என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

    வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரையும் மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புத்தகங்கள் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் தபால் வேன் மூலமாக அனுப்பும் பணி தொடங்கியது.

    இப்பணியை புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் பெங்களுருவில் இருந்தும், தமிழ் பாடப் புத்தகம் தமிழக பாடநூல் கழகத்தில் இருந்து வந்துள்ளது. பள்ளி சீருடைகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது.

    தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து கட்டணங்களை இறுதி செய்து வெளியிடுவார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் என்னை வந்து சந்தித்தனர். இது சம்பந்தமாக முதல்-அமைச்சர், துறைச் செயலரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    தமிழை கட்டாயப்பாடமாக்க என்னென்ன சாத்திய கூறுகள் இருக்கிறதோ, எந்தெந்த மாநிலங்களில் அதுபோன்று உள்ளதோ என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

    இதில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை. அவரவர் விரும்பும் பாட மொழியை எடுத்து படிக்கலாம். இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது தான் திணிப்பாகும்.

    இது தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை போக்க அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.

    • மல்டி லெவல் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?
    • சில நேரங்களில் 2 சக்கர வாகனங்களை நாங்கள் பறிமுதல் செய்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரதான சாலைகளில் அண்ணா சாலையும் ஒன்று. இங்குள்ள கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரள்வதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அண்ணா சாலையின் இருபுறமும் மினி லாரிகள், ஷேர் ஆட்டோக்கள், 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் விதியை மீறி நிறுத்தப்படுகின்றது.

    இதனால் ராஜா தியேட்டர் சந்திப்பில் இருந்து புஸ்ஸி தெரு சந்திப்பு வரை போக்குவரத்து மிகவும் நெரிசலாகவே காணப்படுகிறது.

    இதற்கு காரணம் போக்கு வரத்து போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் இல்லாததே என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு இடையூறாகவும் அந்த சாலை காணப்படுகிறது. மதுகடைகள் ஏராளமாக உள்ளதாலும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

    இதனால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் போக்குவரத்து துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து விதியை மீறுகிறவர்களுக்கு எதிராக அபராதம் விதித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தாலும் அவர்கள் விதியை மீறி தான் செல்கின்றனர்.

    சில நேரங்களில் 2 சக்கர வாகனங்களை நாங்கள் பறிமுதல் செய்கிறோம். 4 சக்கர வாகனங்களை கிரேன்கள் மூலம் எடுத்துச் செல்கிறோம். பெரும்பாலான வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடம் இல்லை.

    இதனால் அங்கு செல்கின்ற வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் நெரிசல் ஏற்படுகிறது.

    மல்டி லெவல் வாகன நிறுத்து மிடங்கள் வந்தால்தான் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அண்ணா சாலை மட்டு மல்லாது நேருவீதி, மகாத்மா காந்தி சாலை உள்ளிட்ட மிகப்பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இதற்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கூட்டத்தை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
    • வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஊரக வளர்ச்சித்துறையின் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஓட்டல் சன்வேயில் 2 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது.

    இதில் கோவா, அருணாச்சல பிரதேசம், ஹரியானா, நாகாலாந்து மற்றும் 5 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். முகாமில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சம்பத் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். கலெக்டர் வல்லவன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக துணை செயலர் நிவேதிதாபிரசாத், தேசிய வாழ்வதார இயக்கம் உஷாரணி, வசுதாசுக்லா, தேசிய வள நபர்கள் பிரியங்காஷகா, அர்ச்சனா கோஷ், ஜான்சிராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    வில்லியனூர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி வைஷாக்பாகி நன்றி கூறினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மத்திய தொகுப்பில் மின்சாரம் குறைந்துள்ளதால் மின் அழுத்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.
    • நகர் பகுதிகளிலும் திடீரென மின் அழுத்தம் கூடுவதும், பின்னர் குறைவதுமாக உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

    பிற மாநிலங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. புதுவை மாநிலத்தின் மின்தேவை சுமார் 600 மெகாவாட். சராசரியாக தினமும் 520 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து புதுவைக்கு வருகிறது.

    சில நாட்களாக மத்திய தொகுப்பிலிருந்து 400 மெகாவாட் மட்டுமே மின்சாரம் வருகிறது. 120 மெகா வாட் குறைந்துள்ளதால் புதுவையில் பல பகுதிகளில் மின் அழுத்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளது.

    கிராமப்புறங்கள் மட்டு மின்றி, நகர் பகுதிகளிலும் திடீரென மின் அழுத்தம் கூடுவதும், பின்னர் குறைவதுமாக உள்ளன.

