என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
    • விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை எம்.ஆர். சுப்புராயன் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார்.

    முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று வடுவகுப்பம், பண்டசோழ நல்லூர், நெட்டப்பாக்கம், சூரமங்கலம், ஏரிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.

    • தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
    • ஊர் முக்கிய பிரமுகர்கள் மாயகிருஷ்ணன், ஹேமாமாலனி, முருகன் மற்றும் செந்தில் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    சூர்யோதை தொண்டு நிறுவனம் சார்பில் அபிஷேகபாக்கம் கிராமத்தில் மருத்துவ முகாம்  நடைபெற்றது. இதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து மருத்துவக்குழு வருகை வந்து மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்கினார்கள்.

    இதில், ஊர் முக்கிய பிரமுகர்கள் மாயகிருஷ்ணன், ஹேமாமாலனி, முருகன் மற்றும் செந்தில் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், சூர்யோதை தொண்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஜெயராஜன், நிர்வாகிகள் புஷ்பராஜ் மற்றும் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமி 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

    பெற்றோர், மாணவர் நலச்சங்கம் வலியுறுத்தல்

    புதுச்சேரி:

    புதுவை பெற்றோர், மாணவர் நலச்சங்க தலைவர் வை.பாலா என்ற பாலசுப்பிரமணியன் கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்டாக் நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வாணையம் மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட உள்ளது.

    இதில் புதுவை மாணவர்களுக்கான தரவரிசை பட்டிய லில் தவறுதலாக வெளிமாநில மாணவர்கள் இருந்தால் அவர்களை நீக்கம் செய்ய வேண்டும். புதுவை மண்ணின் மைந்தர் களை மட்டுமே கொண்ட தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும்.

    3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 328 இடங்களில் 50 சதவீத 164 இடங்கள் தேசிய மருத்துவ கமிட்டி விதி யின்படி பெறப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு புதிய அனுமதி பெற்றாலும், அதிலும் சரிபாதி இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும்.

    சென்டாக் கலந்தாய்வுக்கு முன்பு அரசு, நிர்வாக ஒதுக்கீடாக பெற்ற இடங்களின் விபரங்களை அறிவிக்க வேண்டும். கல்வி கட்டண விபரங்களையும் சென்டாக் இணையதளத்தில் வெளியிட வேண்டும். உயர்கல்வி கட்டணக்குழு தலைவர், உறுப்பினர்களை அறிவிக்க வேண்டும்.

    சென்டாக் நிர்வாகத்தில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களின் இருப்பிடம், சாதி, படிப்பு சான்றிதழ்களை சரிபார்த்து, குறைகளை களைந்து புதுவை மாநில மாணவர்களின் உரிமை களை நிலைநாட்ட வேண்டும்.

    இவ்வாறு வை.பாலா குறிப்பிட்டுள்ளார்.

    • மயிலம் பொம்மபுர ஆதீனம் பங்கேற்பு
    • தனபூஜை கன்னி யாஸ்திரிபூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மொரட்டாண்டி கிராமத்தில் தொல்லைகாது சித்தர் வழிபட்டு ஞானம் பெற்ற சுந்தர விநாயகர் கோயிலில் புதியதாக 27 அடி உயரத்தில் சுந்தர விநாயகர் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு மற்றும் துலுக்கானத்தம்மன் கோயில் பூர்ண புஷ்கலா சமேத அண்ணமார் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

     காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுந்தர விநாயகர் கோயில் கும்பாபி ஷேகம் 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் துலுக்கா னத்தம்மன் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூரண புஷ்கலா சமேத அண்ணமார் கோயில் கும்பாபிஷேகமும் நடை பெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி முன்தினம் 29-ம் தேதி தேவதா அனுஞ்யை, எஜமான அனுஞ்யை, கணபதி ஹோமம் நவகிரக ஹோமம், மகாலட்சுமி கோமத்துடன் பூஜை தொடங்கியது. நேற்று கோ பூஜையுடன் தொடங்கிய கும்பாபி ஷேகம் ரிஷப பூஜை அஸ்வபூஜை, கஜ பூஜை, தனபூஜை கன்னி யாஸ்திரிபூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை நடந்தது.

