என் மலர்
புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமி விவசாயிகளுக்கு உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கிய காட்சி.
விவசாயிகளுக்கு உபகரணங்கள் வாங்க மானியம்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
- பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை அரச வேளாண்துறை மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களை வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்த ப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.2 1/4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெறும் புதுவை பிராந்தியத்தை சேர்ந்த முதல் 7 பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினர். சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், செல்வகணபதி எம்.பி, ராமலிங்கம் எம்.எல்.ஏ, வேளாண் துறை இயக்குநனர் பாலகாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.






