என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electronic waste"

    • பிளாஸ்டிக், மின்னணு கழிவுகளை குறைக்க ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
    • யோசனையில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை அறிவியல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் யாசம்லட்சுமி நாராயணரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு குழுமம் சார்பில் வாழ்க்கை திட்டத்தின் கீழ் நிரலோட்ட யோசனை நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 30-ந் தேதி முதல் செப்டம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், மின்னணு கழிவுகளை குறைக்க ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

    இதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் வரும் 21-ந் தேதி முதல் இணையதளத்தில் பதியலாம். நிரலோட்ட யோசனையில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

    ஆகஸ்ட் 30-ந் தேதி துறை இணையதளத்தில் காலை 9 மணிக்கு 2 தீம்களுக்கான தலா ஒரு பிரச்சினை அறிக்கை வெளியிடப்படும்.

    மாணவர்கள் அதுதொடர்பான யோசனைகளை செப்டம்பர் 4-ந் தேதி மாலை 3.30 மணிக்குள் துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். சிறந்த யோசனைகளுக்கு ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். பதிவுகளை 27-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×