது ஏன்?
பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதுவை மாநிலத்தில் தாய்மொழி தமிழ் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் கட்டாயமாக தமிழ் வரும் என கூறப்படுவது கண்துடைப்பு நாடகம். தாய்மொழிக்கு பெரும் ஆபத்தை அரசு ஏற்படுத்துகிறது. பள்ளி முதல் கல்லூரி வரை தாய்மொழி பாடம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற அரசாணையை அரசு வெளியிடவில்லை.
வாய் வார்த்தையாக தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்கும் என முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர், கவர்னர் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். சி.பி.எஸ்.இ. பாடத்தை முற்றிலுமாக எதிர்ப்போம். மாநில வழி கல்வியை கொண்டு வர வலியு றுத்துவோம். தாய்மொழி அழிப்பை எதிர்த்து போராடுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






