என் மலர்
புதுச்சேரி
- அரசு தொடக்கப்பள்ளியில் 220-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 220-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி மாண வர்களுக்கு அடையாள அட்டை, டைரி, கற்றலில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் முன்னாள் மாணவர் காவல்துறை அதிகாரி ராஜசேகர் மாணவர்களுக்கு அடையாள அட்டை, டைரி மற்றும் பரிசுகளை வழங்கினார்.
மாநில அளவில் வாசிப்பு மற்றும் கையெழுத்து போட்டி, கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி விழாவுக்கு தலைமை வகித்தார். ஆசிரியர் பாரதிராஜா வரவேற்றார். ஆசிரியை கீதா நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் எழிலரசி, அவந்தி, தேவி, அழகம்மாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- புதுவை சந்தா சாகீப் வீதியை சேர்ந்தவர் சரவணன்
- கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கும்பத்தகராறு ஏற்படும்.
புதுச்சேரி:
புதுவை சந்தா சாகீப் வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரம்யா இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கும்பத்தகராறு ஏற்படும். அப்போ தெல்லாம் கணவனிடம் கோபித்துக்கொண்டு ரம்யா உறவினர் வீட்டுக்கு செல்வது வழக்கம். பின்னர் சமாதானம் அடைந்து வீடு திரும்புவார். அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண வனிடம் கோபித்துக்கொண்டு ரம்யா கடலூரில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்றார். சில நாட்கள் கழித்து ரம்யா வீடு திரும்பினார். அப்போது அவரை சரவணன் மன்னித்து குடும்பம் நடத்துமாறு அறிவுரை கூறினார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ரம்யா சாப்பிட்டு விட்டு தனது மகளுடன் வீட்டில் தூங்கினார்.
பின்னர் மறுநாளை காலை பார்த்த போது ரம்யாவை காணவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ரம்யா இல்லை. இதையடுத்து சரவணன் தனது மனைவி மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.
- மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர்.
புதுச்சேரி:
பொதுவாக எந்த மதத்தில் திருமணம் நடந்தாலும் மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பரிசு வழங்குவது வழக்கம்.
தற்போது தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. விலை உயர்வால் குடும்ப தலைவிகள் தக்காளி வாங்குவதையே தவிர்த்து வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.
இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை சுட்டி காட்டும் வகையில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் 2 கிலோ தக்காளி பரிசாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவருக்கும் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரஹமத் நிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தில் பங்கேற்ற கருக்கங்குடியைச் சேர்ந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர். ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். தக்காளியை மண மகனுக்கு பரிசு அளிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
- ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு ரகளை செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவரது மனைவி வினோதினி. இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு இவர்களது வீட்டின் அருகே உள்ள விஜயா என்பவரின் மருமகன் விக்னேஷ் மற்றும் இவரது நண்பர்கள் பிரவீன்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் அதிக சத்தம்போட்டு பேசி பின்னர் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு ரகளை செய்தனர்.
இதனை முத்துக்குமரன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து முத்துக்குமரனை தடியால் தாக்கினர். மேலும் முத்துக்குமரன் கண் புருவத்தை கடித்து விட்டனர். அதோடு தலையை சீவி கொலை செய்து விடுவோம் என்று மிட்டிவிட்டு சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த முத்துக்குமரன் கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டர். இது குறித்து அவரது மனைவி வினோதினி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.
- இளைஞர்கள் இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் அறிமுகமானார். அவர்கள் இருவரும் பேஸ்புக்கில் குறுந்தகவல் அனுப்பி நட்பை பலப்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முக அடையாளத்தை அறியும் வகையில் அந்த வாலிபர் பேஸ்புக்கில் வீடியோ காலில் அழைத்து பேசி இருக்கிறார். அந்த பெண்ணும் வீடியோகாலில் ஜாலியாக பேசி உள்ளார்.
ஒருமுறை அப்பெண் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் அந்த வாலிபரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி உள்ளார். இருவரும் நிர்வாண கோலத்தில் இருந்தபடி பேசிய வீடியோ காட்சியை அந்த பெண் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண், வாலிபரிடம் நிர்வாணமாக இருந்தபடி பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்து ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் மேலும் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.
