என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வெளிமாநில மாணவர்களை நீக்கம் செய்ய வேண்டும்
புதுச்சேரி:
புதுவை பெற்றோர், மாணவர் நலச்சங்க தலைவர் வை.பாலா என்ற பாலசுப்பிரமணியன் கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வாணையம் மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட உள்ளது.
இதில் புதுவை மாணவர்களுக்கான தரவரிசை பட்டிய லில் தவறுதலாக வெளிமாநில மாணவர்கள் இருந்தால் அவர்களை நீக்கம் செய்ய வேண்டும். புதுவை மண்ணின் மைந்தர் களை மட்டுமே கொண்ட தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும்.
3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 328 இடங்களில் 50 சதவீத 164 இடங்கள் தேசிய மருத்துவ கமிட்டி விதி யின்படி பெறப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு புதிய அனுமதி பெற்றாலும், அதிலும் சரிபாதி இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும்.
சென்டாக் கலந்தாய்வுக்கு முன்பு அரசு, நிர்வாக ஒதுக்கீடாக பெற்ற இடங்களின் விபரங்களை அறிவிக்க வேண்டும். கல்வி கட்டண விபரங்களையும் சென்டாக் இணையதளத்தில் வெளியிட வேண்டும். உயர்கல்வி கட்டணக்குழு தலைவர், உறுப்பினர்களை அறிவிக்க வேண்டும்.
சென்டாக் நிர்வாகத்தில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களின் இருப்பிடம், சாதி, படிப்பு சான்றிதழ்களை சரிபார்த்து, குறைகளை களைந்து புதுவை மாநில மாணவர்களின் உரிமை களை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு வை.பாலா குறிப்பிட்டுள்ளார்.






