என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    கல்லூரி மாணவர்கள் பேரணி நடைபெற்ற காட்சி.

    புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • கம்பன் கலையரங்கில் இருந்து கடற்கரை சாலை காந்தி திடல் வரை பேரணி நடந்தது.
    • பக்கவாதம், நாட்பட்ட சுவாச நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திபடி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், மார்புநோய் நிலையம் இணைந்து உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    நமக்கு தேவை உணவு, புகையிலை இல்லை என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி கம்பன் கலையரங்கில் இருந்து கடற்கரை சாலை காந்தி திடல் வரை பேரணி நடந்தது.

    பேரணியை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார். மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ், ஆலோசகர் சூரியகுமார், மணிமாறன் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி, இந்திராகாந்தி பல் மருத்துவ கல்லூரி, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

    ஊர்வலத்தில் புகையிலையினால் ஏற்படக்கூடிய நுரையீரல், வாய், தொண்டை புற்றுநோய், இதயநோய்கள், பக்கவாதம், நாட்பட்ட சுவாச நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திபடி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×