என் மலர்
நீங்கள் தேடியது "President's visit"
- 16-ந் தேதி புதுவைக்கும் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- அரசு சித்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்கிறார்.
புதுச்சேரி:
புதுவைக்கு ஜனாதிபதி முர்மு ஜூன் 6, 7-ந் தேதிகளில் வந்து நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
ஆனால் இந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி முர்மு வரும் 15-ந் தேதி தமிழகம் வருகிறார். சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கும் அவர், 16-ந் தேதி புதுவைக்கும் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுவைக்கு வரும் ஜனாதிபதி அரசு சித்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்கிறார். பின்னர் கவர்னர் மாளிகையில் ஒய்வெடுத்துவிட்டு டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.






