என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
சுற்றுலா படகு சவாரி-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- சட்டசபையில் சந்தித்து அவரிடம் முறையாக வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறினார்.
- பொருளாளர் மணிமாறன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, உள்பட பலர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை நீர் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு வழிகாட்டுதல்களில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளின் படி உப்பளம் தொகுதியில் பாண்டி மெரினா பின்புறம் 15 சுற்றுலா படகுகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மேலும் தொகுதி இளைஞர்களிடம் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடியுங்கள், உள்நாட்டில் மீன் பிடித்தாலும் இடையூறு விளைவிக்காத வகையில் நடந்து கொள்ளுங்கள், சுற்றுலா பயணிகளை தொந்தரவு கொடுக்காமல் அவர்களிடம் கனிவுடன் பேசி படகு டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள், என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் இது சம்பந்தமாக மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியை நேரில் சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து அவரிடம் முறையாக வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறினார். பின்னர் முறைப்படி அனுமதி பெற்றார்.
உடன் நகராட்சி உதவியாளர் பிரபாகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்து தலைவர்கள், நிர்வாகிகள், பொருளாளர் மணிமாறன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, உள்பட பலர் உடன் இருந்தனர்.






