search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அய்யனார் கோவில் வளாகத்தில் 200 பனை விதைகள் நடப்பட்டது
    X

    திருபுவனை சன்னியாசிக்குப்பம் அய்யனார் கோவில் வளாகத்தில் பனைமர விதைகள் நடப்பட்டது.

    அய்யனார் கோவில் வளாகத்தில் 200 பனை விதைகள் நடப்பட்டது

    • பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கோவில் வளாகத்தில் 200 பனைமர விதைகள் நடப்பட்டது.

    புதுச்சேரி:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இளைஞர் அணி துணை செயளாலர் சங்கீத் இரணியன் தலைமையில் கலித்தீர்தாள்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பா.ம.க அமைப்பாளர்கணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் நாகப்பன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் ராஜசேகர், இளம் பெண்கள் சங்க செயலாளர் எபேல் இளவரசன், மங்கலம் தொகுதி தலைவர் வெள்ளையப்பன், மணவெளி தொகுதி பொறுப்பா ளர்கள் சேதுபதி, அருள், சந்தோஷ்குமார், திருபுவனை தொகுதி பொறுப்பாளர்கள் சரவணன், நந்தகோபால், கேசவன், சுரேஷ், இளைஞர் அணி கலைச்செல்வன், வாசு, ஊடக பிரிவு கஜேந்திரன், விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து சன்யாசிகுப்பத்தில் உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் 200 பனைமர விதைகள் நடப்பட்டது.

    Next Story
    ×