search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகளை கண்டித்து முற்றுகை போராட்டம்
    X

    கோப்பு படம்.

    ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகளை கண்டித்து முற்றுகை போராட்டம்

    • நேரு எம்.எல்.ஏ. எச்சரிக்கை
    • உயரதிகாரிகளின் அலட்சியப்போக்கும், லஞ்ச ஊழலமே காரணம்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன் பேட்டை தொகுதி நேரு எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவையும் சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் புதுவை புது ப்பொலிவு பெற்றி ருக்கும். இதை செய்ய தவறியதால் புதுவை நகரம் சுகாதாரமற்ற குப்பை மேடுகளாக, வாய்க்கால்கள் துர்நாற்றத்துடன், புதர்கள் மண்டி சீர்கேடாக காட்சியளிக்கிறது.

    தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதுடன் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும், குறைபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.

    பல கட்டுமான பணிகள் தடைபட்டு வேலைகள் நடைபெறாமல் உள்ளது. இதற்கு உயரதிகாரிகளின் அலட்சியப்போக்கும், லஞ்ச ஊழலமே காரணம்.

    24 மணி நேர தடையில்லா மின்சாரம், சுகாதாரமான குடிநீர் வசதி, குற்ற செயல்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல், கழிவுநீர் வழிந்தோடாத சாலைகள், விபத்து ஏற்படா மல் தடுக்க ஆக்கிரமிப்பு இல்லா சாலைகள், பாதசாரிகள் நடந்து செல்ல ஆக்கிரமிப்பு இல்லா நடை பாதைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இத்திட்டத்தில் உள்ளன.

    ஆனால் இத்திட்டங்கள் முறையாக அதிகாரிகளால் செயல்படுத்தப்ப வில்லை. இதற்கு அண்ணா திடல் கட்டுமான பணியே சான்று. ஒரு ஆண்டில் முடிக்க வேண்டிய பணி, 2½ ஆண்டாகியும் முடிக்கப்படா மல் காட்சி ப்பொருளாக உள்ளது.

    இதிலும் பல குறைபாடுகள் உள்ளது. மத்திய அரசு இந்த மாதத்துடன் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை முடிக்க காலக்கெடு விதித்துள்ளது.

    உருளையன்பேட்டை தொகுதியில் எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. கண்காணிப்புகேமரா பொருத்தவில்லை,

    புதிய பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வில்லை. பயணிகளுக்கு குடிநீர்கூட கிடைக்க வில்லை. பெரிய மார்க்கெட்டும் சீர்கேடுடன் உள்ளது. தலைமை செயலரும் பணிகளை ஆய்வு செய்யவில்லை. இந்த குற்றசாட்டுகளுக்கு தலைமை செயலர் பொறுப்பேற்க வேண்டும்.

    கவர்னர் ஸ்மார்ட் சிட்டி குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என தெளிவுபடுத்த வேண்டும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து தலைமை செயலர், கவர்னரை கண்டித்து மக்களை திரட்டி, தலைமை செயலகம், கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×