என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பள்ளி விளையாட்டில் மல்யுத்தத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது மாணவ- மாணவிகளுக்கு வரப்பிர சாதமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.
    • விளையாட்டு நல இணை இயக்குநர் சிவக்குமார் 4 அங்கீகார சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

    புதுச்சேரி:

    இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மூலம் நடைபெற்ற 66-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டியில் மல்யுத்த பிரிவில் புதுச்சேரி அரசு இளைஞர் மற்றும் விளையாட்டு துறை சார்பில் பங்குபெற்ற மல்யுத்த வீரர்- வீராங்கனைகளுக்கு புதுச்சேரி மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் மாஸ்டர் வினோத் முன்னிலையில் இளைஞர் மற்றும் விளையாட்டு நல இணை இயக்குநர் சிவக்குமார் 4 அங்கீகார சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

    இதுகுறித்து புதுச்சேரி மல்யுத்த சங்க செயலாளர் மாஸ்டர் வினோத் கூறும் போது 4 வருட போராட்டத்தின் பலனாக பள்ளி விளையாட்டில் மல்யுத்தத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது மாணவ- மாணவிகளுக்கு வரப்பிர சாதமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியின் போது பொருளாளர் சோமசுந்தரம், நிர்வாகிகள் ஜான், ஜெயஸ்டூ, வசந்த், மற்றும் பயிற்சியாளர்கள் சிவசங்கரி, தயாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

    • பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஜிப்மர் சமுதாய நலக்கூட்டத்தில் நடைபெற்றது.
    • கராத்தே பயிற்சி பள்ளியின் மூத்த தலைமை பயிற்சியாளர் கராத்தே சுப்ரமணியன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜிப்மர் ஷிட்டோரியோ கராத்தே பள்ளி சார்பில் ஒரு நாள் கராத்தே பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஜிப்மர் சமுதாய நலக்கூட்டத்தில் நடைபெற்றது.

    ஜிப்மர் முதுநிலை நிர்வாக அதிகாரி ஹலாசிங், நுரையீரல் சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் விஷ்ணுகாந்த் மற்றும் அகில இந்திய கராத்தே சங்க துணைத் தலைவர் ஷிகான் வளவன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஜிப்மர் ஷிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளியின் மூத்த தலைமை பயிற்சியாளர் கராத்தே சுப்ரமணியன் செய்திருந்தார்.

    • ஆணையத்தின் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்துள்ளது. மனை, வீடு வாங்குவது, விற்பதில் விதிமீறல் இருந்தால் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
    • அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகளுக்கு மேல் கட்டவும் பதிவு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    ரியல் எஸ்டேட் தொடர்புடைய விஷய ங்களை முறைப்படுத்த ஒழங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தை 2018-ல் மத்திய அரசு கொண்டுவந்தது. வீடு, மனை வாங்குபவர்களின் நலனை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் ரெரா எனப்படும் ஒழுங்குமுறை ஆணையம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன்படி புதுவையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த ஆணையத்துக்கு தலைவர், 2 உறுப்பினர்களை நியமனம் செய்தது. தலைவர், ஒரு உறுப்பினர் பதவி யேற்கவில்லை. ஒருவர் ராஜினாமா செய்தார். இதனால் ஆணையம் முடங்கியிருந்தது. இந்த நிலையில் ஆணையத்தின் தலைவராக குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராக நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர்கள் 2 பேரும் ஜவகர் நகர் நகர, கிராம அமைப்பு துறை அலுவலக வளாகத்தில் உள்ள ஆணையத்தின் அலுவ லகத்தில் பொறுப்பேற்றனர். இதனால் ஆணையத்தின் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்துள்ளது. மனை, வீடு வாங்குவது, விற்பதில் விதிமீறல் இருந்தால் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.

    ஆணையம் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்கும். தீர்ப்பு திருப்தி தராவிட்டால் சென்னை ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்பாயத்தை அணுகலாம். 500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள இடத்தை விற்பனை நோக்கில் மாற்ற ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகளுக்கு மேல் கட்டவும் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த பின் சாலை, பூங்கா உட்பட பொது பயன்பாடு இடங்களை ரியல்எஸ்டேட் உரிமையாளர்கள் மாற்ற முடியாது. உறுதிமொழி அளித்தபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட பல விதிமுறைகள் பொதுமக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் லியோனி பேசுகிறார்
    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்கள்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அரியூர் அங்காளம்மன் கோவில் எதிரில் நாளை (வியாழக்கிழமை) மாலை நடக்கிறது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண். குமரவேல் தலைமை தாங்குகிறார். தொகுதி செயலாளர் அசோக் வரவேற்கிறார். பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், பரமபதம், முருகதாஸ், அவைத்தலைவர் புஷ்பராஜ், துணைச் செயலாளர் அய்யனார், மகளிர் அணி புஷ்பலதா, பாக்கியலட்சுமி சாரங்கம், கவிதா கண்ணியப்பன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கூட்டத்தில் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்கள்.