தொடர்ந்து அந்த பெண் பணம் கேட்டு மிரட்டி வந்ததால் வாலிபர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகிறார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில்,
கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நிர்வாண வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள் என்றார்.
- பிளாஸ்டிக், மின்னணு கழிவுகளை குறைக்க ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
- யோசனையில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை அறிவியல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் யாசம்லட்சுமி நாராயணரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு குழுமம் சார்பில் வாழ்க்கை திட்டத்தின் கீழ் நிரலோட்ட யோசனை நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 30-ந் தேதி முதல் செப்டம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், மின்னணு கழிவுகளை குறைக்க ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
இதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் வரும் 21-ந் தேதி முதல் இணையதளத்தில் பதியலாம். நிரலோட்ட யோசனையில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
ஆகஸ்ட் 30-ந் தேதி துறை இணையதளத்தில் காலை 9 மணிக்கு 2 தீம்களுக்கான தலா ஒரு பிரச்சினை அறிக்கை வெளியிடப்படும்.
மாணவர்கள் அதுதொடர்பான யோசனைகளை செப்டம்பர் 4-ந் தேதி மாலை 3.30 மணிக்குள் துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். சிறந்த யோசனைகளுக்கு ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். பதிவுகளை 27-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2 வாலிபர்கள் குடிபோதையில் நின்று கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தனர்
- அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை பின் புறம் நேற்று இரவு 2 வாலிபர்கள் குடிபோதையில் நின்று கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த காட்டேரிக்குப்பம் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருவக்கரை காளியம்மன் கோவில்தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் லிங்கா ரெட்டிப்பளையம் தோப்பு தெருவை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- ரூ.3 கோடியே 14 லட்சம் செலவில் நகராட்சி மூலம் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
- பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்புராயப்பேட்டையில் உள்ள சுடுகாட்டில் நவீன மின் தகனம் மையம் அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 14 லட்சம் செலவில் நகராட்சி மூலம் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
தற்போது சுடு காட்டிற்கு மதில்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நேரில் ஆய்வு செய்தார்.அப்போது நகராட்சி இளநிலை பொறியாளர்கள் சண்முகம், பரமன் ஆகியோரிடம் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின்போது தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன். தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி கிளை செயலாளர் ராகேஷ். தி.மு.க. பிரமுகர்கள் நோயல், பாலாஜி, மரி ஆகியோர் உடனிருந்தனர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை வகித்தார்.
- ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
புதுச்சேரி:
மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுவை மாநில தி.மு.க. மகளிரணி சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், பொதுக்குழு உறுப்பி னர்கள் அருட்செல்வி, அமுதாகுமார், நர்கீஸ், மாநில மகளிர் அணி நிர்வாகிகள் காயத்ரி, புஷ்பலதா, ஜான்சிராணி, அல்போன்சா, சந்திரகலா, சூர்யா, ரமா, சுமித்ரா, தனலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண்.குமரவேல், லோகை யன், ஆறுமுகம், காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜன், சக்திவேல், தங்கவேலு, கோபால், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம்ப ரிதி, பழநி, மு. பிரபாகரன், செந்தில்கு மார், மாறன், கோபாலகிருஷ்ணன், தொகுதி செயலாளர்கள் திராவிடமணி, சக்திவேல், சீத்தாராமன், பாண்டு அரிகிருஷ்ணன், நடராஜன், சவுரிராஜன், தியாகராஜன், சிவக்குமார், ஆறுமுகம், வடிவேல், மோகன், ரவிச்சந்திரன், சக்திவேல், ராஜாராமன், பார்த்திபன், இளஞ்செழியபாண்டியன், கலிய. கார்த்திகேயன், ராதா கிருஷ்ணன், கலைவாணன், அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- எதிர்கட்சித்தலைவர் சிவா ஆவேசம்
- பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தை நாட்டு மக்கள் வேதனையோடு பார்க்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. மகளிரணி சார்பில் சுதேசி மில் அருகே மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான சிவா பேசியதாவது: -
இந்தியாவில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை பா.ஜனதா ஆட்சி செய்தால் வளர்ச்சி குறைந்து விடும். பா.ஜனதாவின் ஆட்சி நடைபெறும் மணிப்பூர் மாநில சம்பவம் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது.
