என் மலர்
நீங்கள் தேடியது "Karate Students"
- பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஜிப்மர் சமுதாய நலக்கூட்டத்தில் நடைபெற்றது.
- கராத்தே பயிற்சி பள்ளியின் மூத்த தலைமை பயிற்சியாளர் கராத்தே சுப்ரமணியன் செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மர் ஷிட்டோரியோ கராத்தே பள்ளி சார்பில் ஒரு நாள் கராத்தே பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஜிப்மர் சமுதாய நலக்கூட்டத்தில் நடைபெற்றது.
ஜிப்மர் முதுநிலை நிர்வாக அதிகாரி ஹலாசிங், நுரையீரல் சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் விஷ்ணுகாந்த் மற்றும் அகில இந்திய கராத்தே சங்க துணைத் தலைவர் ஷிகான் வளவன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஜிப்மர் ஷிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளியின் மூத்த தலைமை பயிற்சியாளர் கராத்தே சுப்ரமணியன் செய்திருந்தார்.