    இதனால் மின்சாதன பொருட்கள் அதிகமாக சேதமடைகின்றன. வழக்கமாக கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும். மத்திய தொகுப்பில் மின்சாரம் குறைந்துள்ளதால் மின் அழுத்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.

    இதை சமாளிக்க மின் மாற்றியின் திறனை அதிகரிக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர்.
    • தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு உணவு அருந்தி செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    அந்த தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், லட்டு, சாக்லேட், சாத்துக்குடி, மாம்பழம், போட்டு கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் சிலர் சில்வர் தட்டு, கிப்ட் பாக்ஸ்கள் வைத்து கொடுப்பார்கள்.

    ஆனால் புதுச்சேரியில் மணமகள் வீட்டார் திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் சேர்த்து மது பாட்டிலையும் கொடுத்துள்ளனர். இது திருமணத்துக்கு வந்தவர்களை முகம் சுளிக்க வைத்தாலும் குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

    சென்னையை சேர்ந்த மணமகன் ஒருவருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமகள் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

    இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர். அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர். திருமணத்திற்கு வந்த குடிமகன் விருந்தாளிகளை இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திருமண மண்டபத்தில் இருந்த சில குடிமகன்கள் ஓடோடி சென்று போட்டி போட்டுக்கொண்டு தாம்பூல பையுடன் மதுபாட்டிலையும் வாங்கினர். இதற்காக அவர்கள் பெட்டி பெட்டியாக மதுபாட்டில் வாங்கி வைத்திருந்தனர்.

    ஆனால் சென்னையில் இருந்து வந்த மணமகன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். திருமணத்துக்கு வந்த பெண்கள் மற்றும் சிலர் முகம் சுளித்து சென்றனர்.

    • வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
    • 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தா னத்திற்கு உட்பட்ட, பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதித் திருவிழா, கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பி க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மல ர்களால் அலங்கரிக்கப்பட்ட மழை மாரியம்மன் கோவிலில் பிரகாரத்தை வலம் தீமிதி திருவிழா நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவில் தொகுதி எம்.எல்.ஏ.நாக.தியாகராஜன், பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
    • ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

    2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.

    2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடர்ந்து, 2018-19 வரையில் 5-ம் வகுப்புக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    தற்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது.

    இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

    இதன்படி வருகிற கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் புதுவை கல்வித்துறை இறங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 127 அரசு பள்ளிளுக்கும் தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது.

    தற்போது, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், விருப்பப் பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன.

    ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர். 4 முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாகியில் மலையாளமும் படித்தனர்.

    தற்போது சி.பி.எஸ்.இ. முறையின்படி 11-ம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தமிழ் கட்டாய பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்தித்டத்தை அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இதுபற்றி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அனுமதி கோரினோம். மத்திய அரசும் விதிமுறைகளை தளர்த்திதான் 127 பள்ளிகளுக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாய பாடமாக உள்ளதுபோல தமிழையும் கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

    தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழக பாடத்திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம்.

    நீட், ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் சங்கடம் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும்.
    • பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்துவது தொடர்பான, 3ம்கட்ட இறுதி ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை கலெக்ட ர்(வருவாய்) ஜான்சன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்(பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சித் துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை, காரைக்கால் நகராட்சி, கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அனைத்து துறை அதிகாரி களின் ஆலோ சனைகளை கேட்டறிந்த, துணை கலெக்டர் ஜான்சன் பேசியதாவது:-காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும். மருந்துகள் சரியான விலைக்கு விற்கப்ப டுகிறதா?, காலாவதியான மரு ந்துகள் விற்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். காரைக்கால் கடலில் இயங்கும் அனைத்து படகு களில் அரசு அறிவுறுத்திய வண்ணம் பூசப்பட வேண்டும். தேசியக்கொடியை பறக்க விட வேண்டும். வரிசை எண்ணை எழுதி வைக்க வேண்டும். அதேபோல், அனைத்து படகுகளிலும் பையோமெட்ரிக் கருவி பொருத்த வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக படகுகள், கடலில் வலம் வந்தால் மீனவர்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    மேலும், போலீசார், கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் அருகில் 100 மீட்டருக்குள் பெட்டி கடைகளை அனுமதிக்க கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில், அக்கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். போதை, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு வெள்ளி க்கிழமையும் மாலை நேரத்தில், கல்வித்துறையும் மற்றும் போலீசாரும் இணைந்து மாணவ ர்களிடையே போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக, காரைக்கால் மாவட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்ப ட்டால், அரசால் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொரு ட்களை முற்றிலும் ஒழிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
    • ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை அறிமுகப் படுத்துவது கல்வியை பாதிக்கும் என்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளிகளில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

     நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது. இதற்காக அரசு பள்ளி களில் படிக்கும் மாணவர்க ளுக்கு சி.பி.எஸ்.இ. பாடபுத்தகம் வழங்க அரசு கொள்முதல் செய்து வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாட வகுப்புகளை நடத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதேநேரத்தில் தமிழ் விருப்ப பாடமாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் தயாராகாத சூழ்நிலையில் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை அறிமுகப் படுத்துவது கல்வியை பாதிக்கும் என்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் சார்பில் நாளை கல்வித்துறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்தனர்.

    அப்போது, சமூகநல அமைப்பினர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாய்வழி மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையிலும் தாய்மொழி வழி கல்வியை பிரதானப் படுத்தப்பட்டுள்ளது. அதோடு, நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மருத்துவ கல்லுரியை தொடங்க வேண்டும் என்றும், அதிலும் தாய்மொழியிலேயே மாணவர்கள் மருத்துவம் படிக்க அந்தந்த பிராந்திய மொழிகளில் மருத்துவ கல்வியை தொடங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இத்தகைய சூழலில் தமிழை விருப்ப பாடமாக அரசு பள்ளிகளில் வைப்பது மத்திய அரசின் கொள்கைக்கு விரோதம். மேலும், கர்நாடக மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. கல்வியில் கன்னடம் கட்டாய பாடமாக்கப் பட்டுள்ளது. எனவே புதுவை அரசு பரிசீலனை செய்து தமிழை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். கல்வித்துறை செயலர் ஜவகரை அழைத்து ஆலோசனையும் நடத்தினர். தொடர்ந்து சமூகநல அமைப்பினரும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்படும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாய பாடமாக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசாணை பெறப்பட்டு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார்.

    இதையடுத்து நாளை கல்வித்துறை முற்றுகையிடும் போராட்டத்தை தள்ளி வைப்பதாக சமூக நல அமைப்பினர் தெரிவித்தனர். அதோடு, வருகிற 4-ந்தேதி அவசர கதியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றும், அரசு, தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

    • 16-ந் தேதி புதுவைக்கும் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • அரசு சித்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு ஜனாதிபதி முர்மு ஜூன் 6, 7-ந் தேதிகளில் வந்து நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    ஆனால் இந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி முர்மு வரும் 15-ந் தேதி தமிழகம் வருகிறார். சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கும் அவர், 16-ந் தேதி புதுவைக்கும் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    புதுவைக்கு வரும் ஜனாதிபதி அரசு சித்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்கிறார். பின்னர் கவர்னர் மாளிகையில் ஒய்வெடுத்துவிட்டு டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் கிராமமக்கள் வலியுறுத்தல்
    • 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    மங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பபட்ட திருக்காஞ்சியில் இணைப்பு கால்வாயை ரூ.12 1/4 லட்சத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.

     இந்த பணியை அமைச்சர் தேனீஜெயக்குமார்  தொடங்கி வைத்தார். அப்பகுதி கிராம மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர்கள், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

    பிற மாநிலங்களில் வழங்கப்படுவது போல ரூ.280 கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். அதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக்பாகி, உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர்கள் ராமநாதன், செங்கதிர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • கம்பன் கலையரங்கில் இருந்து கடற்கரை சாலை காந்தி திடல் வரை பேரணி நடந்தது.
    • பக்கவாதம், நாட்பட்ட சுவாச நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திபடி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

     புதுச்சேரி:

    புதுவை அரசின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், மார்புநோய் நிலையம் இணைந்து உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    நமக்கு தேவை உணவு, புகையிலை இல்லை என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி கம்பன் கலையரங்கில் இருந்து கடற்கரை சாலை காந்தி திடல் வரை பேரணி நடந்தது.

    பேரணியை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார். மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ், ஆலோசகர் சூரியகுமார், மணிமாறன் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி, இந்திராகாந்தி பல் மருத்துவ கல்லூரி, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் புகையிலையினால் ஏற்படக்கூடிய நுரையீரல், வாய், தொண்டை புற்றுநோய், இதயநோய்கள், பக்கவாதம், நாட்பட்ட சுவாச நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திபடி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×