    பின்னர் மொரட்டாண்டி ஆண்டி குளத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. யாகசாலை பிரவேசம் அங்குரார்ப னம், பிரவேசம் ரக்க்ஷாபந்தனம், கும்பஅலங்கா ரம் முதல் கால யாக வேள்வி ஆகியவை நடந்தது. 7 மணிக்கு மங்கள இசையுடன் விசேஷ சந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

    காலை 11 மணிக்கு புதிய சிலைகளுக்கு அஷ்டதச கிரியை கண் திறப்பு மற்றும் புதிய சிலைகள் கோபுர கலசம் கரிக்கோலம் வருதல் நிகழ்ச்சி மற்றும் 2-ம் கால யாக கேள்வி நடந்தது. தொடர்ந்து மங்கள இசை உடன் விசேஷ சந்தி பூதசுத்தி அந்தர் யாகம் யாகசாலை பிரவேசம் சூரிய பூஜை சந்திர பூஜை பேரிக அர்ச்சனை நவசக்தி அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை காலை 5.30 மணிக்கு யாக சாலை பிரவேசம் சூரிய பூஜை சந்திரபோஸ் உடன் கலசம் புறப்பாடு நடந்து மயிலம் பொம்மபுர ஆதீனம் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய திருக்கோயில் இருபதாம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபி ஷேகமும் 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் துலுக்கானத்தம்மன் பரிவார தெய்வங்களுக்கு மற்றும் பூரண புஷ்கல சமேத அண்ணா கோயில் குடமுழுக்கு நன்னீராட்டும் நடைபெறுகிறது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் மொரட்டாண்டி சனி பகவான் கோயில் நிறுவனர் டாக்டர் சிவஸ்ரீ சிதம்பர சீதாராம குருக்கள், புது க்கோட்டை புவனேஸ்வரி அவதூத்த வித்யா பீடம் பூஜ்ஜியஸ்ரீ பிரணவாந்த சுவாமிகள், திருப்பூர் பல்லடம் பிரத்தகிரி சுவாமி கள் பிரம்மஸ்ரீ சாம்ப சிவரிஷீஸ்வர், பாதாள பிரதயாங்கர்கர கோயில் மடாதிபதி பிரம்மஸ்ரீ நடாத்தூர் ஜனார்த்தன சுவாமிகள், அங்காள பரமேஸ்வரி கோயில் பிரம்மஸ்ரீ பத்மநாப சாமிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்று கும்பாபிஷே கத்தை நடத்தி வைக்கின்றனர். கும்பாபிஷேக ஏற்பாட்டினை மொரட்டாண்டி கிராம நாட்டா ண்மைகள், ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் செய்துள்ளனர். கும்பாபிஷேக விழாவை யொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் விசேஷ வானவே டிக்கையும் நடைபெறுகிறது.

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • மருத்துவ மாணவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    இங்கு மாணவர்க ளுக்கு தேவையான தங்கும் இடம், ஆய்வகங்கள், நூலகம், பரிசோதனைக் கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா? என்பதை பல்கலைக்கழக நிர்வாகமும் அரசும் ஆய்வு செய்வதே இல்லை.

    புதுவை பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 4 மருத்துவக்கல்லூரிகளில் 600 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள் தோல்வி பயம் காரணமாக 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வை எழுத வில்லை. தேர்வு எழுதிய 500 மாணவர்களிலும் 250-க்கும் மேற்பட்ட மாண வர்கள் செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

    மருத்துவ கல்வியை முழுமையாக மாணவர்க ளால் கற்க முடியாமல் போவதற்கு யார் காரணம்? சுயலாப நோக்கத்தால், தனியார் மருத்துவக்கல்லூரிகளின் அத்துமீறல்கள், கவன குறைவுகளை புதுவை பல்கலைக்கழகமும், அரசும் கண்டுகொள்வதில்லை.

    இதுவே மாணவர்களின் தேர்வுபயம், தோல்விக்கு காரணம். புதுவை அரசும், பல்கலைக்கழகமும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்து மாணவர்க ளின் குறைகளை கேட்ட றிந்து களைய வேண்டும். மருத்துவ மாணவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது.
    • மணவாளன், நாகராஜ், கோவிந்தன், சதீஷ், முகுந்தன், குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டார காங்கிரஸ் தலைவர் கே. கிருஷ்ணராஜ் தலைமையில் புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது.

    விழாவில் மாநில பொதுச் செயலாளர் இளையராஜா, மாநில செயலாளர் தாண்டவன், மாவட்ட நிர்வாகிகள் செல்வம், சீதாராமன், அகிலன், புகழேந்தி, மணவாளன், நாகராஜ், கோவிந்தன், சதீஷ், முகுந்தன், குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்.
    • ஓய்வூதியத்திற்கான ஆணை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலம் மூலம் உப்பளம் தொகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் தொகை பெறுவதற்கான ஆணையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுமக்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வழங்கினார்.

    பயனாளிகளுக்கு ஓய்வூதியம் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பதனையும் அவர் தெரிவித்தார். ஓய்வூதியத்திற்கான ஆணை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் முரளி மற்றும் ராகேஷ், செங்குட்டு, மணிமாறன், கோபி, புண்ணியகோடி, ஜீவா, தினேஷ், செல்லப்பன், ஜெயசீலன், மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
    • நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகள் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, பி.ம்.ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா, முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் கோரிமேடு மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி, மாகி பல் மருத்துவ கல்லூரி, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் உள்ளது.