    முன்னதாக, அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    • கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.
    • வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர உடையார். அவரது 2-வது மனைவி ஜெயமேரி (வயது 51). இவர்களது மகன் அமலோற்பவ நாதன் (28). பி.டெக் என்ஜினீயர்.

    சொத்து தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ராஜசேகர உடையார் முதல் மனைவியின் உறவினரான மணவாளன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயமேரி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் ஜாமீனில் வந்த அவர் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் விரிவாக்கம் 20-வது குறுக்கு தெருவில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த மகன் அமலோற்பவநாதன், மிகுந்த கோபமடைந்தார். இந்த வயதில் வேறுநபருடன் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக பேசுகிறாயே என கேட்டு ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த நாற்காலியால் தாய் என்றும் பாராமல் ஜெயமேரியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியால் 12 முறை தாயை அமலோற்பவநாதன் குத்தி கொலை செய்தார். அதன்பின் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இந்த கொலை தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலோற்பவநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமலோற்பவநாதன் மீதான கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மூத்த தலைவர் முருகன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் ஜீவா சிலை சதுக்கம் அருகே இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்டு மாநில செய லாளர் ராஜாங்கம் ஆகி யோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு தேசியக்குழு உறுப்பினர் தினேஷ்பொன்னையா, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மார்க்சிஸ்டு தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், மூத்த தலைவர் முருகன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் 2 கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சுப்பையா, அந்தோணி, ராமச்சந்திரன், பிரபுராஜ், சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும். கீழ்த்தரமான அரசியலை கைவிட வேண்டும். வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசு பதவி விலக வேண்டும். பெண்களை நிர்வாணப் படுத்தி கூட்டு பாலியல் செய்த மனித மிருகங்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • புதுவை நகரின் பிரதான சாலையாக மறைமலை அடிகள் சாலை உள்ளது.
    • வர்த்தக நிறுவனங்கள், ஆம்னி பஸ் அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் பிரதான சாலையாக மறைமலை அடிகள் சாலை உள்ளது. இந்த சாலையில்தான் புதிய பஸ்நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், கால்நடைத்துறை அலுவலகம், போலீஸ் நிலையம், பி.ஆர்.டி.சி. பணி மனை, பல்வேறு ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், ஆம்னி பஸ் அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகிறது.

    நீண்டகாலமாக இந்த சாலையின் சுதேசி மில்லை ஒட்டியுள்ள வாய்க்கால் சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்த வாய்க்காலின் மேல் இருந்த கடைகளை அகற்ற முன்வராததால் பணிகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டது. கடந்த 2 வாரங்க ளுக்கு முன்பு இந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலின் மூடிகள் திறக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் சாலை களின் நடுவே இருந்த தடுப்பு அகற்றப்பட்டு புதிய சாலை போடுவதற்கான பணிகள் தொடங்கியது.

    இதற்காக சாலையின் இருபுறமும் வெங்கட சுப்பாரெட்டியார் சிலையிலிருந்து சுப்பையா சிலை வரை எந்திரங்கள் மூலம் சுரண்டப்பட்டது. இதனால் சாலை முழுவதும் சரளை கற்கள் வெளிப்பட்டு வாகனங்கள் ஓட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு தூசு மண்டலமும் கிளம்புகிறது.

    சாலையின் மேற்புற பகுதி அகற்றப்பட்டபோது ஓரிருநாளில் பணிகள் முடி வடைந்துவிடும் என பொது மக்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பணிகள் வாரக்கணக்கில் நீடித்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியதால் சாலையின் ஒரு புறத்தில் ஒரு பாதியை மட்டும் அமைத்துள்ளனர். இது வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமத்தை கொடுக்கிறது. வாய்க்கால் பணியை முடித்துவிட்டு அதன்பின் சாலை அமைக்கும் பணியை தொடங்கியிருக்கலாம்.

    இதற்கிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை பஸ்நிலையத்தில் பணிகள் நடைபெறுவதற்காக மைய பகுதியை தடுப்பு வைத்து மூடியுள்ளனர்.

