என் மலர்
நீங்கள் தேடியது "Thirukamiswarar temple"
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
- முக்கிய சந்திப்புகளில் நீர்மோர் பந்தல் அமைக்க துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:-
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் வைகாசி மாசி உற்சவ விழா நடக்கிது. வியாழக்கிழமை தேர் திருவிழா நடக்கிறது.
விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். பி.ஆர்.டி.சி. மூலம் வில்லியனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகளில் நீர்மோர் பந்தல் அமைக்க துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






