என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தண்டுவட பாதிப்புக்கு அதி நவீன சிகிச்சை
    X

    கோப்பு படம்.

    தண்டுவட பாதிப்புக்கு அதி நவீன சிகிச்சை

    • ரோபோட்டிக் மூலம் அறுவை சிகிச்சை, துல்லிய அறுவை சிகிச்சைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • மக்கள் தொடர்பு அதிகாரி ரவி மற்றும் டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் கருத்தரங்கு நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை முடநீக்கியல், தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் விஜயராகவன் பேசியதாவது:-

    சிலநோய் பாதிப்புக்கு அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தாத லேப்ராஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படும். அதேபோல தண்டுவட பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சாவி துவார அளவில் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும்.

    இதனால் நோயாளிகளுக்கு பெரியளவில் அறுவை சிகிச்சை தேவையில்லை. ரத்த சேதம் குறைவு. அதிக வலி நிவாரணி மந்துகளை தவிர்க்கலாம். அதிகநாள் மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. ரோபோட்டிக் மூலம் அறுவை சிகிச்சை, துல்லிய அறுவை சிகிச்சைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

    இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி மற்றும் டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×