    இந்த கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக மேலாண்மை ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு என்.ஆர்.ஐ. பிரிவின் கீழ் படிப்பதற்கு சேர்க்கைக்கு 30-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வரும் 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்கள் சென்டாக் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அரசு ஒதுக்கீட்டு பொது பிரிவினருக்கு ரூ.3 ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.ஆயிரத்து 500, நிர்வாக ஒதுக்கீட்டில் பொது ரூ.5 ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி ரூ.2 ஆயிரத்து 500, என்.ஆர்.ஐ ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.

    எம்.டி.எஸ் சேர்க்கை விண்ணப்பிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்புடன் ஓராண்டு மருத்துவ பயிற்சியை ஜூன் 30-ந் தேதிக்கு முன்பு முடித்திருக்க வேண்டும். எம்.டி.ஸ் படிப்புக்ககு மார்ச் 31-ந் தேதிக்கு முன் ஓராண்டு பல் மருத்துவ பயிற்சியை முடித்திருக்க வேண்டும். சீட் மேட்ரிக்ஸ் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எதிர்கட்சி தலைவர் சிவாவுக்கு விவசாய தொழிலாளர் சங்கம் பாராட்டு
    • விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக மிகக் குறைந்த நிதி ஒதுக்கப்பட்டது.

    இதனால் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10 நாள் கூட வேலை கிடைக்காத நிலை இருந்தது. இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து சிவா கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசின் கவனத்தை ஈர்க்கும் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.

    அப்போது புதுவை மாநிலத்தில் 75 ஆயிரம் வேலை அட்டை பெற்றவர்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கினால் தான் 100 நாள் வேலை முழுமையாக தரமுடியும். ஆனால் இந்த அரசு வெறும் ரூ. 12 கோடி ஒதுக்கி 5 முதல் 10 நாட்கள் வேலைதான் கிடைக்கிறது என்றும் நடப்பு நிதியாண்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கவில்லை என்றால் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று பேசினார்.

    இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்ற அரசு தற்போது ரூ.120 கோடிநிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    100 நாள் வேலை திட்ட நிதியை உயர்த்தியதற்கு தொடர்ந்து குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவாவுக்கு புதுவை விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சுமதி தலைமையில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, மஞ்சுளா, மங்கையர்கரசி, கயல்விழி, அம்சவள்ளி ஆகியோர் பேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

    • புதுவையின் பல பகுதிகளில் இருந்து, குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
    • ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1978-1982 ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ், முன்னிலை வகுத்தார். முன்னால் தலைமையாசியர். அரிகரன், தேசியக்கொடி ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்செல்வி வரவேற்றார். இப்பள்ளியில் பணிபுரிந்து இறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான குறும்படத்துடன் கூடிய நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    அதில் மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நினைத்து அனைவரும் கண்கலங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் தமிழகம் மற்றும் புதுவையின் பல பகுதிகளில் இருந்து, குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    பண்ருட்டியிலிருந்த வந்த முன்னாள் மாணவர் வெங்கடேசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் 100 பலாபழங்களை பரிசாக வழங்கினார். தொடந்து ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    அனைவருக்கும் அருசுவை உணவு அளிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்களின் சார்பாக இப்பள்ளியில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியினை பி.எஸ்.என்.எல் உதவி பொறியாளர் அரிதாஸ் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள், காமராஜ், தேவநாதன். சவுந்தராஜன், ரவி, இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
    • முக்கிய சந்திப்புகளில் நீர்மோர் பந்தல் அமைக்க துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:-

    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் வைகாசி மாசி உற்சவ விழா நடக்கிது. வியாழக்கிழமை தேர் திருவிழா நடக்கிறது.

    விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். பி.ஆர்.டி.சி. மூலம் வில்லியனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகளில் நீர்மோர் பந்தல் அமைக்க துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரோபோட்டிக் மூலம் அறுவை சிகிச்சை, துல்லிய அறுவை சிகிச்சைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • மக்கள் தொடர்பு அதிகாரி ரவி மற்றும் டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் கருத்தரங்கு நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை முடநீக்கியல், தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் விஜயராகவன் பேசியதாவது:-

    சிலநோய் பாதிப்புக்கு அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தாத லேப்ராஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படும். அதேபோல தண்டுவட பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சாவி துவார அளவில் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும்.

    இதனால் நோயாளிகளுக்கு பெரியளவில் அறுவை சிகிச்சை தேவையில்லை. ரத்த சேதம் குறைவு. அதிக வலி நிவாரணி மந்துகளை தவிர்க்கலாம். அதிகநாள் மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. ரோபோட்டிக் மூலம் அறுவை சிகிச்சை, துல்லிய அறுவை சிகிச்சைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

    இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி மற்றும் டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×