search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    6 ஆயிரம் ரசாயனங்கள் மூலம் சிகரெட் தயாரிக்கப்படுகிறது
    X

    உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    6 ஆயிரம் ரசாயனங்கள் மூலம் சிகரெட் தயாரிக்கப்படுகிறது

    • டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
    • முகாமில் கலந்து கொண்ட அனைவரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பாகூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் தேவி, சுவாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மருத்துவர்கள் பேசுகையில், சிகரெட் உபயோகம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதுடன், இளைய சமுதாயத்திற்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினால் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். புகை பிடிப்பதை நிறுத்துவதை விட தடுப்பது எளிதானது.

    ஒவ்வொரு சிகரெட்டி லும் குறைந்தபட்சம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான உடல் நலத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய ரசாயனங்களால் தயாரிக்கப்படுகிறது.

    ஒருவர் புகைப்பிடிப்பதால் அவருக்கு வரக்கூடிய பாதிப்புகளை விட அவருக்கு அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகம். ஏனென்றால் ஒவ்வொரு சிகரெட்டின் வாய்ப்பகுதியில் பில்டர் என்று சொல்லக்கூடிய அதாவது வடிகட்டி உள்ளது.

    எனவே புகை பிடிக்காத வர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, புகை பிடிப்பவர்களுக்கு பாதிப்பு குறைவு. வெளியில் உள்ள நெருப்பு பகுதியில் இருந்து வரக்கூடிய புகை அருகில் உள்ளவர்களுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வு கூறுகிறது என்றனர்.

    இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், நமணசமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடி க்கப்பட்டது.

    Next Story
    ×