பிரதமர் மோடி இதைப்பற்றி 70 நாட்க ளுக்கும் மேலாக வாய்மூடி மவுனமாக இருந்துள்ளார். பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தை நாட்டு மக்கள் வேதனையோடு பார்க்கின்றனர்.
நாடே பற்றி எரிகிறது. பெண்கள் கொதித்தெழுந்து ள்ளனர். இந்தியா முழுவதும் அனைத்து கட்சியும் போராட்டம் நடந்து வருகிறது. பா.ஜனதாவின் முகத்தில் மக்கள் கரி பூசி வருகின்றனர். பழங்குடியின பெண்ணை ஜனாதிபதியாக நியமித்தாலும், மணிப்பூரில் அநீதி இழைத்துள்ளார்கள்.
மணிப்பூர் மாநில அரசை பிரதமர் கண்டிக்கவில்லை. இந்த பா.ஜனதா மோடி அரசை தூக்கி எறியும் காலம் வரும்.
மணிப்பூர் கலவரம் மூலமாக பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எதிர்கட்சியை ஒடுக்கும் வேலையை பா.ஜனதா அரசு செய்து வருகிறது.
ஆனால் நம் கூட்டணி எதைப்பற்றியும் கவலைப் படவில்லை. மதச்சார்பற்ற கூட்டணி அரசை வெற்றி பெறச் செய்ய நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- போலீசாருடன் தள்ளுமுள்ளு
- பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் நுழைவுவாயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறையில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆயிரக்கணக்கான வவுச்சர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களை தேர்தல் கமிஷன் பணியில் இருந்து நீக்கியது. ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்தவாரத்தில் பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதன் நுழைவுவாயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று அண்ணாசிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி, ஜென்மராக்கினி கோவில் வீதி வழியாக சட்டசபை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் ஆம்பூர் சாலையில் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அங்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- டிரைவர், கண்டக்டர்களுக்கு 2 மாத சம்பள வழங்கவில்லை என குற்றச்சாட்டு
- புதிய பஸ்கள் வாங்கப் பட்டாலும் அதனை சரிவர பராமரிக்கப்படா ததால் அடிக்கடி பழுதாகி விடுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்து வதற்காக 1986-ம் ஆண்டு புதுவை சாலை போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.
குறிப்பாக புதுவையில் கிராம பகுதிக ளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கிராமபுற மக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர். நாளடைவில் கிராம புற பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் குறைக்கப்பட்டன. அவ்வப்போது போக்கு வரத்து கழகத்துக்கு புதிய பஸ்கள் வாங்கப் பட்டாலும் அதனை சரிவர பராமரிக்கப்படா ததால் அடிக்கடி பழுதாகி விடுகிறது.
போக்குவரத்து கழகத்துக்கு 139 பஸ்கள் இருந்தன. ஆனால் தற்போது 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்கு வரத்து கழகத்துக்கு புதிதாக வாங்கப்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டதில் நடுரோட்டிலேயே பழுதாகி நின்று போனது. இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பெரும்பாலான பயணிகள் அரசு பஸ்சை நம்பி உள்ளனர். ஆனால் அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பஸ்கள் படிப்படியாக குறைக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.
இதற்கிடையே புதுவை சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பஸ்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாதம் டிரைவர், கண்டக்டர்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இதுபோல் 14 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது. இந்த சஸ்பெண்டு நடவடிக்கையால் 10 பஸ்கள் நிறுத்தப்பட்டு ள்ளதாகவும் இதனால் ஒருநாளைக்கு 1.50 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.
அதோடு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2 வருடமாக போனசும் குறைந்த அளவே வழங்கப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்பள பாக்கி மற்றும் போனஸ் தொகையை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பஸ்களை நன்றாக பராமரித்து சரியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள வலியுறுத்தி யுள்ளனர்.






