என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி

திருக்காஞ்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்

- அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் கிராமமக்கள் வலியுறுத்தல்
- 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
மங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பபட்ட திருக்காஞ்சியில் இணைப்பு கால்வாயை ரூ.12 1/4 லட்சத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.
இந்த பணியை அமைச்சர் தேனீஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்பகுதி கிராம மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர்கள், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
பிற மாநிலங்களில் வழங்கப்படுவது போல ரூ.280 கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். அதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக்பாகி, உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர்கள் ராமநாதன், செங்கதிர் உட்பட பலர் பங்கேற்றனர்.