search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் பொறுப்பேற்பு
    X

    கோப்பு படம்.

    ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

    • ஆணையத்தின் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்துள்ளது. மனை, வீடு வாங்குவது, விற்பதில் விதிமீறல் இருந்தால் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
    • அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகளுக்கு மேல் கட்டவும் பதிவு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    ரியல் எஸ்டேட் தொடர்புடைய விஷய ங்களை முறைப்படுத்த ஒழங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தை 2018-ல் மத்திய அரசு கொண்டுவந்தது. வீடு, மனை வாங்குபவர்களின் நலனை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் ரெரா எனப்படும் ஒழுங்குமுறை ஆணையம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன்படி புதுவையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த ஆணையத்துக்கு தலைவர், 2 உறுப்பினர்களை நியமனம் செய்தது. தலைவர், ஒரு உறுப்பினர் பதவி யேற்கவில்லை. ஒருவர் ராஜினாமா செய்தார். இதனால் ஆணையம் முடங்கியிருந்தது. இந்த நிலையில் ஆணையத்தின் தலைவராக குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராக நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர்கள் 2 பேரும் ஜவகர் நகர் நகர, கிராம அமைப்பு துறை அலுவலக வளாகத்தில் உள்ள ஆணையத்தின் அலுவ லகத்தில் பொறுப்பேற்றனர். இதனால் ஆணையத்தின் நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்துள்ளது. மனை, வீடு வாங்குவது, விற்பதில் விதிமீறல் இருந்தால் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.

    ஆணையம் விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்கும். தீர்ப்பு திருப்தி தராவிட்டால் சென்னை ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்பாயத்தை அணுகலாம். 500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள இடத்தை விற்பனை நோக்கில் மாற்ற ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகளுக்கு மேல் கட்டவும் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த பின் சாலை, பூங்கா உட்பட பொது பயன்பாடு இடங்களை ரியல்எஸ்டேட் உரிமையாளர்கள் மாற்ற முடியாது. உறுதிமொழி அளித்தபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட பல விதிமுறைகள் பொதுமக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×