search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம்.

    முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

    • சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
    • நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகள் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, பி.ம்.ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா, முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் கோரிமேடு மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி, மாகி பல் மருத்துவ கல்லூரி, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் உள்ளது.

    இந்த கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக மேலாண்மை ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு என்.ஆர்.ஐ. பிரிவின் கீழ் படிப்பதற்கு சேர்க்கைக்கு 30-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வரும் 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்கள் சென்டாக் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அரசு ஒதுக்கீட்டு பொது பிரிவினருக்கு ரூ.3 ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.ஆயிரத்து 500, நிர்வாக ஒதுக்கீட்டில் பொது ரூ.5 ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி ரூ.2 ஆயிரத்து 500, என்.ஆர்.ஐ ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.

    எம்.டி.எஸ் சேர்க்கை விண்ணப்பிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்புடன் ஓராண்டு மருத்துவ பயிற்சியை ஜூன் 30-ந் தேதிக்கு முன்பு முடித்திருக்க வேண்டும். எம்.டி.ஸ் படிப்புக்ககு மார்ச் 31-ந் தேதிக்கு முன் ஓராண்டு பல் மருத்துவ பயிற்சியை முடித்திருக்க வேண்டும். சீட் மேட்ரிக்ஸ் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×