    இதனால் பஸ்களை நிறுத்த முடியாமல், மறை மலை அடிகள் சாலையி லேயே பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்படுகிறது. அங்கேயே பயணிகள் ஏற்றி, இறக்கப்படுகின்றனர். இது வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமத்தை உருவாக்கியுள்ளது.

    இதனால் உடனடியாக பணிகளை முடித்து தர வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கடந்த காலங்களில் ஒரே இரவில் சாலையின் மேற்பரப்பை அகற்றி புதிய சாலை அமைக்கப்பட்டு வந்தது. ஏன் அதேபோல தற்போது பணிகள் நடக்க வில்லை எனவும் பொது மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

    • சமூக அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி

    மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான நேரு தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழர் களம் அழகர், திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன், தந்தைபெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சடகோபன், பஷீர்அகமது, பிராங்களின் பிரான்சுவா உட்பட பலர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    • அம்பேத்கரின் சிலை மற்றும் படம் நிச்சயம் இடம் பெற வேண்டும்
    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி;

    கோர்ட்டு வளாகங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் சிலை மற்றும் படம் நிச்சயம் இடம் பெற வேண்டும் என பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள கோர்ட்டு வளாகங்களில் காந்தி மற்றும் திருவள்ளுவரை தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப்படங்களும வைக்கப்படக் கூடாது என சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் அனைத்து கோர்ட்டு களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கோர்ட்டுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே செயல் படுகின்றன. சட்டத்தை பாதுகாப்பது தான் கோர்டின் கடமை. கோர்ட்டில் அம்பேத்கர் சிலை அல்லது புகைப்படம் இடம் பெறுவது அவருக்கு நாம் செய்யும் மரியாதை.

    எனவே, கோர்ட் வளாகங்களில் இந்திய அரசியல மைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் சிலை அல்லது உருவப்படம் நிச்சம் இடம் பெற வேண்டும். உயர்நீதிமன்றம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், அம்பேத்கருக்கு நிச்சயம் விதிவிலக்கு வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கோவில் வளாகத்தில் 200 பனைமர விதைகள் நடப்பட்டது.

    புதுச்சேரி:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இளைஞர் அணி துணை செயளாலர் சங்கீத் இரணியன் தலைமையில் கலித்தீர்தாள்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பா.ம.க அமைப்பாளர்கணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் நாகப்பன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் ராஜசேகர், இளம் பெண்கள் சங்க செயலாளர் எபேல் இளவரசன், மங்கலம் தொகுதி தலைவர் வெள்ளையப்பன், மணவெளி தொகுதி பொறுப்பா ளர்கள் சேதுபதி, அருள், சந்தோஷ்குமார், திருபுவனை தொகுதி பொறுப்பாளர்கள் சரவணன், நந்தகோபால், கேசவன், சுரேஷ், இளைஞர் அணி கலைச்செல்வன், வாசு, ஊடக பிரிவு கஜேந்திரன், விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து சன்யாசிகுப்பத்தில் உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் 200 பனைமர விதைகள் நடப்பட்டது.

    • நவம்மால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு பெயிண்டர்.
    • பஸ் எதிர்பாராதவிதமாக செல்வராசு மீது மோதியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை புதுச்சேரி பகுதியான வடமங்கலம் முருகன் கோவில் அருகே இன்று அதிகாலை நவம்மால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு பெயிண்டர்.

    இவர் அப்பகுதியில் இன்று காலை சாலையைக் கடந்த போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக செல்வராசு மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராசு தலை உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மழைநீர் சேமிப்பு தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
    • கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் வன மகோற்சவ விழா கெண்டாடப்பட்டது. என்எஸ்எஸ், தாவரவியல்துறை, ஈகோ கிளப், நேருயுவகேந்திரா இணைந்து நடத்திய விழாவில் மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், ரங்கோலி போட்டிகள் நடந்தது. மழைநீர் சேமிப்பு தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

    நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் தெய்வசிகாமணி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார் முன்னிலை வகித்தார்.

    மாநில இயக்குனர் குன்ஹாமீது தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாநில என்எஸ்எஸ் திட்ட அதிகாரி சதீஷ்குமார், முன்னாள் வன காவலர் ராஜலு, விழுப்புரம் வன வரம்பு அதிகாரி தர்மலிங்கம், தாவரவியல்துறை தலைவர் வீரமோகன், பேராசிரியர் அலமேலுமங்கை, செயலாளர் ரஜினி வாழ்த்தி பேசினர். என்.எஸ்.எஸ் திட்ட அதிகாரி ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.

    விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    ×